For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அவ்வையார் கோவில்களில் ஆண்களுக்கு அனுமதி இல்லை தெரியுமா?

இந்தியாவில் சில கோவில்களில் பெண்கள் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறதோ, அதே விதிமுறைகள் ஆண்கள் விஷயத்திலும் பின்பற்றப்படுகிறது என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. சபரிமலையில் எப்படி பெண்களுக்கு அனுமத

|

கன்னி பகவதி அம்மன், சுசீந்தரம் தானுமாலய சுவாமி ஆலயத்தில் எழுந்தருளியுள்ள இறைவனை கணவராக வேண்டி, கன்னியாகுமரியில் ஒற்றைக் காலில் தவமிருந்தார். ஆனால், திருமணம் நடைபெறவேண்டிய தருணத்தில் ஈசன் வர தாமதமானதால், கோபம் கொண்ட கன்னி பகவதி, அங்கிருந்த அனைத்து பொருட்களையும் அழித்துவிட்டு, தானும் அந்த இடத்திலேயே கற்சிலையாக நின்றுவிட்டார் என்று தலபுராணம் கூறுகின்றன. கன்னி பகவதி அம்மன் சிலையாக நின்ற இடத்தில் தான் தற்போது கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அந்த இடத்தில் ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

These Temples Are Not Allowed For Men’s for Darshanam

நம்முடைய முன்னோர்கள் பக்திக்கு எந்த அளவு முக்கியத்துவம் அளித்து வந்தார்களோ, அதே அளவு முக்கியத்துவத்தை சடங்குகள், சம்பிரதாயங்கள், பண்டைய காலம் தொட்டு பின்பற்றி வரும் வழி வழியான நடைமுறைகளுக்கும் அளித்து வந்தனர், வருகின்றனர். இது இனிமேலும் தொடரும் என்பது நிச்சயம்.

MOST READ: ஆண்கள் நுழைய அனுமதியில்லாத கோவில்கள் பற்றி தெரியுமா?

இந்தியாவில் சில கோவில்களில் பெண்கள் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறதோ, அதே விதிமுறைகள் ஆண்கள் விஷயத்திலும் பின்பற்றப்படுகிறது என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. சபரிமலையில் எப்படி பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறதோ, அதே போல், கேரளாவின் ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயம், சக்குளத்துக்காவு பகவதி அம்மன் ஆலயம் ஆகிய கோவில்களில் ஆண்கள் நுழைய அனுமதி கிடையாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிராமப்புற பூஜை முறைகள்

கிராமப்புற பூஜை முறைகள்

தமிழ்நாட்டிலும் கிராமப்புறங்களில் உள்ள கோவில்களில் வெளியூர் நபர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சில கோவில்களில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கிராமப்புற கோவில்களும் உள்ளன. அதேபோல் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே கலந்துகொண்டு பூஜை செய்யும் அவ்வையர் விரதம் என்ற பூஜை முறையும் இன்றும் தமிழக கிராமப்புறங்களில் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

புஷ்கர் பிரம்மா கோவில், ராஜஸ்தான்

புஷ்கர் பிரம்மா கோவில், ராஜஸ்தான்

முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பங்கேற்று வழிபடும் கோவில் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் மாவட்டதில் உள்ள புகழ்பெற்ற புஷ்கர் பிரம்மா கோவில். ஆக்கல், அளித்தல், அழித்தல் என மூன்று தொழில்களை மேற்கொள்ளும் மூன்று கடவுள்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று கடவுள்களில், விஷ்ணு மற்றும் சிவனுக்கு மட்டுமே இந்தியாவில் கோவில்கள் உள்ளன.

14ஆம் நூற்றாண்டு கோவில்

14ஆம் நூற்றாண்டு கோவில்

ஆக்கல் என்னும் படைப்பு தொழிலை செய்யும் பிரம்மாவுக்கு இந்தியாவில், விரல் விட்டு எண்ணும் அளவிலேயே கோவில்கள் அமையப்பெற்றிருக்கும். அவற்றில் ஒன்று தான் இந்த புஷ்கர் பிரம்மா கோவில் ஆகும். புகழ்பெற்ற புஷ்கர் நதிக்கரையின் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவில் 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவிலாகும்.

