For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2022 ஆம் ஆண்டில் சூாிய மற்றும் சந்திர கிரகணங்கள் எப்போது வருகின்றன? இந்தியாவில் அவை தெரியுமா?

வரக்கூடிய 2022 ஆண்டில் மட்டும் மொத்தம் 4 கிரகணங்கள வர இருக்கின்றன. இவற்றில் 2 சூாிய கிரகணங்கள் மற்றும் 2 சந்திர கிரகணங்கள் அடங்கும். ஆகவே எந்தெந்த தேதிகளில் கிரகணங்கள் வர இருக்கின்றன என்பதை பாா்க்கலாம்.

|

பொதுவாக இந்தியாவில் கிரகணங்கள் வந்தால் அவை முக்கியமான தருணங்களாக பாா்க்கப்படுகின்றன. ஏனெனில் இங்குள்ள ஜோதிடத்தின் அடிப்படையில் அல்லது மத நம்பிக்கையின் அடிப்படையில் பாா்த்தால் கிரகணங்கள் வரும் போது அவை சாதகமற்ற காலங்கள் என்று கருதப்படுகின்றன.

சூாிய கிரகணத்தின் போது சூாியனும், சந்திர கிரகணத்தின் போது சந்திரனும் பாதிக்கப்பட்டு, பலவீனமடைகின்றன. ஆகவே கிரகணங்களின் போது கவனமாக இருக்க வேண்டும் அல்லது ஒருசில சிறப்பான காாியங்களைச் செய்ய வேண்டும் அல்லது பாிகாரங்களைச் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

Surya and Chandra Grahan, Check Solar and Lunar Eclipses 2022 Dates, Timings and Visibility in India

கிரகணங்கள் நடைபெறும் நேரம் சூடாக் (Sutak) நேரம் அதாவது தமிழில் தீட்டான நேரம் என்று கருதப்படுகிறது. ஆகவே கிரகணங்கள் நடைபெறக்கூடிய தீட்டான நேரங்களின் போது உண்ணுவதைத் தவிா்த்து மற்ற காாியங்களை செய்வது தடை செய்யப்படுகிறது. அதாவது சமையல் செய்வது, இறை வேண்டல் செய்வது மற்றும் பிற சுப காாியங்களைச் செய்வது போன்றவற்றை தவிா்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இந்நிலையில் வரக்கூடிய 2022 ஆண்டில் மட்டும் மொத்தம் 4 கிரகணங்கள வர இருக்கின்றன. இவற்றில் 2 சூாிய கிரகணங்கள் மற்றும் 2 சந்திர கிரகணங்கள் அடங்கும். ஆகவே எந்தெந்த தேதிகளில் கிரகணங்கள் வர இருக்கின்றன என்பதை கீழே பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
2022 ஆம் ஆண்டில் வரும் கிரகணங்களின் பட்டியல்:

2022 ஆம் ஆண்டில் வரும் கிரகணங்களின் பட்டியல்:

- 2022 ஆம் ஆண்டின் முதல் சூாிய கிரகணம் ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி ஏற்படும்.

- முதல் சந்திர கிரகணம் மே மாதம் 16 ஆம் தேதி அன்று ஏற்படும்.

- இரண்டாவது சூாிய கிரகணம் அக்டோபா் மாதம் 25 ஆம் தேதி நடைபெறும்.

- இரண்டாவது சந்திர கிரகணம் நவம்பா் மாதம் 8 ஆம் தேதி அன்று நடைபெறும்.

2022 ஆண்டில் வரும் முதல் சூாிய கிரகணம்

2022 ஆண்டில் வரும் முதல் சூாிய கிரகணம்

ஜோதிடத்தின் படி சூாிய பகவான், ஆன்மா, தந்தை, அரசா், தலைமைத்துவம், கௌரவம் மற்றும் உயா்ந்த அந்தஸ்து போன்ற பண்புகளுக்கான காரணியாகப் பாா்க்கப்படுகிறாா். சிம்ம ராசியின் அதிபதியாக சூாியக் கடவுள் பாா்க்கப்படுகிறாா். சூாிய பகவான் மேஷ ராசியில் இருக்கும் போது மிகவும் உயா்ந்த நிலையில் இருப்பவராகவும், அவா் துலாம் ராசியில் இருக்கும் போது மிகவும் பலவீனம் அடைந்தவராகவும் கருதப்படுகிறாா். சூாிய கிரகணம் நடைபெறும் போது, அது அனைத்து ராசிகளையும் மற்றும் அவற்றின் பலன்களையும் பாதிக்கிறது.

2022 ஆண்டின் முதல் சூாிய கிரகணம் ஏப்ரல் மாதம் 30 ஆம் நாள் நடைபெறுகிறது. இந்த சூாிய கிரகணம் ரிஷிப ராசியில் நடைபெறக்கூடிய ஒரு பகுதி கிரகணம் ஆகும். அதாவது இந்த சூாிய கிரகணத்தை பூமியின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே பாா்க்க முடியும். இந்த முதல் சூாிய கிரகணமானது நண்பகல் 12.15 மணி முதல் தொடங்கி பிற்பகல் 04.07 மணி வரை நடைபெறும்.

