Latest Updates
-
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம்
கன்னி செல்லும் சூரியனால் புரட்டாசி மாதம் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது..
சூரியன் கன்னி ராசிக்கு செல்வதால், புரட்டாசி மாதம் பிறக்கிறது. மேலும் சூரியனின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
நவகிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன் தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இவர் 2022 செப்டம்பர் 17 ஆம் தேதி சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு செல்கிறார். இந்த கன்னி ராசியில் அக்டோபர் 16 ஆம் தேதி வரை இருந்து, பின் மாறுவார். சூரியன் கன்னி ராசிக்கு செல்லும் காலத்தில் புதன் ஏற்கனவே அந்த ராசியில் பயணித்து வருகிறார். எனவே புதனுடன் சூரியன் இணைந்து புதாதித்ய யோகத்தை உருவாக்குகிறது. சூரியனின் ராசி மாற்றத்தின் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.

அந்த வகையில் சூரியன் கன்னி ராசிக்கு செல்வதால், புரட்டாசி மாதம் பிறக்கிறது. மேலும் சூரியனின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் மற்றும் நல்ல அதிர்ஷ்டமான காலமாகவும் இருக்கும். இப்போது கன்னி ராசிக்கு செல்லும் சூரியனால் எந்த ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மிதுனம்
மிதுன ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் அரசு வேலை செய்பவர்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். அரசு வேலைக்கு தயாராக் கொண்டிருந்தால், அவர்களுக்கும் நல்ல பலன் கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் தீரும். குடும்ப உறுப்பினர்களிடையே பரஸ்பரம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். செயல்திறன் மேம்படும். ஆனால் இக்காலத்தில் சொத்து வாங்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் சேமிப்பு அதிகரிப்பதைக் காணலாம். பங்குச்சந்தையில் பணத்தை முதலீடு செய்பவர்களுக்கும் இந்தக் காலத்தில் பலன்கள் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். வெளிநாட்டுத் தொழிலில் ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும். இருப்பினும் குடும்ப வாழ்க்கையில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் மரியாதை பெறுவீர்கள். சிலருக்கு கூடுதல் பொறுப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் பேசும் போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். சமூக உறவுகள் வலுபெறும். எதிலும் சரியான முடிவுகளை பெறுவீர்கள். புதிய வருமானம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அதிக நம்பிக்கையுடன் எந்த முடிவுகளையும் எடுக்காதீர்கள். உங்கள் மூத்த சகோதரர்கள் உங்கள் ஆதரவாக இருப்பார்கள். சில நிறைவேறாத ஆசைகளும் இக்காலத்தில் நிறைவேறும்.

தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தந்தையின் ஆதரவைப் பெறுவீர்கள். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும் மற்றும் செலவுகள் குறையும். உயர்கல்வி படிப்பவர்களுக்கு நல்ல நன்மைகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
