For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உண்மையான கேஜிஎப் பற்றி மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள் என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!

|

கேஜிஎப் என்ற வார்த்தையை நாம் சமீப காலங்களில்தான் நாம் அதிகமாக கேள்விப்படுகிறோம். இந்த புகழ் எல்லாம் கன்னட சினிமாவுக்கே போய் சேரும். ஆனால் அந்த படம் சில உண்மை சம்பவங்களை மட்டும் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை கதைதான். ஏனெனில் முதன் முதலில் கேஜிஎப்-ல் தங்கத்தை கண்டறிந்தது இந்தியர்கள் அல்ல.

நம் இந்தியாவின் செல்வங்களும், வளங்களும் வெள்ளையர்களின் வருகைக்கு பின்னர்தான் நமக்கே தெரிய தொடங்கியது. அந்த பட்டியலில் கேஜிஎப்-ம் அடங்கும். நாம் நினைப்பதை விடவும் கேஜிஎப்-ன் வரலாறு என்பது மிகவும் பெரியது. இந்த பதிவில் வெகுசிலர் மட்டுமே அறிந்த கேஜிஎப்-ன் மறைக்கப்பட்ட வரலாற்றை தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
19 ஆம் நூற்றாண்டு

19 ஆம் நூற்றாண்டு

கேஜிஎப்-ன் வரலாறு 19 ஆம் நூற்றாண்டின் இருந்து ஆரம்பிக்கிறது. 1871 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருந்தனர். அப்போது பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற வீரரான மைக்கேல் ஃபிட்ஸ்ஜெரால்ட் லாவெல் பெங்களூரில் குடிபெயர்ந்து வந்திருந்தார். இவர் நியூசிலாந்தின் மவோரி போரில் ஈடுபட்டிருந்தார், ஓய்வு வாழ்க்கை அவருக்கு விரக்தியை ஏற்படுத்தியது.

கேஜிஎப் தொடக்கம்

கேஜிஎப் தொடக்கம்

ஓய்வூதியத்திற்குப் பிந்தைய காலத்தை பெரியதாக மாற்ற அவர் நம்பினாலும், லாவெல்லே தனது பெரும்பாலான நேரத்தை வாசிப்பதில் செலவிட்டார். அப்போது அவர் 1804 ஆம் ஆண்டு வெளிவந்த ஆசிய பத்திரிகையில் வெளிவந்த நான்கு பக்க படிக்க நேர்ந்தது, அதுதான் அவரின் பயணத்தை மாற்றியமைத்தது. அந்த கட்டுரை உலகின் இரண்டாவது ஆழமான தங்க சுரங்கமான கோலார் தங்கச் சுரங்கத்தைப் பற்றியது.

லாவெல்லேவின் ஆர்வம்

லாவெல்லேவின் ஆர்வம்

லாவெல் நியூசிலாந்தில் போரில் ஈடுபட்ட காலத்தில் தங்க சுரங்கம் பற்றிய ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். எனவே, லெப்டினன்ட் ஜான் வாரனின் பழைய அறிக்கை கோலாரில் தங்க இருப்புக்கள் பற்றி கூறியபோது, அவர் புரிந்துகொள்ளத்தக்க வகையில் அவர் உற்சாகமடைந்தார். திப்புசுல்தான் ஸ்ரீரங்கப்பட்டின போரில் கொல்லப்பட்ட பிறகு லெப்டினன்ட் வாரன் 1799 ஆம் ஆண்டு கோலாரில் தங்த் துகள்களை கண்டறிந்தார்.

MOST READ: டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் தெரியுமா?

லெப்டினன்ட் வாரன்

லெப்டினன்ட் வாரன்

திப்புவின் மரணத்திற்கு பிறகு அவர் ஆண்ட பிரதேசங்களை மைசூர் சுதேசி அரசிடம் ஒப்படைக்க ஆங்கிலேயர்கள் முடிவு செய்தனர். ஆனால் அதற்கு முன் அந்த நிலங்களை ஆய்வு செய்ய வேண்டியிருந்தது, அதற்காக தங்களின் 3 வது படைப்பிரிவில் வேலைபார்த்து வந்த வாரன் இந்த பணிக்காக கோலாருக்கு வரைவழைக்கப்பட்டார்.

