Just In
- 4 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வரவிற்கு மேல் அதிகமாக செலவு செய்ய நேரிடும்..
- 14 hrs ago
பிட்சா தோசை
- 14 hrs ago
எலுமிச்சை ஜூஸை இந்த 5 வழிகளில் யூஸ் பண்ணா...உங்க முடி கருகருனு அடர்த்தியா வளருமாம் தெரியுமா?
- 14 hrs ago
எந்த இரத்த வகை உள்ளவர்களுக்கு மாரடைப்பு &இதய செயலிழப்பு ஏற்படும் அபாயம் அதிகம் தெரியுமா?
Don't Miss
- News
பீகாரில் லாலு பிரசாத் யாதவ் வீட்டில் சிபிஐ சோதனை - 15 இடங்களில் தொடரும் சோதனையால் பரபரப்பு
- Finance
இன்றைய தங்கம் விலை எப்படியிருக்கு.. சென்னையில் என்ன நிலவரம்?
- Sports
மோடி மைதானத்திற்கு கிடைத்தது மோட்சம்.. ஒரு வழியாக ஆசை நிறைவேற போகுது.. பிசிசிஐ தந்த அப்பேட்
- Movies
ஜூனியர் என்டிஆர் பிறந்தநாள் ஸ்பெஷல்.. அனிருத் பண்ண தரமான சம்பவம்.. NTR 30 அறிவிப்பு வந்துடுச்சு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் சாதனம் வாங்க சரியான நேரம்- அமேசானில் வழங்கப்படும் அதிரடி தள்ளுபடி!
- Automobiles
டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு சவால்... இந்தியாவில் பலரும் காத்து கிடந்த கார் அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இன்னைக்கு இந்த 2 ராசிக்காரங்க சனி பகவானை கண்டிப்பா வணங்கணும்.. இல்லன்னா கஷ்டம் குறையவே குறையாது...
சனி பகவான் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். அதோடு சனி பகவான் ஒருவரது நல்ல மற்றும் கெட்ட செயல்களுக்கு ஏற்ற பலன்களை வழங்குகிறார். எனவே சனி பகவானின் பெயரைக் கேட்டாலே பலரும் அச்சப்படுகிறார்கள். புராணங்களின் படி, சனி பகவானின் கோபத்தில் இருந்து சிவபெருமான் கூட தப்ப முடியாது. அந்த அளவில் சனி பகவான் பாரபட்சமின்றி நடந்து கொள்ளக்கூடியவர். ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஏழரை சனி மற்றும் சனி தையா உள்ளவர்கள் மிகுந்த வேதனையை சந்திப்பதாக கூறப்படுகிறது.
ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான் சாதகமாக இல்லாவிட்டால் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பது ஐதீகம். சனி பகவான் ஒருவருக்கு கெட்ட பலன்களைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டால், பாதிக்கப்பட்டவர் சனிக்கிழமையன்று சனி பகவானை தவறாமல் வழிபட அறிவுறுத்தப்படுகிறது. இந்த மாதம் மே 14 ஆம் தேதி சனிக்கிழமையான இன்று ஒரு யோகம் உருவாகிறது. இந்த யோகம் உருவாகும் இந்நாளில் சனி பகவானை எந்த ராசிக்காரர்கள் வழிபட வேண்டும் என்பதை இப்போது காண்போம்.

சனி பகவான் வழிபாடு
இந்து நாட்காட்டியின் படி, 2022 மே 14 ஆம் தேதி சித்திரை மாத திரயோதசி மற்றும் இந்த நாள் சனிக்கிழமை மற்றும் சித்திரை நட்சத்திரம். இந்த நாளில் காலை 06.13 மணிக்கு கன்னி ராசியில் பயணிக்கும் சந்திரன் துலாம் ராசிக்குள் செல்கிறார். மேலும் இந்நாளில் சனி பிரதோஷ விரதமும் மேற்கொள்ளப்படுகிறது.

சனி பகவானை வழிபட வேண்டிய 2 ராசிக்காரர்கள்
இந்து நாட்காட்டியின் படி, மே 14 ஆம் தேதி சனிக்கிழமை அன்று சித்தி யோகம் உருவாகிறது. சாஸ்திரங்களின் படி, ஒருவர் சித்தி யோகத்தில் எந்த வேலையை செய்தாலும், அதில் வெற்றி கிடைக்கும். இந்த யோகம் புனிதமானதாக கருதப்படுகிறது. இந்த யோகமானது ஒருவரின் விருப்பங்களை நிறைவேற்றுவதாக நம்பப்படுகிறது. இந்த யோகம் சனிக்கிழமையில் உருவாவதால், சனி பகவானை வழிபடுவதன் மூலம், சனியின் மோசமான தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.
இப்போது மே 14 ஆம் தேதி சனிக்கிழமை அன்று எந்த ராசிக்காரர்கள் சனி பகவானை வழிபட வேண்டும் என்பதைக் காண்போம்.

கடகம்
2022 ஆம் ஆண்டில் ஏப்ரல் 29 ஆம் தேதி சனி பகவான் தனது ராசியை மாற்றினார். இந்த ராசி மாற்றத்தின் போது, கடக ராசிக்காரர்களுக்கு சனி தையா தொடங்கியுள்ளது. இந்த சனி தையாவால் கடக ராசிக்காரர்கள் திருமண வாழ்க்கை, ஆரோக்கியம் மற்றும் பணம் போன்ற விஷயங்களில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த காலகட்டத்தில் நிறைய பணத்தை செலவிட வேண்டியிருக்கும். மொத்தத்தில் இந்த காலம் உங்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும். இதைத் தவிர்க்க வேண்டுமானால், இன்று சனி பகவானை தவறாமல் வழிபட வேண்டும்.

விருச்சிகம்
2022 ஏப்ரல் 29 ஆம் தேதி சனி பகவானின் ராசி மாற்றத்தால் விருச்சிக ராசிக்காரர்களும் சனி தையாவால் அவதிப்படுகிறார்கள். விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த சனி தையாவால் இந்த ராசிக்காரர்களின் கோபம் அதிகரிக்கும். தவறான முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது. நீங்கள் போடும் எந்த திட்டமும் தோல்வியடையும். பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோககியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். சர்ச்சைகளைத் தவிர்த்திடுங்கள். சனி பகவானின் மோசமான தாக்கத்தைத் தவிர்க்க வேண்டுமானால், விருச்சிக ராசிக்காரர்கள் நேர்மறை எண்ணத்துடன் சனி பகவானை சனிக்கிழமைகளில் வழிபட வேண்டும்.