For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏன் கெளரி விரதம் மேற்கொள்ள வேண்டும்... அதற்கு பின்னால் இருக்கும் புராண வரலாறு என்ன தெரியுமா?

இல்லற வாழ்க்கையில் பல பிரச்னைகள் ஏற்படும். அத்தகைய பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்து, தேவியின் அருளால் இனிய இல்லற வாழ்க்கை அமையப் பெறலாம்.

|

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. விநாயகர் சந்துர்த்தி எப்போது கொண்டாடப்பட்டாலும், அதற்கு முந்தைய தினம் ஸ்வர்ண கெளரி விரதம் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த விரதம் கடைபிடிக்கப்படுவதற்கு புராண காரணங்கள் கூறப்படுகிறது. பொதுவாக இந்த விரதத்தை பெண்கள் மிகவும் பயபக்தியுடன் கடைப்பிடித்து வருகின்றனர். அதற்கு காரணம், கௌரி இல்லற வாழ்க்கையை நலம் பெற வைப்பாள் என்ற நம்பிக்கை.

swarna gowri vratham date, shubh muhurat, significance and importance in tamil

பொதுவாக இல்லற வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகள் எழக்கூடும். அவை எல்லாம் நம் வாழ்க்கையின் மகிழ்ச்சியை சீர்குலைக்கும். நமக்கு ஏதாவது பிரச்சனை அல்லது கவலை என்றால், நாம் கடவுளிடம் தான் முறையிடுவோம். அந்த வகையில், கணவன் மனைவி மகிழ்ச்சியாகவும் அன்பாகவும் வாழ அருள் புரியும் கெளரி தேவி பற்றியும், இந்த விரதம் பற்றியும் பல சுவாரஸ்யமான தகவல்களை இக்கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்வர்ண கெளரி விரதம்

ஸ்வர்ண கெளரி விரதம்

மக்களின் விருப்பங்களை கடவுள் நிறைவேற்றுவதாக மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், நம்முடைய விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக கௌரி தேவி 108 வடிவங்களில் இருப்பதாக புராணங்கள் கூறுகிறது. 108 வடிவங்களில் கௌரி தேவியை வழிபடுவது சாத்தியம் இல்லை என்பதால், பதினாறு வடிவங்களில் வழிபடுகின்றனர். ஸ்வர்ண கௌரி விரதம் கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. கர்நாடகாவில் கெளரி ஹப்பா என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இந்த விரதத்தை பெண்கள் அனைவரும் மேற்கொள்கின்றனர். கணவன்- மனைவி இருவரும் மகிழ்ச்சியாகவும் அன்பாகவும் இருக்க இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

சிவபெருமானை விளக்குவது

சிவபெருமானை விளக்குவது

ஸ்வர்ண கௌரி விரதம் பற்றி முருகன் சிவபெருமானிடம் கேட்டபோது, சிவபெருமான் அவருக்கு இந்த விரதத்தை பற்றிய சிறப்பை கூறினார். முன்னொரு காலத்தில் சரஸ்வதி ஆற்றின் கரையில் அமைந்திருந்த விமலம் என்ற நகரத்தை சந்திரபிரபன் என்ற அரசர் சிறப்பாக ஆட்சி செய்து வந்தார். அவருக்கு இரண்டு மனைவிகள். அவர்களில் முதல் மனைவியிடம் மட்டுமே அவர் அன்பு செலுத்தி வந்தார். இரண்டாவது மனைவியின் மீது வெறுப்பு கொண்டிருந்தார். இந்நிலையில், அரசர் ஒருமுறை காட்டுக்கு வேட்டையாட சென்றபோது, அங்கே சில தேவ கன்னியர் ஏதோ ஒரு பூஜை செய்துகொண்டிருப்பதைக் கண்டு, அவர்களிடம் அந்த பூஜையைப் பற்றிய விவரம் கேட்டார்.

பூஜை செய்த கயிறு

பூஜை செய்த கயிறு

அதற்கு அவர்கள் ஸ்வர்ண கௌரி விரதத்தை மேற்கொள்வதாகவும், அந்த விரதத்தின் மகிமையும், சிறப்புகளையும் கூறினார்கள். மேலும், அதைக் கடைப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் அரசரிடம் கூறியதும், அவரும் அந்த பூஜையில் பங்குக்கொண்டார். 16 முடிச்சுகள் கொண்ட நோன்பு கயிறைத் தன் கையில் கட்டிக்கொண்டு அரண்மனை திரும்பினார். தன் இரு மனைவியரையும் அழைத்து, அந்த நோன்புக் கயிற்றை அவர்கள் இருவரிடமும் காட்டி, அதன் விவரத்தையும் கூறினார்.

