For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்ல புகுந்து ராத்திரி முழுக்க கூத்தடித்த ஏலியன்... திகிலில் உறைந்த மனிதர்... நீங்களே பாருங்க

இந்தோனேசியாவில் பாலி பகுதியில் வசிக்கும் ஹேரி டோ என்ற மனிதர், தன் வீட்டுக்குள் வந்த வித்தியாசமான பூச்சியைக் கண்டு அதிர்ந்து போய்விட்டார். அந்த சுவாரஸ்ய கதை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

|

பூச்சி, புழு இவற்றை பார்த்தாலே சிலர் திகிலடைந்து விடுவார்கள். வீட்டுத் தோட்டங்களுக்கு வரும் பூச்சிகளை பார்த்தாலே பயப்படும் மக்கள், இதுவரை பார்த்திராத விசித்திரமான ஒரு பூச்சியை பார்த்தால் என்ன செய்வார்கள்?

Sight of Bizarre Alien-Like Creature Stumps Man

இந்தோனேசியாவில் பாலி பகுதியில் வசிக்கும் ஹேரி டோ என்ற மனிதர், தன் வீட்டுக்குள் வந்த வித்தியாசமான பூச்சியைக் கண்டு அதிர்ந்து போய்விட்டார். வீட்டினுள் மேற்கூரையில் ஒட்டிக்கொண்டிருந்த அந்த உயிரினத்துக்கு இரண்டு இறக்கைகள் இருந்ததாகவும் வெவ்வேறு நீளங்களில் நான்கு உணர்கொம்புகள் இருந்ததாகவும் ஹேரி விளக்கியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 விசித்திர பூச்சி

விசித்திர பூச்சி

இந்தோனேசியாவில் பாலி பகுதியில் வசிக்கும் ஹேரி டோ என்ற மனிதர், தன் வீட்டுக்குள் வந்த வித்தியாசமான பூச்சியைக் கண்டு அதிர்ந்து போய்விட்டார். வீட்டினுள் மேற்கூரையில் ஒட்டிக்கொண்டிருந்த அந்த உயிரினத்துக்கு இரண்டு இறக்கைகள் இருந்ததாகவும் வெவ்வேறு நீளங்களில் நான்கு உணர்கொம்புகள் இருந்ததாகவும் ஹேரி விளக்கியுள்ளார். மேலும் கீழும் அசைந்து கொண்டிருந்த அந்த உயிரினத்துக்கு பூச்சிகளுக்கு இருப்பதைப் போன்ற கால்களும் இருந்தனவாம்.

MOST READ: மொபைல் அதிகமா யூஸ் பண்ணதால வெறிபிடித்து சுவரில் போய் முட்டிக்கொள்ளும் இளைஞன்...

வேற்றுகிரக உயிரினமா?

வேற்றுகிரக உயிரினமா?

ஹேரி டோ, அது வாழ்நாளில் தாம் பார்த்திராத ஒன்று என்பதால் அதைப் பற்றி எப்படி விளக்குவது என்பது தெரியாமல், வேடிக்கையாக, வேற்றுகிரக உயிரினம் போல் இருந்தது என்று கூறியுள்ளார். ஹேரி டோ கூறுவது என்ன என்று புரியாமல் மற்றவர்கள் திகைத்தனர்.

அந்துப்பூச்சி

அந்துப்பூச்சி

ஹேரி டோ பார்த்த உயிரினம், அந்துப்பூச்சி வகையை சேர்ந்தது என்பது பின்னர் தெரிய வந்தது. அந்துப்பூச்சியினத்தில் ஆர்ட்டைனா என்ற பூச்சிக்குடும்பம் உள்ளது. அக்குடும்பத்தில் உள்ள கிரிடோநோடோஸ் கஞ்சிஸ் என்ற பூச்சியை போன்றே இப்பூச்சியின் சில நடவடிக்கைகள் இருந்ததும் தெரிய வந்தது. இவ்வகைப் பூச்சிகள் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் காணப்படுபவையாகும்.

MOST READ: 24 மணிநேரம் வேலை செஞ்சாலும் கையில காசு நிக்கவே மாட்டேங்குதா? அது ஏன்னு காரணம் தெரியுமா?

பூச்சியுடன் ஓரிரவு

பூச்சியுடன் ஓரிரவு

என்ன தான் அது விசித்திரமாக, பார்க்க பயத்திற்குரிய பூச்சியாக இருந்தாலும் வீட்டுக்கு வந்த விருந்தினர்களை வெளியே விரட்டக்கூடாது என்று எண்ணினார் ஹேரி டோ. அந்தப் பூச்சிக்கும் இரவு தங்குவதற்கு ஓரிடம் தேவையாகவே இருந்தது. அந்த இரவை வேற்றுகிரக உயிரினம்போன்று தோற்றமளித்த அந்தப் பூச்சியுடன் கழித்தார் ஹேரி டோ. உண்மையில் ஹேரி டோவின் தைரியத்தை பாராட்ட வேண்டும்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sight of Bizarre Alien-Like Creature Stumps Man

Creepy crawling insects and worms often give us goosebumps. People cannot handle the sight of them. But what happens when you get to see something that looks completely alien to the insect and worms category?
Desktop Bottom Promotion