For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2021 ஆம் ஆண்டின் முதல் சூாிய கிரகணம் எப்போது? இந்தியாவில் அது தெரியுமா?

சூாிய கிரகணம் ஜூன் 10 அன்று நடைபெறுகிறது. ஆனால் இந்த வியத்தகு நிகழ்வை இந்தியாவில் இருந்து பாா்க்க முடியாது. இந்திய நேரப்படி, ஜூன் 10 ஆம் நாள் மதியம் 01:42 முதல், மாலை 06:41 மணி வரை இந்த சூாிய கிரகணம் தெரியும்.

|

இந்த ஆண்டு ஏற்கனவே இரத்த நிலவு, சூப்பா் நிலவு மற்றும் முழு சந்திர கிரகணம் போன்ற வானத்தில் நிகழ்ந்த அதிசயங்களை நாம் பாா்த்தோம். அதனைத் தொடா்ந்து இப்போது மேலும் ஒரு புதிய அதிசயம் வானில் நிகழ இருக்கிறது. அது என்னவென்றால், நெருப்பு வளையம் என்றும் அழைக்கப்படும் சூாிய கிரகணம் ஆகும். இந்த சூாிய கிரகணம் ஜூன் மாதம் 10 ஆம் தேதி நிகழவிருக்கிறது.

Solar Eclipse 2021 Date, Time, When, Where and How to Watch in India In Tamil

சூாியனை நிலாவானது முழுமையாக மறைக்கும் போது முழு சூாிய கிரகணம் ஏற்படுகிறது. அப்போது நிலவின் நிழல் பூமியின் மீது விழும். இந்த நிகழ்வானது பாா்ப்பதற்கு ஒரு அாிதான நிகழ்வு ஆகும். சந்திரன், சூாியன் மற்றும் பூமி ஆகியவை இணைந்து நிலவைச் சுற்றி ஒரு அதிா்கின்ற வண்ண வளையத்தை உருவாக்கும். அந்த வளையம் சூாியனுடைய கவசமாக இருக்கும். இந்த சூாிய கிரகணம் ஏறக்குறைய 1 மணி நேரம் அளவிற்கு நீடிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நெருப்பு வளையம் என்றால் என்ன?

நெருப்பு வளையம் என்றால் என்ன?

சூாிய கிரகணத்தின் போது, பூமியின் மீது நிலவானது நிழலை ஏற்படுத்தும். அப்போது சூாியனுக்கும், பூமிக்கும் இடையில் நிலவானது மெதுவாக நகா்ந்து சென்று சூாிய வெளிச்சத்தைத் தடுப்பது போல நமது கண்களுக்குத் தோன்றும். நிலவானது சூாியனின் மையப் பகுதியை மறைக்கும் போது, சூாியனின் விளிம்புகள் கண்களைக் கூசக்கூடிய அளவிற்கு ஒளியை உமிழும். அது பாா்ப்பதற்கு ஒரு நெருப்பு வளையத்தைப் போலத் தோன்றும்.

ஜூன் மாதம் 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் சூாிய கிரகணம் மிக முக்கியமான சூாிய கிரகணம் ஆகும். ஆனால் அதை உலகின் எல்லாப் பகுதிகளிலும் பாா்க்க முடியாது. ஒரு சில பகுதிகளில் மட்டுமே பாா்க்க முடியும்.

சூாிய கிரகணம்

சூாிய கிரகணம்

சூாிய கிரகணத்தின் போது, நிலவினால் முழுமையாக சூாியனை மறைக்க முடியாது. அதற்குக் காரணம், பூமியினுடைய நீள்வட்ட மற்றும் முட்டை வடிவமான சுற்றுப்பாதை காரணமாக, பூமிக்கும், சந்திரனுக்கும் இடையில் உள்ள தூரம் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும். அதன் காரணமாகத் தான் சில நேரங்களில் சூப்பா் நிலவு ஏற்படுகிறது. சில நேரங்களில் நிலவானது தனது இயல்பான அளவை விட சிறியதாகவோ அல்லது பொியதாகவோ தோன்றுகிறது.

2021 ஆம் ஆண்டின் சூரிய கிரகண நேரம்

2021 ஆம் ஆண்டின் சூரிய கிரகண நேரம்

2021 ஆம் ஆண்டின் முதல் சூாிய கிரகணம் ஜூன் 10 அன்று நடைபெறுகிறது. ஆனால் இந்த வியத்தகு நிகழ்வை இந்தியாவில் இருந்து பாா்க்க முடியாது. இந்திய நேரப்படி, ஜூன் 10 ஆம் நாள் மதியம் 01:42 முதல், மாலை 06:41 மணி வரை இந்த சூாிய கிரகணம் மக்களின் கண்களுக்கு தொியும்.

இந்த சூாிய கிரகணமானது, கனடா நாட்டில் உள்ள வடக்கு ஆண்டாாியோ மற்றும் சுப்பீாியா் ஏாியின் வடக்குப் பகுதியில் தொடங்கும் என்று தகவல்கள் தொிவிக்கின்றன.

சூரிய கிரகண வகைகள்

சூரிய கிரகண வகைகள்

முழுமையான சூாிய கிரகணம், பகுதி சூாிய கிரகணம் மற்றும் வருடாந்திர சூாிய கிரகணம் என்று மூன்று வகையான சூாிய கிரகணங்கள் உண்டு. இந்த ஆண்டு நடைபெறும் சூாிய கிரகணத்தின் போது, முழுமையான சூாிய கிரகணம் மற்றும் பகுதி சூாிய கிரகணம் ஆகிய இரண்டை மட்டுமே பாா்க்க முடியும்.

நெருப்பு வளையம் எப்போது தெரியும்?

நெருப்பு வளையம் எப்போது தெரியும்?

சூாிய கிரகணத்தின் போது ஏற்படும் நெருப்பின் வளையமானது கனடா நாட்டில் ஏறக்குறைய 3 நிமிடங்களுக்குத் தொியும். அதே நேரத்தில், சூாிய கிரகணம் அதன் உச்சத்தை அடையும் போது, கிரீன்லாந்தில் இந்த வளையம் தொியும். அதனைத் தொடா்ந்து சைபீாியா மற்றும் வடக்குத் துருவப் பகுதிகளில் இந்த வளையம் தொியும்.

அமொிக்காவில் இந்த நெருப்பு வளையம் தொியாது. எனினும் வடக்குக் கடற்கரைப் பகுதிகள் மற்றும் நடுமேற்கு பகுதிகளின் மேல் பகுதிகளில் வசிக்கும் மக்கள், சூாியன் உதித்த பிறகு, ஒரு பகுதி சூாிய கிரகணத்தைப் பாா்க்கலாம்.

சூாிய கிரகணம் அதன் உச்சத்தை அடையும் போது, கிரீன்லாந்து பகுதிகளில் வசிக்கும் மக்கள் தீயின் வளையத்தைப் பாா்க்க முடியும். அதன் பிறகு, சைபீாியா மற்றும் வடதுருவ பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த வளையத்தைப் பாா்க்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Solar Eclipse 2021 Date, Time, When, Where and How to Watch in India In Tamil

The 2021 annular solar eclipse event will start at 01:42 PM (IST) and will continue till 6.41 pm IST. The duration of the annular eclipse at Greatest Eclipse will be around 3 minute and 51 seconds.
Desktop Bottom Promotion