Latest Updates
-
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க..
Surya Gochar March 2023 Effects: சூரிய பெயர்ச்சியால் மார்ச் 15 முதல் இந்த ராசிக்கு பிரகாசமா இருக்கப் போகுது...
சூரியன் 2023 மார்ச் 15 ஆம் தேதி மீன ராசிக்கு செல்கிறார். சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அப்படி மீன ராசிக்கு சூரியன் செல்லும் போது, தமிழ் மாதமான பங்குனி மாதம் பிறக்கிறது.
வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதந்தோறும் ராசியை மாற்றுவார். அந்த வகையில் கும்பத்தில் பயணித்து வரும் சூரியன் 2023 மார்ச் 15 ஆம் தேதி மீன ராசிக்கு செல்கிறார். சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அப்படி மீன ராசிக்கு சூரியன் செல்லும் போது, தமிழ் மாதமான பங்குனி மாதம் பிறக்கிறது. சூரியன் இந்த மீன ராசியில் 2023 ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இருந்து பின் மேஷ ராசிக்கு செல்வார்.

சூரிய பெயர்ச்சியானது அனைத்து ராசிகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமாகவும், இன்னும் சில ராசிக்காரர்களுக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது மீன ராசிக்கு செல்லும் சூரியனால் மார்ச் 15 முதல் அடுத்த ஒரு மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிக அலைச்சலையும், செலவுகளையும் சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் உங்களின் திட்டங்களை ரகசியமாக வைத்து செயல்பட்டால் வெற்றி காணலாம். இக்காலத்தில் சில விரும்பத்தகாத செய்திகளைப் பெற வாய்ப்புள்ளது. எந்த ஒரு பிரச்சனையையும் நீதிமன்றம் வரை கொண்டு செல்வதைத் தவிர்த்து, பேசி தீர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். காதல் விஷயங்களில் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஆனால் மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் நிலுவையில் உள்ள அரசு வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலையில் எதிர்பார்த்ததை விட சிறப்பான பலன்கள் கிடைக்கும். விரும்பிய வேலை மாற்றம் கிடைக்கும். ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பெற்றோரின் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பயணத்தின் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தொண்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். இக்காலத்தில் நீங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளும் சிறப்பாக இருக்கும் மற்றும் உங்களின் பணிகள் பாராட்டைப் பெறும். உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட விடாதீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். நெருப்பு மற்றும் மருந்து விஷயத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. உங்களின் சில வேலைகள் இக்காலத்தில் நல்ல பாராட்டை பெற வைப்பதோடு, உங்கள் புகழை அதிகரிக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்ளே உங்களை வீழ்த்த முயற்சிப்பார்கள் என்பதால் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. எந்த பிரச்சனைகளையும் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள்.

கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் வியாபாரம் விரிவடையும். ஆனால் கூட்டுத் தொழிலைத் தவிர்க்க வேண்டும். அரசின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். திருமண வாழ்வில் மனக்கசப்புகள் ஏற்பட விடாதீர்கள். திருமணமாகாதவர்களுக்கு இன்னும் சிறிது காலம் திருமணம் தள்ளிப் போகும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற அதிகம் முயற்சி செய்ய வேண்டும்.

துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் சூரியன் அனைத்து விஷயங்களிலும் நல்ல வெற்றியைப் பெற வைப்பார். உங்களின் எதிரிகள் இக்காலத்தில் தோற்கடிக்கப்படுவார்கள். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியங்கள் இக்காலத்தில் நிறைவேறும். இந்த காலகட்டத்தில் உங்களின் முழு திறமையை வெளிப்படுத்தினால், வெற்றி காண்பீர்கள். மாணவர்கள் படிப்பதற்கு வெளிநாடு செல்ல முயற்சித்தால், அதில் வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் மாணவர்கள் சற்று கவனமாக படிக்க அறிவுறுத்தப்படுகிறது. வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. என்ன தான் வேலைகளில் வெற்றி கிடைத்தால், காதல் விஷயத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் பல எதிர்பாராத முடிவுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் சந்திக்க நேரிடும். வேலைகளில் வெற்றி கிடைத்தாலும், குடும்பத்தில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து சில விரும்பத்தகாத செய்திகளைப் பெற வாய்ப்புள்ளன. சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். வாகனம் வாங்க நினைத்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் அவ்வளவு சிறப்பாக இருக்காது. ஆனால் உங்களின் ஆற்றலை சரியான விஷயத்தில் பயன்படுத்தினால் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகளை வளர விடாதீர்கள். இக்காலத்தில் உங்களின் முடிவுகள் நல்ல பாராட்டைப் பெறும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தனிமையில் இருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள்.

கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் உங்களுக்கு சாதாரணமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை கண்கள் மற்றும் எலும்புகள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். உங்கள் பேச்சை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால், அனைத்தில் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் சதிக்கு பலியாவதைத் தவிர்த்திடுங்கள்.

மீனம்
மீன ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் சற்று கலவையான பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல் வலியை சந்திக்க நேரிடும். உங்களை வீழ்த்த நினைத்தவர்கள் இக்காலத்தில் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். சமூகத்தில் உங்களின் கௌரவம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