சோழர்களின் காலம்

சோழர்களின் காலம்

கோலார் முன் களங்களில் சோழர்களின் வசம் இருந்தது. அப்போது அங்கிருந்த மக்கள் தங்க தாதுக்களை வெறும் கைகளால் தோண்டி எடுத்ததாக சில வதந்திகள் பரவியதை வாரன் கேள்விப்பட்டார். இந்த வதந்தியால் ஆச்சரியமடைந்த அவர் மஞ்சள் நிற உலோகத்தை கொண்டு வருபவர்களுக்கு வெகுமதியை அறிவித்தார். அதனை அறிந்த கிராமவாசிகள் வண்டி நிறைய மண்ணுடன் அதனை வாரன் முன் சுத்தம் செய்ய கிளம்பி வந்தனர்.

கண்டுபிடிக்கப்பட்ட தங்கம்

கண்டுபிடிக்கப்பட்ட தங்கம்

அந்த மண்ணை ஆராய்ச்சி செய்து பார்த்த வாரன் கிராமவாசிகளின் சுத்திகரிப்பு முறைப்படி ஒவ்வொரு 56 கிலோ மண்ணில் இருந்து 1 கிராம் தங்கத்தை எடுக்கலாம் என்று கண்டறிந்தார். இதனையே முறைப்படி செய்தால் அதிகளவு தங்கத்தை எடுக்கலாம் என்ற முடிவுக்கு அவர் வந்தார். இந்த பகுதியில் 1804 முதல் 1860 வரை பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் எதிலும் சாதகமான முடிவுகள் கிடைக்கவில்லை.

MOST READ: இந்த ராசிகளில் பிறந்தவர்கள் காந்தம் போல அனைவரையும் ஈர்ப்பார்களாம் தெரியுமா?

லாவெல்லேவின் ஆராய்ச்சி

லாவெல்லேவின் ஆராய்ச்சி

1871 ஆம் ஆண்டு வாரனின் 67 வயதான அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு லாவல்லே கோலாருக்கு அருகில் 60 மைல் பயணத்தை மேற்கொண்டார். தனது விசாரணையின் போது, சுரங்கத்திற்கான பல சாத்தியமான இடங்களை அவர் அடையாளம் கண்டார். மற்றவர்களைப் போலல்லாமல், தங்க மூலக்கூறுகளுக்கான தடயங்களை அவரால் கண்டுபிடிக்க முடிந்தது.

அரசின் அனுமதி

அரசின் அனுமதி

இரண்டு வருட ஆராய்ச்சிக்குப் பிறகு 1873 ஆம் ஆண்டு சுரங்கம் தோண்ட அனுமதி கோரி மகாராஜாவிற்கு கடிதம் எழுதினார். தங்கம் எப்படியும் கிடைக்கப் போவதில்லை என்று நம்பிய அரசு அதிகாரிகள் அவருக்கு அனுமதி வழங்கினார்கள். ஆனால் லாவல்லே தனது ஆராய்ச்சியின் மீது நம்பிக்கை கொண்டிருந்தார். " எனது ஆராய்ச்சி வெற்றிபெற்றால் அது அரசாங்கத்திற்கு மிகப்பெரிய பொக்கிஷமாக இருக்கும். அதுவே தோல்வியடைந்தால் அரசாங்கம் இலக்கப்போவது எதுவுமில்லை " என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். 20 வருடங்களுக்கு அந்த இடத்தை குத்தகைக்கு எடுத்தார்.

நாவல்

நாவல்

சுரங்கத் தொழிலாளி என்பதை விட அவருக்கு தங்கத்தின் மீதான ஆர்வம்தான் அவரை உற்சாகமாக்கியது. ஆனால் லாவல்லே பணக்காரர் அல்ல, இதனால் அவரின் ஆராய்ச்சி தடைபட்டது. ஆனால் இந்த ஆராய்ச்சி அவருக்கு ஒரு நாவல் எழுதும் ஆர்வத்தைத் தூண்டியது. எனவே " லிவிங் டேஞ்சரஸ்லி " என்ற நாவலை அவர் எழுதினார், இது அவரது சேமிப்பைக் கரைத்தாலும் அவரை பிரபலமானவராக மாற்றியது.

