For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆனந்த வரம் அருளும் அஷ்டலட்சுமிகள் - காலை நீட்டி சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா?

திருமாலின் மார்பில் வசிக்கிறாள் அன்னை மகாலட்சுமி. அந்த திருவேங்கடமுடையானை வணங்கும் முன்பாக அலமேல் மங்காபுரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அலமேல் மங்கையை வணங்கினால் போது அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைக

|

திருமாலின் மார்பில் வசிக்கிறாள் அன்னை மகாலட்சுமி. அந்த திருவேங்கடமுடையானை வணங்கும் முன்பாக அலமேல் மங்காபுரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அலமேல் மங்கையை வணங்கினால் போது அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். செல்வத்தை தரும் மகாலட்சுமி மட்டுமல்லாமல் எந்தெந்த லட்சுமி நம் உடலின் எந்தெந்த பாகங்களில் இருக்கிறார்கள் எனப் பார்ப்போம்.

அலமேல் மங்கையாக திருவேங்கடமுடையானின் திருமார்பில் உறையும் அன்னை மகாலட்சுமி தன்னை வணங்குபவர்களுக்கு பதினாறு பேறுகளையும் வழங்கி வள்ளலாக திகழ்கிறார். வில்வமரத்தில் ஸ்ரீ மகாலட்சுமி வாசம் செய்கிறாள். வில்வத்தால் அர்ச்சனை செய்வதும் வில்வமரத்தைப் பேணுவதும் ஸ்ரீ மகாலட்சுமிக்குப் பிரியமானதாகும்.

Sixteen Forms of the Goddess Lakshmi

நல்லதை மட்டுமே நினைத்து நல்லதை செய்பவர்களுக்கு அஷ்டலட்சுமிகளின் அருள் கிடைக்கும். முன்னோர்கள் ஏதாவது ஒருவிசயம் சொன்னால் அதை நாம் கேட்க வேண்டும். காரணமில்லாமல் அவர்கள் எதையும் சொல்ல மாட்டார்கள். காலை நீட்டிக்கொண்டு சாப்பிடக்கூடாது என்றும் பெரியவர்களை மதிக்க வேண்டும் என்றும் சொல்லி வைத்திருக்கின்றனர். செல்வத்தை தரும் மகாலட்சுமி மட்டுமல்லாமல் அஷ்ட லட்சுமிகளும் நம் உடலில் வாசம் செய்கின்றனர். நவராத்திரி ஆறாம் நாளில் அஷ்ட லட்சுமிகளும் பதினாறு வகையான பேறுகளும் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆதிலட்சுமி

ஆதிலட்சுமி

மகாலட்சுமி பாற்கடலிலிருந்து தோன்றியது அமாவாசை தினத்தில் தான். அமாவாசை தினத்தன்று ஆதிமகாலட்சுமிக்குப் பூஜை செய்வது மிக மிக விசேடமானது. இந்த ஆதி மகாலட்சுமி முக்கோணத்தின் நடுவில் காமேச்வரி என்ற திரு நாமத்துடன் வீற்றிருக்கிறாள். முக்கோண வடிவில் உள்ள யந்திரத்தில் மூன்று பக்கங்களிலும் ஐந்து, ஐந்து லட்சுமிகளால் சூழப்பட்டு நடுவில் ஆனந்தமாக வீற்றிருக்கிறாள். இவளது அம்சங்களே மற்றைய பதினைந்து லட்சுமிகளாகும். ஆதிலட்சுமி நம் பாதங்களில் வசிக்கிறாள், நம் பாதம் பிறர்மீது தெரியாமல் பட்டால் சிவ சிவ எனக்கூறி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் ஆதிலட்சுமி நம்மை விட்டு விலகி விடுவாள் என்பது ஐதீகம்.

MOST READ: காந்தி சொன்ன இந்த 5 விஷயம்... உலகத்துல இருக்கிற எல்லாருக்கும் பொருந்தும்...

