For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாணக்கியரின் கூற்றுப்படி இந்த மூன்றுபேருடன் தெரியாமல் கூட நட்பு வைத்துக்கொள்ளக் கூடாதாம்...!

தனது அரசியல் நூலான அர்த்தசாஸ்திரத்தில் எந்தவொரு தனிநபரின் உண்மையான குணத்தையும் கண்டறியும் தந்திரத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

|

பண்டைய இந்தியாவின் மிக முக்கிய அறிஞர்களில் ஒருவராக கருதப்படுபவர் சாணக்கியர். தத்துவஞானி, ஆசிரியர் மற்றும் பொருளாதார நிபுணர் என சாணக்கியருக்கு பல முகங்கள் உள்ளது. தான் தொடர்பான அனைத்து துறையிலும் நிபுணராக விளங்கினார் சாணக்கியர். அவரது நூல்களான அர்த்தசாஸ்திரமும், சாணக்கிய நீதியும் இன்றும் இந்தியாவின் முக்கியமான நூல்களாக உள்ளது.

Theory of Chanakya To Find the Real Friends

தனது அரசியல் நூலான அர்த்தசாஸ்திரத்தில் எந்தவொரு தனிநபரின் உண்மையான குணத்தையும் கண்டறியும் தந்திரத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மையான நண்பரையும், போலி நண்பரையும் கண்டறியும் 4 வழிகளை சாணக்கியர் தனது நூலில் கூறியுள்ளார். அது என்னென்ன வழிகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 உண்மையான சுயரூபம்

உண்மையான சுயரூபம்

பெரும்பாலும் மக்கள் சமூகத்தின் முன் எப்படி தங்களை வெளிப்படுத்திக்கொள்கிறார்கள் என்பது அவர்களின் சாணக்கியரின் கூற்றுப்படி , ஒரு நபர் தனது உண்மையான சுயத்தை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்கள் அரிதாகவே உள்ளன. மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் இரண்டு முகங்கள் உள்ளது. ஒன்று அவர்களின் உண்மையான முகம் மற்றொன்று காலப்போக்கில் அவர்கள் அடையக்கூடிய ஒன்று.

நம்பிக்கை

நம்பிக்கை

சில ஞானிகள் நட்பை ஒருபோதும் தீர்மானிக்காதீர்கள் என்று கூறியிருக்கிருக்கிறார்கள். ஆனால் சாணக்கியர் மனிதர்கள் ஒருபோதும் ஒருவருக்கொருவர் குருட்டு நம்பிக்கையைவளர்த்து கொள்ளக்கூடாது என்று கூறியுள்ளார். யார் உங்களிடம் உண்மையாக இருக்கிறார்கள், யார் வேஷம் போடுகிறார்கள் என்பதை சில வழிகளின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

முதல் வழி

முதல் வழி

உங்கள் நண்பருக்கு தியாக உணர்வு இருக்கிறதா என்பதை நன்கு கவனியுங்கள். அவர் உங்களுக்காக இதை செய்வாரா அல்லது தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்வாரா என்பதை நினைத்துப் பாருங்கள். சாணக்கியரின் கூற்றுப்படி இந்த குணம் இல்லாதவர்கள் உணர்ச்சியற்றவராகவும், ஈகோ நிறைந்தவராகவும் இருக்கிறார் என்று கூறுகிறார். இவர்களை ஒருபோதும் நம்பக்கூடாது, இவர்கள் தங்களின் நலனைத்தான் எப்போதும் உயர்ந்தாக எண்ணுவார்கள். தங்கள் அன்புக்குரியவர்களுக்காக தியாகம் செய்யும் எண்ணம் கொண்டவர்கள் உள்ளார்ந்த அன்பு கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுடன் இருக்கும் வாய்ப்பை ஒருபோதும் தவறவிடக்கூடாது. மேலும் இவர்கள் மன்னிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இரண்டாவது வழி

இரண்டாவது வழி

யாரைப்பற்றியும் ஆரம்ப காலத்திலேயே ஒரு முடிவிற்கு வந்துவிடுவது நல்லதல்ல. ஒரு நபரின் உண்மையான தன்மை இறுதியில் வெளிவருகிறது, எனவே பொறுமையாக இருங்கள் என்று சாணக்யா நமக்கு சொல்கிறார். முதல் சந்திப்பில் ஒருவரின் சிறப்பியல்புகளை ஒருவர் வெறுமனே முடிவுக்கு கொண்டு வர முடியாது என்பது உண்மைதான். நீங்கள் அவர்களுடன் சிறிது நேரம் செலவழித்தவுடன், அவர்கள் நிச்சயமாக தங்கள் உண்மையான குணத்தை வெளிப்படுத்துவார்கள். இது அவர்களின் சுயத்தின் வெளிப்பாடாக இருக்கும். நல்லதை கெட்டவர்களிடமிருந்து எவ்வாறு பிரிக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்துகொள்வதற்கான நேரம் இது. அவர்களின் நடத்தை முறை சீராக இருக்கும், மேலும் அவை எந்தப் பக்கத்திற்குச் செல்கின்றன என்பதை இது தீர்மானிக்கும்.

