For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகையே அழகால் மயக்கிய கிளியோபாட்ராவின் மரணத்தில் இருக்கும் மர்மங்கள்... அதிர்ச்சியளிக்கும் வரலாறு..!

கிளியோபாட்ரா எகிப்தை ஆண்டிருந்தாலும் அவர் பெயர் உலகம் முழுவதும் பிரபலமானது. அதற்கு அவரின் அழகு ஒரு காரணமாக இருந்தாலும் அதையும் தாண்டி பல காரணங்கள் உள்ளது.

|

இந்த உலகம் இதுவரை எண்ணற்ற மன்னர்களையும், அரசிகளையும் சந்தித்து உள்ளது. ஆனால் அவர்கள் அனைவருமே வரலாற்றில் இடம் பிடித்தார்களா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். வெகுசிலர் மட்டுமே தங்களின் அடையாளத்தை உலகம் முழுவதும் பதித்துள்ளனர். அப்படி இன்றும் வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு அரசி என்றால் அது கிளியோபாட்ராதான்.

The Mysterious Death of Cleopatra

கிளியோபாட்ரா எகிப்தை ஆண்டிருந்தாலும் அவர் பெயர் உலகம் முழுவதும் பிரபலமானது. அதற்கு அவரின் அழகு ஒரு காரணமாக இருந்தாலும் அதையும் தாண்டி பல காரணங்கள் உள்ளது. எண்ணற்ற மர்மங்கள் நிறைந்த கிளியோபாட்ராவின் வாழ்க்கையில் இறுதியில் அவரின் மரணமும் மர்மமாகவே மாறியது துரதிர்ஷ்டவசமானது. இந்த பதிவில் கிளியோபாட்ரா பற்றிய சில மர்மங்களைப் பற்றி தெரிந்து கொள்ளாலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சகோதரர்களுடன் திருமணம்

சகோதரர்களுடன் திருமணம்

கிளியோபாட்ரா தனது இரண்டு சகோதரர்களை மணந்தார். தனது 18 வது வயதில் அரியணை ஏறிய கிளியோபாட்ரா அதற்காக தன்னை விட 10 வயது இளைய சகோதரனான டோலமி VIII ஐ மணந்தார். தனது வம்ச இரத்தத்தை தூய்மையாக வைத்திருக்க அவர்களது குடும்பத்தினர் குடும்பத்திற்குள் திருமணம் செய்து கொள்ள முயன்றனர். இதைச் செய்வது மரபணு கோளாறுகளை ஏற்படுத்துகிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. தனது முதல் கணவர் இறந்த பிறகு தன்னுடைய மற்றொரு சகோதரரை மணந்தார். ஆனால் அவர்கள் இருவரையும் கிளியோபாட்ராதான் கொலை செய்தார் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

காதலர்கள்

காதலர்கள்

கிளியோபாட்ரா ஜூலியஸ் சீசர் மற்றும் மார்க் ஆன்டனியுடன் காதல் இருந்தது. இந்த உறவு அரசியல் காரணங்களுக்காக என்று கூறப்பட்டாலும் அதையும் தாண்டி அவர்களுக்குள் உறவு இருந்தது. ஜூலியஸ் சீசர் கிளியோபாட்ராவால் செய்யப்பட்ட ஒரு சிலையை தன்னுடனேயே வைத்திருந்தார். ஜூலியஸ் சீசர் கிளியோபாட்ராவை காதலித்து, ரோமில் உள்ள வீனஸ் கோவிலில் கிளியோபாட்ராவால் செய்யப்பட்ட சிலையை வைத்திருந்தார்.

குழந்தைகள்

குழந்தைகள்

சகோதரர்கள் மூலம் கிளியோபாட்ராவிற்கு குழந்தைகள் இல்லை, ஆனால் ஜூலியஸ் சீசர் மூலம் சீசரியன் என்ற மகன் இருந்தார், மேலும் அவளுக்கு அலெக்ஸாண்டர் ஹீலியோஸ், கிளியோபாட்ரா செலீன், மற்றும் டோலமி பிலடெல்பஸ் ஆகிய மூன்று குழந்தைகள் மார்க் ஆண்டனி மூலம் பிறந்தனர்.

MOST READ: நீண்ட காலம் செக்ஸ் இல்லாமல் இருந்தால் உங்கள் மூளையில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா?

ஆடம்பர வாழ்க்கை

ஆடம்பர வாழ்க்கை

இராஜ்ஜிய வருமானத்தில் 50 சதவீதத்தை தனது ஆடம்பர வாழ்க்கைக்காகவும், அழகை பராமரிக்கவும் பயன்படுத்தினார். மீதி வருமானத்தை மட்டுமே இராஜ்ஜியத்திற்காக பயன்படுத்தினார். அவரது கண் அலங்காரத்திற்கு ன்கு முன்னணி அடிப்படையிலான பொருட்கள் இருந்தன, அவை கண் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாத்தன. அவர் தனக்கென சொந்த வாசனைத் தொழிற்சாலையை வைத்திருந்தார். அப்பவே ஆட்சியாளர்கள் எல்லாம் இப்படித்தான் இருந்திருக்காங்க.