MOST READ: தமிழ்நாட்டை மட்டும் ஏன் எந்த முகலாய மன்னராலும் ஆள முடியவில்லை தெரியுமா? அவர்களை தடுத்தது எது?

சிண்டிகேட் உருவானது

சிண்டிகேட் உருவானது

1877 ஆம் ஆண்டு லாவலேவால் தன்னுடைய பணியை நிதிப்பற்றாக்குறையால் தொடர முடியாமல் போனது. ஆனால் அவரின் புகழ் காரணமாக மெட்ராஸ் பணியாளர் படையின் மேஜ் ஜெனரல் பெரெஸ்போர்டு என்பவரிடமிருந்து அவருக்கு உதவி கிடைத்தது. மேலும் மெக்கென்சி, சர் வில்லியம் மற்றும் கர்னல் வில்லியம் அர்பூட்நாட் என்னும் மூவரை சேர்த்து சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள ‘தி கோலர் கன்ஷனரிஸ் கம்பெனி லிமிடெட்' என்ற பல இராணுவ வீரர்களை உள்ளடக்கிய சிண்டிகேட்டை உருவாக்கினர்.

கேஜிஎப்-ன் பொற்காலம்

கேஜிஎப்-ன் பொற்காலம்

சுரங்க பணிகளை மேற்கொள்ளவும், தங்கத்தைத் தோண்டவும் உலகம் முழுவதும் இருந்து பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். ஆனால் முதலீட்டாளர்களின் அழுத்தத்தின் கீழ் அதிநவீன சுரங்க பொறியியல் இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்டபோது அனைத்து விஷயங்களும் மாறியது. இங்கிலாந்தின் நார்விச்சிலிருந்து பொறியாளர்களின் வருகையால் கே.ஜி.எஃப் இன் பொற்காலம் தொடங்கியது.

இந்தியாவின் முதல் மின் உற்பத்தி நிலையம்

இந்தியாவின் முதல் மின் உற்பத்தி நிலையம்

கே.ஜி.எஃப் இல் செயல்பாடுகள் முன்னேறும்போது, ஆங்கிலேயர்கள் ஆசியாவின் இரண்டாவது மற்றும் இந்தியாவின் முதல் மின்நிலையத்தை கோலாரில் திட்டமிட்டனர். 1900 ஆம் ஆண்டில் காவிரி ஆற்றில் ஒரு நீர்மின் நிலையம் கட்டும் திட்டத்துடன் ராயல் பொறியாளர்களின் அதிகாரிகள் மைசூர் மகாராஜாவை அணுகினர். நியூயார்க்கின் மத்திய மின்சார நிறுவனம் மற்றும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஐச்சர் வைஸ் ஆகிய நிறுவனங்கள் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதுடன் 148 கிலோமீட்டருக்கு அதற்கு பாதையும் அமைக்க முடிவு செய்தனர். பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள் யானைகள் மற்றும் குதிரைகளால் இழுக்கப்பட்ட வண்டிகளில் கொண்டு செல்லப்பட்டன.

MOST READ: வாய்ப்பிளக்க வைக்கும் பழங்கால மிருகத்தனமான சிகிச்சை முறைகள் என்ன தெரியுமா?

லிட்டில் இங்கிலாந்து

லிட்டில் இங்கிலாந்து

உலகெங்கிலும் இருந்து பிரிட்டிஷ் பொறியாளர்கள் கோலாரை 'லிட்டில் இங்கிலாந்து' என்று அழைத்தனர். இங்கிலாந்தில் இருந்தது போன்ற பங்களாக்கள், க்ளப்புகள் கேஜிஎப்-ல் அமைக்கப்பட்டது. பிரிட்டிஷ் சுரங்க காலனியாக இருந்ததால், கே.ஜி.எஃப் வாழ்க்கையில் பிரிட்டிஷ் கலாச்சாரத்தின் தாக்கம் அதிகமிருந்தது.