தல புராணம்

தல புராணம்

இந்தியாவில் உள்ள மூன்று பிரம்மா கோவிலில் இதுவும் ஒன்றாகும். இந்தக் கோவிலில் திருமணமான ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. திருமணமான ஆண்கள் இந்த கோவிலில் நுழைந்தால் தோஷம் ஏற்படும் என்பதால் ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு காரணமாக புராண கதை ஒன்றை தலபுராணமாக கூறகின்றனர்.

சரஸ்வதி தேவி எஸ்கேப்

சரஸ்வதி தேவி எஸ்கேப்

அதாவது, பிரம்மா தன்னுடைய துணைவியான சரஸ்வதி தேவியுடன், இந்த புஷ்கர் நதிக்கரையில் யாகம் நடத்த திட்டமிட்டார். யாகம் முடியும் தருவாயில், ஆஹூதி தரவேண்டிய நேரத்தில் சரஸ்வதி தேவி அங்கு இல்லை. அதனால் யாகம் தடைபடக்கூடாது என்று நினைத்து, அங்கிருந்த குஜ்ஜர் இனத்தை சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு யாகத்தை நிறைவு செய்தார்.

சரஸ்வதி சாபம்

சரஸ்வதி சாபம்

தாமதமாக வந்த சரஸ்வதி தேவி நிலைமையை உணர்ந்து கோபமுற்று, இனிமேல் பிரம்மனுக்கு வேறெங்கும் வழிபாடு கூடாது என்றும், திருமணமான ஆண்கள் இங்கு வந்து வழிபட்டால், தோஷம் உண்டாகும் என்றும் சாபமிட்டார். ஆனால் உடன் இருந்த காயத்ரி, பிரம்மாவுக்கு புஷ்கரை தவிர வேறெங்கும் வழிபாடு இருக்காது என்றும், புஷ்கருக்கு வந்து வழிபடும் ஆண்களுக்கு எந்த தோஷமும் ஏற்படாது என்று சரஸ்வதி கொடுத்த சாபத்தை மாற்றியமைத்தார் என்று தலபுராணம் சொல்கிறது.

பகவதி அம்மன் ஆலயம், கன்னியாகுமரி

பகவதி அம்மன் ஆலயம், கன்னியாகுமரி

நீலத்திரைக்கடத் ஓரத்திலே நின்று

நித்தம் தவம் செய்யும் குமரி அன்னை

என்று கன்னியாகுமரியில் வீற்றிருக்கும் கன்னி பகவதி அம்மனைப் பற்றி மகாகவி பாரதி போற்றி பாடியுள்ளார்.

தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் அமைந்துள்ளது கன்னி பகவதி அம்மன் ஆலயம். இந்த கோவிலுக்கு வரும் ஆண்கள், நுழைவு வாயில் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். திருமணமான ஆண்களை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.

பார்வதி தேவி தியானம்

பார்வதி தேவி தியானம்

ஆண்களை அனுமதிக்காததற்கு காரணம், சிவபெருமானை தன்னுடைய கணவராக அடைய வேண்டி, அன்னை பார்வதி தேவி இந்த இடத்தில் தான் தியானம் செய்துள்ளார். பார்வதி தேவி தியானம் செய்த இடத்தில் தான் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. அதனால் தான் ஆண்கள் இக்கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. பெண்கள் மட்டுமே இந்தக் கோவிலில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

பரிவேட்டை

பரிவேட்டை

இந்த கோவிலில் நடைபெறும் பரிவேட்டை திருவிழா புகழ்பெற்ற திருவிழாவாகும். இந்த திருவிழாவுக்கான காரணமாக ஒரு தலபுராணம் சொல்லப்பட்டு வருகிறது. முன்னொரு காலத்தில் பானாசுரன் என்ற அரக்கன் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறத்தி வந்துள்ளான். தான் ஒரு கன்னியால் தான் மரணமடைவோம் என்தை மறந்து தேவர்களை கொடுமைப்படுத்தி வந்துள்ளான்.