மொழி ஆளுமை

மொழி ஆளுமை

கிளியோபாட்ரா எகிப்து மற்றும் அரபி மொழிகளில் சரளமாக பேசக்கூடியவராக இருந்தார். இது அந்த காலத்தில் மிகப்பெரிய விஷயமாகும். இது மட்டுமின்றி அவர் வேறு 5 மொழிகளும் அறிந்தவராக இருந்தார். அவரது குடும்பத்தில் எகிப்து மொழி கற்ற முதல் நபர் கிளியோபாட்ராதான். ஏனெனில் அவர் பிறந்தது எகிப்தாக இருந்தாலும் அவரது வம்சாவளியை சேர்ந்தவர்கள் கிரேக்கத்தை அடிப்படையாகக் கொண்டவர்கள்.

கிளியோபாட்ராவின் மரணம்

கிளியோபாட்ராவின் மரணம்

வரலாற்றாசிரியர்களிடையே மிகவும் பிரபலமான விவாதங்களில் ஒன்று கிளியோபாட்ராவின் மரணத்தின் பின்னணியில் உள்ள மர்மமாகும். கிமு 30 இல் கிளியோபாட்ரா தனது 39 வயதில் இறந்தார், ஆனால் அவரது மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மையான காரணங்கள் குறித்து வெவ்வேறு கதைகள் காணப்படுகின்றன. பொதுவாக அவர் ஆஸ்ப் என்று அழைக்கப்படும் கொடிய பாம்பு கடித்ததால் இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

MOST READ: வரலாற்றின் நடுங்க வைக்கும் கொடூரமான மரண தண்டனை முறைகள்... இதயம் வலிமையானவர்கள் மட்டும் படிங்க...!

கிளியோபாட்ராவின் தற்கொலை

கிளியோபாட்ராவின் தற்கொலை

கிளியோபாட்ராவின் தற்கொலை இன்றும் மர்மமானதாகவே இருக்கிறது. கிளியோபாட்ராவின் அரசியல் போட்டியாளராக இருந்த ஆக்டேவியன் தன்னையும் அவரது கணவர் மார்க் ஆண்டனியையும் தங்களை வாளால் குத்தி தற்கொலைக்கு கட்டாயப்படுத்தியதாகவும், இருவருரையும் ஒன்றாக அடக்கம் செய்வதாகக் கூறியதாகவும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆக்டேவியர்கள் அலெக்ஸாண்டரியாக்குள் நுழைந்ததாலும் கிளியோபாட்ரா ஏற்கனவே இறந்ததாகவும் நினைத்த ஆண்டனி தனது வாளால் வயிற்றை கிழித்துக்கொண்டு இறந்தார்.

கிளியோபாட்ராவின் மருத்துவர்

கிளியோபாட்ராவின் மருத்துவர்

கிளியோபாட்ராவின் தனிப்பட்ட மருத்துவராக இருந்த ஒலிம்பஸ் எகிப்திய நாகத்தால் கிளியோபாட்ரா இறந்ததாக கூறப்பட்டதை முற்றிலுமாக மறுத்தார். ஏனெனில் பாம்பு கடித்தால் உயிர் பிரிய சில நிமிடங்களாவது ஆகும், ஆனால் கிளியோபாட்ரா சில நொடிகளில் இறந்தார். கிளியோபாட்ரா எப்போதும் விஷம் ஏற்றப்பட்ட சீப்பை தன்னுடன் வைத்திருப்பார், அதனைக்கொண்டு தனது உடலில் கிழித்துக் கொண்டதால்தான் கிளியோபாட்ரா உடனடியாக இறந்தார் என்று அவர் கூறியுள்ளார். மேலும் அந்த பாம்பு பழக்கூடையில் மட்டுமே இருந்ததாக அவர் கூறினார்.

MOST READ: ஒரே ராசில பிறந்தவங்க திருமணம் செஞ்சா என்ன நடக்கும்?யாரெல்லாம் ஒரே ராசில திருமணம் செய்யலாம் தெரியுமா?

மகனின் மரணம்

மகனின் மரணம்

கிளியோபாட்ரா தனது மகன் சீசரியனை நுபியா, எத்தியோப்பியா அல்லது இந்தியாவுக்கு நாடுகடத்த திட்டமிட்டிருந்தார். இருப்பினும் ஆக்ட்டேவியர்களால் அவர் தூக்கிலிடப்பட்டார். கிளியோபாட்ராவின் மரணம் ஆண்டனி மற்றும் ஆக்டேவியன் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. இது ரோமானியப் பேரரசின் தொடக்கத்திற்கு வழிவகுத்தது. எகிப்து ரோமானியப் பேரரசின் மாகாணமாகவும், அகஸ்டஸ் என பெயர் மாற்றப்பட்ட ஆக்டேவியன் முதல் ரோமானிய பேரரசராகவும் ஆனது. கிளியோபாட்ராவின் மற்ற மூன்று குழந்தைகள் காப்பாற்றப்பட்டு ரோமுக்கு அனுப்பப்பட்டனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Mysterious Death of Cleopatra in Tamil

Read to know the mysteries behind the death of Cleopatra.
Desktop Bottom Promotion