For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சார்வரி தமிழ் புத்தாண்டு தினத்தை எப்படி கொண்டாடலாம்?

சித்திரை முதல் நாளான தமிழ் வருடப்பிறப்பும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கவேண்டும் என்பதற்காகவே வீட்டில் கனி காணுதலோடு புத்தாண்டை தொடங்குகின்றனர். சித்திரை முதல் நாள் விசு புண்ணியகாலமாகும்.

|

சார்வரி தமிழ் புத்தாண்டு இன்று இரவு 8.23 மணிக்கு பிறக்கிறது. சார்வரி என்றால் வீறியெழல் என்று அர்த்தம். சித்திரை முதல்நாளை தமிழ் புத்தாண்டாகவும், விஷூ புண்ணியகாலமாகவும் கொண்டாடுகின்றனர். தமிழ் புத்தாண்டான சித்திரை முதல் நாளன்று வீடுகளை சாணத்தால் மெழுகி, செம்மண் மற்றும் மாக்கோலமிட்டு வாயிற்படிகளுக்கு மஞ்சள்- குங்குமம் பூசி மாவிலைத் தோரணம் கட்டி சித்திரைத் தாயை வரவேற்க மக்கள்தயாராகின்றனர். பூஜை அறைகளை அலங்கரித்து விளக்கேற்றி, முக்கனிகளை இறைவனுக்கு படைத்து வழிபடுவது வழக்கம்.

Tamil New Year 2020 Name, Date, Muhurtham Timings

மும்மூர்த்திகளில் பிரம்மாவுக்கு உரியது விஷூ புண்ணிய காலம் ஆகும். 12 தமிழ் மாதங்களில் சித்திரை, ஆடி, ஐப்பசி மற்றும் தை ஆகியவை பிரம்மாவுக்கு உரியவை. அந்த மாதங்களின் முதல் நாள் விஷூ புண்ணிய காலம் என்று குறிப்பிடப்பட்டு, தலை எழுத்தை மாற்றி எழுதக் கூடிய பிரம்மாவை வணங்கு வதற்குரிய நாட்களாகவும் வரையறுக்கப்பட்டுள்ளன. ஜோதிட ரீதியாக, அந்த காலகட்டம் சூரியனது சர ராசி சஞ்சார மாதங்களாகவும் அமைகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரம்மன் படைப்பு

பிரம்மன் படைப்பு

தமிழ் மாதங்கள் பன்னிரெண்டில் முதலாவதாக வரும் சித்திரை மாதம் முதல் நாளை, தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுகிறோம். சித்திரை மாதத்தின் முதல் நாள்தான் பிரம்மன் உலகத்தைப் படைத்தார் என்று புராணம் கூறுகிறது. சித்திரை மாத திருதியை திதி அன்று மகாவிஷ்ணு மீனாக அவதாரம் எடுத்தார். சித்திரை மாதத்தில் சுக்கில பஞ்சமியில் லட்சுமி சத்திய லோகத்திலிருந்து பூமிக்கு வந்ததாக கூறப்படுவதால் அன்று லட்சுமி பூஜை செய்வது நன்மை தரும். சித்திரை முதல்நாளில் நம் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.

புத்தாண்டு கொண்டாட்டம்

புத்தாண்டு கொண்டாட்டம்

புத்தாண்டு தினத்தில் வாசலில் அழகாகக் கோலமிட வேண்டும்.மேலும் செம்மண் பூசியும் அழகு செய்யலாம். கதவுகளில், மஞ்சள் குங்குமம் இட்டு அலங்கரிக்கவேண்டும். காலையில் பூஜை அறையில் சுவாமி படங்களைச் சுத்தம் செய்து,பொட்டு வைக்க வேண்டும். மேலும் பூக்களால் அலங்கரித்து விளக்கேற்றி வணங்க வேண்டும்.

ஆரோக்கியம்

ஆரோக்கியம்

புத்தாண்டு அன்று காலையில் மருந்துநீரில் குளிக்க வேண்டும். இந்த மருந்து நீரானது தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், திப்பிலி, சுக்கு போன்றவற்றைச் சேர்த்து காய்ச்சப்படும். மருந்துநீரை தலையில் தேய்த்து நீராடினால் நல்ல பலன்களைப் பெறலாம் என்பது நம்பிக்கை. ஆரோக்கியம் அதிகரிக்கும். குளித்த பின்பு புதிய ஆடைகளை அணிய வேண்டும்.

சர்க்கரை பொங்கல்

சர்க்கரை பொங்கல்

காலையில் நம் வீட்டில் சர்க்கரைப் பொங்கல் வைத்து நைவேத்தியம் செய்து தீபாராதனை செய்ய வேண்டும். நைவேத்தியம் செய்யப்பட்ட சர்க்கரைப் பொங்கலை அனைவருக்கும் பரிமாற வேண்டும். சர்க்கரை பொங்கல் செய்ய முடியாதவர்கள் பாசிப்பருப்பு பாயசம்,வெல்ல அவல் போன்ற இனிப்பு வகைகளும் செய்யலாம்.

அறுசுவை சாப்பாடு

அறுசுவை சாப்பாடு

மதிய உணவில் அறுசுவையும் சேர்த்துகொள்ள வேண்டும். இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய அறுசுவைகளைக் குறிக்கும் சர்க்கரை பொங்கல், மாங்காய் பச்சடி, வேப்பம்பூ ரசம், நீர்மோர், வாழைப்பூ வடை, காரக் குழம்பு ஆகியவற்றைச் செய்து உண்ணவேண்டும். வாழ்க்கை என்பது இனிப்பும் கசப்பும் நிறைந்ததுதான் என்பதை சொல்லும் வகையில் இந்த உணவை சாப்பிடலாம். இன்பம், துன்பம், மகிழ்ச்சி, கவலை, வியப்பு என்று பலதரப்பட்ட அனுபவங்கள் கொண்டதுதான் வாழ்க்கை என்பதை உணர்த்துவதுபோல் அன்று நாம் உண்ணும் உணவு பல சுவைகளில் இருக்கும். அசைவ உணவு சாப்பிடக்கூடாது.

புத்தாண்டு வாழ்த்து

புத்தாண்டு வாழ்த்து

இப்போது உள்ள சூழ்நிலையில் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று இறைவனை வணங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை கூறலாம். பெரியவர்களின் ஆசிகளை பெற்று அவர்களின் கைகளால் பணம் வாங்கலாம். நம்மை விட வயதில் சிறியவர்களுக்கு பணம் கொடுக்கலாம். பெரியவர்கள் கொடுக்கும் பணத்தைப் பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி இந்த புது வருடத்தில் அனைவரும் ஆயுள் ஆரோக்கியத்துடன் நன்றாக வாழ வாழ்த்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tamil New Year 2020 Name, Date, Muhurtham Timings

Here is the tamil new year 2020 date and muhurtham timings. Read on...
Story first published: Monday, April 13, 2020, 16:46 [IST]
Desktop Bottom Promotion