கஜலட்சுமி

கஜலட்சுமி

தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்தமும் வாசம் செய்வாள். குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் லஷ்மி கடாட்சம் ஏற்படும். கஜலட்சுமி நம் முழங்கால் பகுதியில் வசிக்கிறாள். அதனால்தான் காலை நீட்டியபடி படிக்க, சாப்பிடக்கூடாதென முன்னோர்கள் சொல்வர். அரிசி இவைகளை கால்களால் மிதிப்பதாலும் நம்மை விட்டு கஜலட்சுமி விலகுவாள்.

விஜயலட்சுமி

விஜயலட்சுமி

வீர்ய லட்சுமி நம் இடுப்புக்கு கீழ் பகுதியில் வசிக்கிறாள். பிறரை நித்திப்பதன் மூலம் சாபம் பெறுபவர்களை விட்டு இந்த வீர்யலட்சுமி விலகுகிறாள். மனிதனுக்கு எவ்வளவு செல்வங்கள், மதிப்பு இருந்தாலும் அவனுக்கு செல்வாக்கு என்பதும் அவசியம் வேண்டும். எதை எடுத்துச் செய்தாலும் அதில் வெற்றியைக் காண வேண்டும். அதற்கு அருள்புரியும் விஜயலட்சுமியை வணங்கி அந்த பாக்கியத்தைப் பெறலாம். நம் இடது தொடையில் வசிப்பவள் விஜயலஷ்மி. இடது தொடை எப்போதும் மனைவி கணவனுக்குச் சொந்தம். எனவே மனைவி கணவனை விடுத்து பிறன்மனை நோக்கினால் இந்த விஜயலட்சுமி விலகி விடுவாள்.

சந்தானலட்சுமி

சந்தானலட்சுமி

மனிதனுக்கு அழகு, செல்வம், செல்வாக்கு என பல பாக்கியங்கள் இருந்தாலும், அவனுக்கு குழந்தை இருந்தால்தான் அவன் பெருமை அடைகிறான். அது நல்ல குழந்தையாகவும் இருக்க வேண்டும். இதற்கு அருள்புரிபவள் சந்தான லட்சுமி. அவளை வணங்கினால் சந்தான பாக்கியம் கிடைக்கும். வலது தொடையில் வசிப்பவள் சந்தானலஷ்மி. பெற்றோர்கள் கன்னிகாதானம் செய்யும்போது பெண்ணை வலது தொடையில் அமர வைக்க வேண்டும். இடது தொடையிலோ இரு தொடைகள் இடையே அமர வைத்தால் இந்த சந்தானலஷ்மி விலகி விடுவாள். தான்யலட்சுமி நமது வயிற்றுப் பகுதியில் வசிக்கிறாள். எச்சில் உணவு, ஊசிப்போன உணவு இவைகளை ஏழைகளுக்கோ, பிறருக்கோ கொடுத்தால் தான்ய லட்சுமி விலகி விடுவாள்.

MOST READ: இந்தியா - பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து - முஸ்லீம் ஓரினச்சேர்க்கை தம்பதி...

தைரியலட்சுமி

தைரியலட்சுமி

நம்மையும், நமது மனைவி, மக்கள், செல்வம் போன்றவற்றையும் காப்பாற்றிக் கொள்ள நம்மிடம் வீரம் இருக்க வேண்டும். இந்த வீரத்தை அளிப்பவள் வீரலட்சுமி. வீர லட்சுமியை வணங்கினால் இந்த பாக்கியத்தைப் பெறலாம். தைரியலட்சுமி நமது நெஞ்சுப் பகுதியில் வசிக்கிறாள். உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்கள் பிறரைக் குறைக்கூறி குடும்பத்தை கெடுப்பவர்களை, நெஞ்சறிய பொய் சொல்பவர்களை விட்டு தைரிய லட்சுமி விலகி விடுவாள்.

