For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகாசிவராத்திரி அன்று இதில் ஒன்றை வைத்து சிவனை வழிபடுவது உங்கள் அனைத்து கஷ்டங்களையும் போக்குமாம்...!

மகாசிவராத்திரி மிக அருகில் வந்துவிட்டது. சிவபெருமானை வழிபடுவதற்கு அனைவரும் தயாராகி விட்டனர். இந்த சிறப்பு நாளில் சிவபெருமானை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும்.

|

மகாசிவராத்திரி மிக அருகில் வந்துவிட்டது. சிவபெருமானை வழிபடுவதற்கு அனைவரும் தயாராகி விட்டனர். இந்த சிறப்பு நாளில் சிவபெருமானை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். மகாசிவராத்திரி விரதம், சிவனுக்கு படைக்கப்படும் பொருட்கள் என இந்த நாளில் நீங்கள் செய்யும் அனைத்துமே முக்கியத்துவம் வாய்ந்தது.

Things To Offer Lord Shiva On Mahashivratri

இந்த நிலையில் நீங்கள் சிவபெருமானுக்கு வைத்து வழிபடும் சில பொருட்கள் அவரின் அருளை உங்களுக்கு முழுமையாக பெற்றுத்தரும். இந்த மகாசிவராத்திரியில் நீங்கள் சிவனுக்கு என்னென்ன விஷயங்களை வைத்து வழிபடுவது நல்லது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அரிசி

அரிசி

பதப்படுத்தப்படாத வெள்ளை அரிசியை சிவனுக்கு வைத்து வழிபடுவது அவரைப் பிரியப்படுத்தும் என்றும் உங்கள் குடும்பத்திற்கு ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

எள்

எள்

எள் விதைகள் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த பொருட்களில் ஒன்றாகும். மகாசிவராத்திரி அன்று இந்த விதைகளை வைத்து சிவபெருமானை வழிபடுவது உங்கள் குடும்பத்திற்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.

கோதுமை

கோதுமை

கோதுமை இன்று இந்திய வீடுகளில் அதிகம் நுகரப்படும் தானியங்களில் ஒன்றாகும். மகாசிவராத்திரி அன்று சிவனுக்கு கோதுமை வைத்து வழிபடுவது உங்கள் வீட்டில் எப்போதும் வறுமையை நுழையாமல் தடுக்கும் என்று கூறப்படுகிறது.

MOST READ: உங்க ராசிப்படி பெற்றோராக நீங்கள் செய்யப்போகும் தவறு என்ன தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க...!

குளிர்ந்த பால்

குளிர்ந்த பால்

சிவனுக்கு சர்க்கரையுடன் கலந்த குளிர்ந்த பாலை வழங்குவது ஒரு நபரை புத்திசாலித்தனமாக்குகிறது மற்றும் நினைவகத்தை மேம்படுத்துகிறது என்று கூறப்படுகிறது. நீங்கள் பாலை கொதிக்க வைக்காமல் குளிர்ச்சியாக வழங்குவதை உறுதி செய்யுங்கள்.

கரும்புச்சாறு

கரும்புச்சாறு

மகாசிவராத்திரி அன்று கரும்புச்சாறு வைத்து ஈசனை வழிபடுவது சிறப்பானது. கரும்புச்சாறில் வேறு எதுவும் சேர்க்காமல் இருப்பது நல்லது. பழைய கரும்புச்சாறை வைத்து வழிபடாமல் இருக்க வேண்டியது அவசியம்.

தேன்

தேன்

உங்கள் குடும்பத்தில் யாராவது காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்தால், தூய்மையான, நீர்த்த தேனுடன் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்வது அவரை முழுமையாக குணப்படுத்தும்.

வெண்ணெய்

வெண்ணெய்

பசுவின் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட சுத்தமான வெண்ணெய் அல்லது நெய்யை வழங்குவது உடலில் உள்ள அனைத்து பலவீனங்களையும் குணப்படுத்தும் என்று கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டவர்கள் இதைச் செய்ய வேண்டும்.

MOST READ: கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசியில் எந்த தடுப்பூசி பாதுகாப்பானது? யாருக்கெல்லாம் தடுப்பூசி ஆபத்தானது?

மல்லிகை இலைகள்

மல்லிகை இலைகள்

மல்லிகை மலர் மட்டுமல்ல, மல்லிகை இலைகளும் சிவபெருமானுக்கு பிடித்தது கூறப்படுகிறது. இந்த மகாவராத்திரிக்கு சிவபெருமானுக்கு சில மல்லிகை இலைகளை வழங்குங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things To Offer Lord Shiva On Mahashivratri

Here is the list of things to offer lord shiva on mahashivratri.
Story first published: Saturday, March 6, 2021, 14:23 [IST]
Desktop Bottom Promotion