பகவதியை கடத்த ப்ளான்

பகவதியை கடத்த ப்ளான்

இதை சிவபெருமானிடம் முறையிட்ட தேவர்கள் தங்களை காத்தருள வேண்டினர். தேவர்களுக்கு ஆறுதல் அளித்த சிவபெருமான், தன்னுடைய சக்தியைக் கொண்டு கன்னி பகவதியை உருவாக்கினார். கன்னி பகவதியும் பானாசுரனை அழிக்க புறப்பட்டார். ஆனால் கன்னி பகவதியின் அழகில் மயங்கிய பானாசுரன், கன்னி பகவதியை கவர்ந்து செல்ல முடிவெடுத்தான். அந்த நேரத்தித்தில் தன்னுடைய முடிவு ஒரு கன்னியால் தான் ஏற்படும் என்பதை மறந்து சண்டைக்கு தயாரானான்.

கருவறை படைப்பு சிற்பம்

கருவறை படைப்பு சிற்பம்

கன்னி பகவதி தேவியாக அவதாரமெடுத்த அன்னை பார்வதி தேவி, தன் வாளை உருவி அரக்கன் பானாசுரனுடன் போரிட்டு அவனுடைய தலையை துண்டித்தார். இந்த நிகழ்வை நவராத்திரி திருவிழாவின் போது நடத்தப்படும் பரிவேட்டை நிகழ்ச்சியில் சிறப்பாக நடத்துகின்றனர். கன்னி பகவதி அம்மன் உருவிய வாளுடன் போரிடும் காட்சி, கோவிலின் கருவறையின் கிழக்கு பக்க சுவரில் படைப்பு சிற்பமாக செதுக்கி வைத்துள்ளனர்.

பகவதி தவம்

பகவதி தவம்

கன்னி பகவதி தன் குறிக்கோள் நிறைவேறியதை அடுத்து, சுசீந்தரம் தானுமாலய சுவாமி ஆலயத்தில் எழுந்தருளியுள்ள இறைவனை கணவராக வேண்டி, கன்னியாகுமரியில் ஒற்றைக் காலில் தவமிருந்தார். எம்பெருமான் ஈசனும் கன்னி பகவதியை மணம் புரிய விருப்பம் கொண்டார். திருணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வந்தன.

தாமதமாக வந்த சிவபெருமான்

தாமதமாக வந்த சிவபெருமான்

திருமணம் நடைபெறவேண்டிய தருணத்தில் ஈசன் வர தாமதமானதால், கோபம் கொண்ட கன்னி பகவதி, அங்கிருந்த அனைத்து பொருட்களையும் அழித்துவிட்டு, தானும் அந்த இடத்திலேயே கற்சிலையாக நின்றுவிட்டார் என்று தலபுராணம் கூறுகின்றன. கன்னி பகவதி அம்மன் சிலையாக நின்ற இடத்தில் தான் தற்போது கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அந்த இடத்தில் ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

மூக்குத்தியின் பிரகாசம்

மூக்குத்தியின் பிரகாசம்

இங்கு அமைந்துள்ள கன்னி பகவதி அம்மன் ஆலயம் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். மேலும் பகவதி அம்மன் அணிந்திருக்கும் மூக்குத்தி புகழ்பெற்றதாகும். இந்த மூக்குத்தியின் பிரகாசமான ஒளியை கலங்கரை விளக்கின் ஒளி என்று தவறாக நினைத்து கப்பல்கள் கரையில் மோதி விபத்துக்குள்ளானதாம். அதன் காரணமாகவே, இந்த கோவிலின் கடற்கரையை நோக்கியுள்ள முன் கோபுர வாசல் மூடப்பட்டு, அதற்கு பதிலாக வடக்கு பக்கத்தில் வாசல் வைக்கப்பட்டுள்ளது என்று சொல்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

These Temples Are Not Allowed For Men’s for Darshanam

Kanni Shri Bhagavathy was majestic for wished to marry the Lord Siva. But as the wedding was about to take place. However, as the marriage was delayed by Lord Shiva, the enraged Bhagvathy Amman destroyed all the items and left the place, says temple history.
Story first published: Friday, November 22, 2019, 15:36 [IST]
Desktop Bottom Promotion