தாலியின் முக்கியம்

தாலியின் முக்கியம்

கல்வி என்பது தொழிற்கல்வி, வாழ்க்கைக் கல்வி, அறிவுக்கல்வி போன்று பலவகைப்பட்டது. இவை அனைத்தையும் அடைந்தாலும் வித்தை என்பது "ஸ்ரீவித்யை' என்று கூறப்படும் காமேச்வரியின் பஞ்சதசீ மந்திரங்களேயாகும். இந்த மந்திர சக்தியினால் எதையும் சாதிக்க முடியும். அதனை அடைவதற்கு வித்யா லட்சுமியின் அருள் வேண்டும். வித்யாலட்சுமி நமது கழுத்துப் பகுதியில் வசிக்கிறாள். கழுத்தில் ஒரு ருத்ராட்சம் அணியாதவனும், பூணூல், தாலி என குடும்ப பராம்பரிய சின்னத்தை அணியாதவர்களை விட்டு வித்யா லட்சுமி விலகுவாள்.

குங்குமத்தில் லட்சுமி

குங்குமத்தில் லட்சுமி

செளபாக்யலஷ்மி நம் நெற்றியின் மத்தியில் வசிக்கிறாள். குங்குமம் வைக்காதவர்களையும், வகிட்டில் குங்குமம் வைக்காமல் இருப்பதாலும் விபூதி, நாமம் என அவரவர் சின்னத்தை அணியாவிட்டாலும் நம்மை விட்டு சௌபாக்ய லட்சுமி விலகுகிறாள். போகும் இடத்தில் நமக்கு வரவேற்பு நன்றாக இருந்தாலும், நமது சௌபாக்கியங்கள் நல்ல முறையில் இருக்க வேண்டும். அதாவது நல்ல மனைவி, நல்ல கணவன், வீடு, வாகனம், மற்ற வசதிகள் என பலவிதங்களில் நன்மை ஏற்பட சௌபாக்கிய லட்சுமியின் அருள் வேண்டும். அதற்காக சௌபாக்கிய லட்சுமியை மனதில் நினைத்து வழிபட வேண்டும்.

சௌந்தர்ய லட்சுமி

சௌந்தர்ய லட்சுமி

நாம் யாரையாவது பார்க்கப் போனால் முதலில் நம் முகத்தைத்தான் பார்ப்பார்கள். முக வசீகரம் இருந்தால்தான் அவர்கள் நம்மை வரவேற்பார்கள். இதற்கு "சௌந்தர்ய லட்சுமீகரம்" என்று பெயர். இந்த பாக்கியம் நமக்கு எப்போதும் இருக்க வேண்டும். இதற்காக முதல் லட்சுமியான சௌந்தர்ய லட்சுமியைப் பூஜை செய்ய வேண்டும். எவ்வளவு அழகும் செல்வங்களும் இருந்தாலும், நமது பெயர் சமூகத்தில் பல பேருக்குத் தெரிந்திருக்க வேண்டும். இத்தகைய கீர்த்தியைத் தருபவள் கீர்த்தி லட்சுமி. அவளை வணங்கினால் கீர்த்தியுடன் வாழலாம்.

MOST READ: சுமாரான கலரா இருக்கோம்னு கவலைப்படறீங்களா? இந்த மேக்கப் போடுங்க... பளிச்னு தெரிவீங்க...

ஞான லட்சுமி

ஞான லட்சுமி

பல முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்க வேண்டிய சூழல் நமக்கு ஏற்படும். அதில் சரியான முடிவைத் தீர்மானிக்க புத்தி சரிவர வேலை செய்ய வேண்டும். அதற்கு மேதா லட்சுமியின் அருள் வேண்டும். அவளை வணங்கினால் அந்த பாக்கியம் கிடைக்கும். வாழ்க்கையில் எல்லா சுகங்களையும் அனுபவித்தாலும் அவ்வளவு சுகங்களும் நிலையானது அல்ல. நாம் ஆசைப்பட்ட பொருட்கள் யாவும் ஒரு காலகட்டத்தில் நம்மை விட்டுப் பிரிந்து விடும் என்ற அறிவு நமக்கு இருந்தால், நாம் அதற்குப் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அந்த அருளை நமக்கு அளிப்பவள் ஞானலட்சுமி ஆவாள்.