MOST READ:மனைவிகளை மாற்றிகொள்வது முதல் பிறப்புறுப்பில் பூட்டு போடுவது வரை உலகின் படுமோசமான பாலியல் சடங்குகள்..

 மூன்றாவது வழி

மூன்றாவது வழி

தங்களின் நேரத்தை உங்களுக்காக செலவழிப்பவர்களை கவனியுங்கள். கவனம் செலுத்தும் நபரை பகுப்பாய்வு செய்ய இந்த நபர்கள் மறைமுகமாக உங்களுக்கு உதவுவார்கள். அந்த நபர் தனது நெருங்கிய குழுவில் எவ்வளவு நன்றாக ஏற்றுக் கொள்ளப்படுகிறார், அவர் இல்லாத நிலையில் அவர்கள் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்பதும் ஒருவரின் உண்மையான பண்புகளை அறிய உதவுகிறது. நல்ல செயல்களுக்காக அறியப்பட்ட ஒரு நபர் எப்போதும் நேசிக்கப்படுவார், அவர்களின் முதுகுக்குப் பின்னால் நன்றாக பேசப்படுவார். மோசமான நடத்தைக் கொண்ட ஒரு நபர் அவரைச் சுற்றியுள்ள பலரைக் கொண்டிருக்க மாட்டார். இது தனிநபரை நோக்கி சமூகம் எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பது உங்கள் நிலைப்பாட்டை உருவாக்க உதவும்.

நான்காவது வழி

நான்காவது வழி

இந்த கடைசி கட்டத்தில் கடுமையாக இருக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். இந்த மட்டத்தில் ஒரு நபர் தனது நம்பிக்கைகளுக்காக கவனிக்கப்பட வேண்டும் என்று சாணக்யா விளக்குகிறார். தங்கள் நலனுக்காக தேவையற்ற பொய்களைப் பேசுவதைத் தவிர்க்கும் எவரும், அவரது தோற்றம் மற்றும் அறிவைப் பற்றி ஒருபோதும் பெருமைப்படாதவர், மற்றவரின் கருத்தை கவனித்து மதிக்கும் ஒருவர் உண்மையில் கிடைப்பது அரிது. யாருடனெல்லாம் எந்தவித உறவும் வைத்துக்கொள்ள கூடாது என்று சாணக்கியர் சிலவற்றைக் கூறியுள்ளார்.

பேராசை கொண்டவர்

பேராசை கொண்டவர்

பேராசைக் கொண்டவர்களுடன் ஒருபோதும் நெருங்கிய உறவில் இருக்க வேண்டாம். ஏனெனில் இவர்களை அதிக பணம் கொடுப்பதன் மூலம் எளிதில் கட்டுப்படுத்த முடியும். இவர்கள் எப்போது வேண்டுமென்றாலும் உங்களுக்கு எதிரானவராக மாறலாம்.

ஆணவம் கொண்டவர்கள்

ஆணவம் கொண்டவர்கள்

பேராசைக் கொண்டவர்களை போலவே ஆணவம் கொண்டவர்களையும் எளிதில் கட்டுப்படுத்தி விடலாம். கீழ்ப்படிதல் மற்றும் அமைதியாக இருப்பது போல நடிப்பதன் மூலம் இவர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம்.

MOST READ:இந்த நோய் உள்ளவங்க செத்துப்போய்ட்டதா நினைச்சுகிட்டே வாழ்வாங்களாம்... ஆபத்தான உளவியல் கோளாறுகள்...!

 முட்டாள்

முட்டாள்

ஒரு முட்டாள் நபரை ஒருவர் கட்டுப்படுத்தவது என்பது மிகவும் எளிதானது. அவர்கள் என்ன கூறினாலும் அப்படியே கீழ்ப்படிவது போல நடித்தால் போதும் இவர்களை வழிக்கு கொண்டுவந்து விடலாம். தன்னை சரியானவர் என்று ஒப்புக்கொள்பவர்களுக்கு முட்டாள்கள் அவர்களுக்கேத் தெரியாமல் அடிமையாகி விடுவார்கள். இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Theory of Chanakya To Find the Real Friends

Find out Chanakya's four step theory to distinguish real friends from fake ones.
Story first published: Monday, February 17, 2020, 16:24 [IST]
Desktop Bottom Promotion