சுரங்க தொழிலாளகர்ளின் வாழ்க்கை

சுரங்க தொழிலாளகர்ளின் வாழ்க்கை

சுரங்கத் தொழிலாளர்கள் வாழ்ந்த இடத்திற்கு 'கூலிஸ் லைன்ஸ்' என்று பெயர் வைக்கப்பட்டது. பெரும்பாலும் அங்கு தமிழ் மற்றும் கன்னட மொழி பேசுபவர்கள் வேலை செய்தனர். கேஜிஎப்-ல் அவர்களின் வாழ்க்கை அவ்வளவு சுலபமானதாவோ, வசதியானதாகவோ இல்லை. ஆண்டுதோறும் பல மக்கள் இறந்தனர். மேலும் அந்த காலக்கட்டத்தில் அவர்களின் வீடுகளில் எலி தொல்லை அதிகமாக இருந்தது. ஆண்டுதோறும் 50,000 எலிகள் அவர்களால் கொல்லப்பட்டது. சுரங்களில் வேலை செய்ததால் பலரும் நோய்களால் பாதிக்கப்பட்டனர், மேலும் சுரங்கத்திற்குள் எப்போதும் வெப்பநிலை 55 டிகிரி செல்ஸியஸ் இருக்கும்.

சகாப்தத்தின் முடிவு

சகாப்தத்தின் முடிவு

கே.ஜி.எஃப் இல் தங்கம் குறையத் தொடங்கியதும், வெளிநாட்டவர்கள் கோலாரை விட்டு வெளியேறத் தொடங்கினர், இருப்பினும் சுதந்திரம் கிடைக்கும் வரை வரை ஆங்கிலேயர்களால் முக்கிய பதவிகள் வகிக்கப்பட்டன. 1956 ஆம் ஆண்டில் அனைத்து சுரங்கங்களையும் மத்திய அரசு கையகப்படுத்த முடிவு செய்தபோது, பெரும்பாலான சுரங்கங்களின் உரிமை மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தியாவை விட்டு வெளியேறுதல்

இந்தியாவை விட்டு வெளியேறுதல்

ஆங்கிலேயர்களைத் தவிர, ஆங்கிலோ-இந்திய சமூகத்தைச் சேர்ந்த பலர், நிர்வாகப் பதவிகளில் இருந்தவர்கள், பசுமையான வாழ்க்கைக்காக நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கினர். ஐரோப்பாவிலிருந்து பிற சுரங்க வல்லுநர்கள் கானா மற்றும் மேற்கு ஆபிரிக்காவில் இருந்த தங்க சுரங்கங்களுக்கு புறப்பட்டனர்.

MOST READ: ஆண்களிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் பெண்களை வெறுப்பவர்களாக இருப்பார்களாம் தெரியுமா?

கேஜிஎப் மூடல்

கேஜிஎப் மூடல்

இந்தியாவின் தங்க உற்பத்தியில் 95 சதவீதத்தை உற்பத்தி செய்த சுரங்கங்கள், அவை மூடப்படாமல் இருக்க தேசியமயமாக்கப்பட்டன. இருப்பினும், 2001 ஆம் ஆண்டில், ஏற்பட்ட போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புகளின் காரணமாக கேஜிஎப் மூடப்பட்டது. கைவிடப்பட்ட நிலத்தடி சுரங்கங்கள், ஒரு காலத்தில் தங்கத்தின் பாதைகளாக இருந்தவை இப்போது நிலத்தடி நீரால் நிரம்பி வழிகின்றன. இப்போதும் கேஜிஎப்- ல் தங்கம் உள்ளது, ஆனால் அதனை தோண்டியெடுக்க ஆகும் செலவு தங்கத்தை விட அதிகமாக இருக்கும் என்பதால் அரசாங்கம் அந்த முடிவை செயல்படுத்தாமல் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The History Of Kolar Gold Field

Read to know the unknown history of Kolar Gold Field(KGF)
Story first published: Monday, December 2, 2019, 12:50 [IST]