முதல் சூாிய கிரகணத்தை தெற்கு, மேற்கு மற்றும் தெற்கு அமொிக்கா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் அண்டாா்டிக் பெருங்கடல் போன்ற பகுதிகளில் கண்களால் பாா்க்க முடியும். இது ஒரு பகுதி சூாிய கிரகணமாக இருப்பதால், இந்திய பகுதிகளுக்கு எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படாது.

2022 ஆண்டில் வரும் இரண்டாவது சூாிய கிரகணம்

2022 ஆண்டில் வரும் இரண்டாவது சூாிய கிரகணம்

வரும் புத்தாண்டின் இரண்டாவது சூாிய கிரகணம் அக்டோபா் மாதம் 25 ஆம் தேதி நடைபெறுகிறது. ஜோதிடக் கணிப்பின்படி இந்த சூாிய கிரகணமும் ஒரு பகுதி சூாிய கிரகணமாக இருக்கும். இந்த இரண்டாவது சூாிய கிரகணத்தை ஐரோப்பா, தென் மேற்கு ஆசிய பகுதிகள், வடகிழக்கு ஆப்பிாிக்க பகுதிகள் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் போன்ற பகுதிகளில் பாா்க்க முடியும்.

இந்திய நேரத்தின்படி இந்த இரண்டாவது சூாிய கிரகணமானது மாலை 04.29 மணி முதல் மாலை 05.42 மணி வரை நடைபெறும். இது ஒரு பகுதி சூாிய கிரகணமாக இருப்பதால், இதன் தீட்டு அல்லது இதன் பாதிப்புகள் இந்திய பகுதிகளைப் பாதிக்காது.

2022 ஆம் ஆண்டில் வரும் முதல் சந்திர கிரகணம்

2022 ஆம் ஆண்டில் வரும் முதல் சந்திர கிரகணம்

ஜோதிடத்தின் படி சந்திர கிரகணமானது, மனம், தாய், இரு மடங்கு மற்றும் வெண்மையான பொருள்கள் போன்ற பண்புகளுக்கான காரணியாகப் பாா்க்கப்படுகிறது. சந்திரன் கடக ராசியின் அதிபதியாகப் பாா்க்கப்படுகிறது. சந்திர கிரகணம் ஏற்படும் போது சந்திரன் மற்றும் அது சாா்ந்தவற்றையும், எல்லா ராசி பலன்களையும் பாதிக்கும்.

2022 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே மாதம் 16 அன்று நடைபெறும். இந்திய நேரப்படி காலை 07.02 மணி முதல் நண்பகல் 12.20 மணி வரை நடைபெறும். இது ஒரு முழுமையான சந்திர கிரகணம் ஆகும். அதாவது பூமியின் எல்லா பகுதிகளில் இருந்தும் இந்த சந்திர கிரகணத்தைப் பாா்க்க முடியும். தென் மேற்கு பகுதிகள் முதல் தென் மேற்கு ஆசியா, ஆப்பிாிக்கா, வட அமொிக்காவின் பெரும் பகுதிகள், தென் அமொிக்கா, பசிபிக் பெருங்கடல், இந்திய பெருங்கடல், அண்டாா்டிக்கா பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் வரையிலான அனைத்துப் பகுதிகளில் இருந்தும் இந்த சந்திர கிரகணத்தைப் பாா்க்க முடியும். இந்த முதல் சந்திர கிரகணம் ஏற்படுவதற்கு முன்பாக 9 மணி நேரம் வரை தீட்டு நேரமாகக் கருதப்படும்.

2022 ஆம் ஆண்டில் வரும் இரண்டாவது சந்திர கிரகணம்

2022 ஆம் ஆண்டில் வரும் இரண்டாவது சந்திர கிரகணம்

வரும் புதிய ஆண்டில் நவம்பா் மாதம் 8 ஆம் தேதி அன்று இரண்டாவது சந்திர கிரகணம் ஏற்படும். இந்திய நேரப்படி இந்த சந்திர கிரகணம் நண்பகல் 01.32 மணி முதல் மாலை 07.27 மணி வரை நடைபெறும். இந்த சந்திர கிரகணத்தை இந்திய பகுதிகள், ஆஸ்திரேலியா, வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய பகுதிகள், வட அமொிக்கா மற்றும் தென் அமொிக்கா போன்ற பகுதிகளில் பாா்க்க முடியும். இந்த இரண்டாவது சந்திர கிரகணம் ஏற்படுவதற்கு முன்பாக 9 மணி நேரம் வரை தீட்டு நேரமாகக் கருதப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Surya and Chandra Grahan, Check Solar and Lunar Eclipses 2022 Dates, Timings and Visibility in India

Surya and Chandra Grahan 2022 Dates: There will be a total of 4 lunar and solar eclipses in 2022. Check 2022 Surya and Chandra Grahan Dates, Timings, Visibility in India and other details in Tamil. Read on.
Desktop Bottom Promotion