மனைவியின் மீது அன்பு

மனைவியின் மீது அன்பு

இதைக் கேட்ட அரசரின் முதல் மனைவி அந்தக் கயிற்றை அறுத்து பட்டுப்போன ஒரு மரத்தின் மீது வீசினாள். அந்தக் கயிறு மரத்தின்மீது பட்டவுடனே அந்த மரம் துளிர்க்க ஆரம்பித்தது. இதைப் பார்த்தவுடன் அரசரின் இரண்டாம் மனைவி அந்த கயிற்றை தனது கையில் கட்டிக்கொண்டாள். அதைக் கையில் கட்டியவுடனே, அதுவரை அவள் மீது வெறுப்பாய் இருந்த அரசர் அவள் மேல் அன்பு செலுத்த ஆரம்பித்தார். அதே நேரத்தில் முதல் மனைவியை வெறுக்கவும் தொடங்கினார்.

விரட்டியடிக்கப்பட்ட முதல் மனைவி

விரட்டியடிக்கப்பட்ட முதல் மனைவி

அதனால், மனம் வருந்திய முதல் மனைவி அரண்மனையை விட்டு வெளியேறி காட்டிற்குச் சென்றாள். தான் செய்த தவறுக்காக மனம் வருந்திய அவள், தேவியைப் பூஜித்து அங்கிருந்த முனிவர்களின் ஆசிரமத்தை சுற்றி வந்தாள். ஆனால், அங்கிருந்த முனிவர்கள் தேவியை நிந்தித்ததால், அவளை அங்கிருந்து விரட்டினர். அங்கிருந்து அவள் ஒரு தடாகத்தின் அருகிலுள்ள மரத்தடியில் ஒரு வன தேவதை பூஜை செய்வதைக் கண்டு அங்கு சென்றாள். ஆனாலும் அங்கிருந்தும் அவள் விரட்டியடிக்கப்பட்டாள்.

தேவியின் அருளை பெற்றாள்

தேவியின் அருளை பெற்றாள்

பின்னர் தேவியின் மகிமையை உணர்ந்த அவள் மனதார கொளரி தேவியை வணங்கி வழிபட்டு கடும் தவம் மேற்கொண்டாள். அவளுடைய வழிபாட்டிற்கு இரங்கிய தேவி, அவளுடைய தவறை மன்னித்து, சகல நன்மைகளும் அவளுக்குக் கிடைக்கும் என்று அருள் புரிந்தாள். அம்பிகையின் அருள் பெற்று தன் நாட்டுக்குத் திரும்பியவள், தன் கணவரான அரசரின் அன்பை மீண்டும் பெற்று சகல வசதியுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாள்.

குழந்தை பாக்கியம் கிடைக்கும்

குழந்தை பாக்கியம் கிடைக்கும்

பொதுவாக திருமணமான பெண்கள்தான் இந்த விரதத்தை மேற்கொண்டு பூஜை செய்வது வழக்கம். மஞ்சளை அரைத்து அம்மன் உருவமாக செய்து வழிபடலாம் அல்லது மஞ்சள் நிறத்தில் கடைகளில் விற்கப்படும் பார்வதி உருவத்தை வைத்து வழிபடலாம். இந்த விரதத்தை கடைப்பிடிப்பதன் மூலம் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு, கணபதி போன்ற நல்ல அறிவுச் செல்வம் மிகுந்த குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

எவ்வாறு வழிபட வேண்டும்?

எவ்வாறு வழிபட வேண்டும்?

பூஜை செய்யும்போது, வடக்குப் பார்த்து அமர்ந்து பூஜிக்க வேண்டும். கெளரி தேவியின் இருபுறமும் விளக்குகள் ஏற்ற வேண்டும். முதலில் விக்னேஸ்வர பூஜையைச் செய்து விட்டு, அம்பிகைக்கு ஷோடசோபசார பூஜை செய்ய வேண்டும். பின்னர், திருமணமான பெண்களுக்கு உணவளித்து, பழம், தாம்பூலம் அளித்து விரதத்தை முடிக்க வேண்டும். இல்லற வாழ்க்கையில் பல பிரச்னைகள் ஏற்படும். அத்தகைய பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்து, தேவியின் அருளால் இனிய இல்லற வாழ்க்கை அமையப் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Swarna Gowri Vratham 2021 Date, Shubh Muhurat, Significance and Importance in Tamil

Here we are talking about swarna gowri vratham 2021 date, shubh muhurat, significance and importance in tamil.
Desktop Bottom Promotion