Latest Updates
-
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் பேய்கள் இருப்பது உறுதி... பத்திரமா இருங்க...!
இதுவரை பேய்களைப் பற்றி நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளின் படியும் அவற்றின் மீது இருக்கும் நம்பிக்கை படியும் ஒரு இடத்தில் பேய் இருப்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டறிந்து விடலாம்.
பேய் இருக்கிறதா? இல்லையா? இந்த கேள்விக்கான பதில் பல நூற்றாண்டுகள் ஆகியும் இன்றும் கிடைக்கவில்லை. உலகம் முழுவதும் இதன் மீதான விவாதங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பேய்களைப் பற்றியும் அவற்றின் சக்தியை பற்றியும் உலகம் முழுவதும் பல ஆராயச்சிகள் நடந்து கொண்டு இருக்கிறது. ஏனெனில் இந்த உலகில் பேய்களின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர்.

இதுவரை பேய்களைப் பற்றி நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளின் படியும் அவற்றின் மீது இருக்கும் நம்பிக்கை படியும் ஒரு இடத்தில் பேய் இருப்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டறிந்து விடலாம். பெரும்பாலும் பேய்கள் வீட்டின் தனிமையான இடத்தில்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. உங்கள் வீட்டில் பேய் இருக்கிறதா என்பதை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் உங்கள் வீட்டில் பேய் இருப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பின்தொடர்ந்து வருவது
இதனை பல படங்களில் நாம் பார்த்திருப்போம். இது ஒரு வகையில் உண்மையும் கூட, வீட்டில் தனிமையில் இருக்கும்போது யாராவது உங்களை பின்தொடர்ந்து வருவது போலவோ அல்லது யாராவது உங்கள் அருகில் இருக்கிறது போன்ற உணர்வோ இருந்தால் உங்கள் வீட்டில் ஆன்மாக்கள் இருக்க அதிக வாய்ப்புள்ளது.

பொருட்கள் இடம் மாறுவது
வீட்டில் நாம் வைக்கும் பொருட்களை எங்கு வைத்தோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்வது கொஞ்சம் கடினமான காரியம்தான். நாம் ஒரு இடத்தில் வைக்கும் பொருள் வேறு ஒரு இடத்தில் இருந்து சில சமயம் கிடைக்கும், நாமும் அதனை மறதியில் அலட்சியமாக விட்டுவிடக் கூடாது. ஏனெனில் இது உங்கள் வீட்டில் பேய்கள் இருப்பதற்கான அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது.

குரல் கேட்பது
இதற்கு நமது உளவியல்ரீதியான பிரச்சினைகளும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் இது ஆன்மா இருப்பதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம். வீட்டில் அனைவரும் இருந்தாலும் உங்கள் காதுகளில் ஏதாவது குரல் கேட்டல் உங்கள் வீட்டில் பேய் இருப்பது பெரும்பாலும் உறுதி செய்யப்படுகிறது.

உடல்நிலை மோசமாகுதல்
தீய ஆன்மாக்கள் இருக்கும் இடத்தில் எப்பொழுதும் எதிர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். இந்த சக்திவாய்ந்த எதிர்மறை ஆற்றல் நமது ஆராவின் மீது பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் நமது உடல்நிலை மோசமாக வாய்ப்புள்ளது. உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அடிக்கடி உடல்நிலை கோளாறுகள் வந்தால் உங்கள் வீட்டில் தீய ஆன்மாக்கள் இருக்க வாய்ப்புள்ளது.

செல்லப்பிராணிகள்
மனிதர்களின் பார்வைக்கும், மிருகங்களின் பார்வைக்கும் பல வித்தியாசங்கள் இருக்கிறது. பொதுவாக மனிதர்களின் கண்களுக்கு தெரியாத பல அமானுஷ்ய நிகழ்வுகள் மிருகங்களின் கண்களுக்கு தெரியும். உங்கள் வீட்டில் செல்லப்பிராணிகள் இருந்து அவை வித்தியாசமாக நடந்து கொண்டால் உங்கள் வீட்டில் ஆன்மாக்கள் இருக்க வாய்ப்புள்ளது.

எலெக்ட்ரானிக் கோளாறுகள்
உங்கள் வீட்டில் ஆன்மாக்கள் இருந்து அவை தங்களின் இருப்பை உங்களுக்கு உணர்த்த விரும்பினால் அவை முதலில் கையெலெடுப்பது மின்சார சாதனங்களைதான். காரணமில்லாமல் அடிக்கடி எலக்ட்ரிக்கல் கோளாறுகள் ஏற்பட்டாலோ அல்லது மின்சாதனங்கள் செயல்படாமல் போனாலோ உங்கள் வீட்டில் ஆன்மா இருப்பதும் அவை உங்களுடன் தொடர்பு கொள்ள விரும்புவதையும் குறிக்கும்.

பாண்டம் மேனியா
இது மிகவும் ஆபத்தான ஒரு அறிகுறி ஆகும், இந்த அறிகுறி இருந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் ஆன்மா நட்புரீதியான ஆன்மா இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டும். தூங்கும்போது யாராவது உங்களை கீழ்நோக்கி இழுப்பது போலவோ அல்லது கழுத்தை நெரிப்பது போலவோ உணர்ந்தால், காலையில் எழும்போது உங்கள் உடலில் அங்கங்கே கடிக்கப்பட்ட காயங்களோ அல்லது நகக்கீறல்களோ இருந்தால் உங்கள் வீட்டில் ஆபத்தான ஆன்மா உள்ளது என்று அர்த்தம். உடனடியாக அந்த இடத்தை விட்டு காலி செய்து விடுங்கள்.



Click it and Unblock the Notifications