துஷ்டி லட்சுமி

துஷ்டி லட்சுமி

எல்லா பாக்கியங்களும் இருந்தாலும் எவரிடமும் சொல்லிக் கொள்ள முடியாதபடி மனவேதனையும் இருக்கும். அந்த மனவேதனையை அகற்றி ஆனந்தத்தை அளிப்பவள் துஷ்டி லட்சுமி ஆவாள். வெளியுலகில் நாம் பழகும்போது நம்முடைய சரீரத்தைக் கண்டு எவரும் அருவருப்புக் கொள்ளாமல் இருக்க வேண்டும். அந்த பாக்கியத்தைப் பெற புஷ்டி லட்சுமியின் அருள் அவசியம் வேண்டும்.

சாந்தி லட்சுமி

சாந்தி லட்சுமி

இறை அருளால் எல்லாவித பாக்கியங்களை நாம் அடைந்திருந்தாலும், நம் உடலிலும் மனதிலும் சக்தி வேண்டும். எல்லா காரியங்களையும் சாதிக்க வேண்டுமானால் மனோ பலம் அவசியம் தேவை. இதனைப் பெற சக்தி லட்சுமியை வணங்கினால் போதும். எவ்வளவு செல்வம், செல்வாக்கு இருந்தாலும் ஏதோ ஒன்று மனதை உறுத்திக் கொண்டு நமது அமைதியைக் கெடுத்து வரும். அத்தகைய தொல்லைகள் எதுவும் இல்லாமல் இருக்க சாந்தி என்னும் அமைதி அவசியம் வேண்டும். இந்த அருளைப் பெற சாந்தி லட்சுமியை வணங்க வேண்டும்.

சாம்ராஜ்ய லட்சுமி

சாம்ராஜ்ய லட்சுமி

மனிதனுக்குப் பெருமை என்பது மிக மிக அவசியம். வீட்டில் குழந்தைகள் நம்மை மதிக்க வேண்டும். மனைவி பெருமை கொள்ள வேண்டும். நல்ல மனைவியை அடைந்ததற்கு கணவனும் பெருமை கொள்ள வேண்டும். சமூகத்தில் ஒரு உயரிய அந்தஸ்து கிடைக்க வேண்டும். இந்த பாக்கியங்களைப் பெற சாம்ராஜ்ய லட்சுமியின் கடாட்சம் தேவை.

MOST READ: சொந்த வீடு வேணும் கடன் வாங்க கூடாது... - செவ்வாய்கிழமையில் இதை பண்ணுங்க

ஆரோக்கிய லட்சுமி

ஆரோக்கிய லட்சுமி

மனிதனுக்கு எல்லா வசதிகளும் இருந்து உடல் ஆரோக்கியம் இல்லையென்றால் எந்த வசதிகளையும் அனுபவிக்க முடியாது. உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மேற்கூறப்பட்ட பதினான்கு லட்சுமிகளின் அருளைப் பெற்றதன் பலன்களைப் பெற முடியும். அந்த உடல் ஆரோக்கியத்தைப் பெற ஆரோக்கிய லட்சுமியின் அருள் தேவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: lakshmi
English summary

Sixteen Forms of the Goddess Lakshmi

Mahalakshmi is found in the heart of Vishnu and thus represents the embodiment of love. It is through the love of Lakshmi that the atman, in the inner soul, is able to connect with the absolute consciousness of Brahman. The goddess Lakshmi therefore plays a critical role for her devotees. She is a mother figure people look up to and hope to emulate.the eight forms of Lakshmi are either manifested or unmanifested, hence why there are 16 forms.
Story first published: Friday, October 4, 2019, 15:36 [IST]
Desktop Bottom Promotion