Just In
- 4 min ago
இந்த சக்திவாய்ந்த மூலிகைகளில் ஒன்றை எடுத்துக்கொண்டாலும் நீங்கள் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாமாம்...!
- 52 min ago
குரு-சனி உருவாக்கும் அகண்ட சாம்ராஜ்ய யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 1 hr ago
நீங்க டீ அல்லது காபியை சூடா குடிக்கிறீங்களா? அப்ப உங்களுக்கு இந்த புற்றுநோய் வர அதிக வாய்பிருக்காம்!
- 1 hr ago
சாணக்கிய நீதியின் படி உங்க வீட்டில் இந்த அறிகுறிகள் இருந்தால் கெட்ட நேரம் உங்களை நெருங்கிவிட்டதாம்...ஜாக்கிரதை
Don't Miss
- Movies
திடீரென டிவிட்டரில் ட்ரெண்டாகும் ரஞ்சிதமே... ஓடிடிக்கு முன்பே HD பிரிண்டில் ரிலீஸான வாரிசு..?
- News
பெரிய ட்விஸ்ட்.. ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ் பெற்றது எதற்காக தெரியுமா! மருது அழகுராஜ் சொன்ன முக்கிய தகவல்
- Finance
மோடி அரசின் அறிவிப்பால் 1 கோடி பேருக்கு லாபம்.. யாருக்கு இந்த ஜாக்பாட்..!
- Automobiles
இப்படியொரு சூப்பரான ஆடி கார் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கவே இல்ல!! ரூ.2 லட்சத்தில் புக் பண்ணிடலாம்!
- Sports
தரமான செய்கை இருக்கு.. ஹர்பஜனின் முக்கிய சாதனையை உடைக்கும் அஸ்வின்.. ஆஸி, தொடரில் பெரும் வாய்ப்பு!
- Technology
டிஜிட்டல் கேமராக்களுக்கு வேலை இருக்காது போலயே: சோனி கேமராவுடன் அறிமுகமான 2 புதிய Vivo போன்கள்.!
- Travel
சென்னை to டெல்லி விமான பயணமா - டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டது பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
2023-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்க சனியின் பிடியில் இருந்து விடுபட போறாங்க..
ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாகும். மேலும் சனி என்றாலே பலரும் பயப்படுவதுண்டு. ஏனெனில் சனியின் கோபம் வாழ்க்கையையே மோசமாக்கிவிடும். பொதுவாக சனி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். அந்த வகையில் சனி பகவான் 2023 ஆம் ஆண்டில் ராசியை மாற்றப்போகிறார். அதுவும் ஆண்டின் தொடக்கமான ஜனவரி 17 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார். 30 ஆண்டுகளுக்கு பின் சனி தனது சொந்த ராசியான கும்ப ராசிக்கு செல்கிறார்.
சனி பகவான் கும்ப ராசிக்கு செல்வதால், சனியின் கோபம் சற்று குறைவதாக எதிர்பார்க்கப்படுகிறது. கும்ப ராசிக்கு செல்லும் சனியால் பல ராசிக்காரர்களின் வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்படப் போகிறது. அதுவும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பிரச்சனைகளை சந்தித்து வந்தவர்களுக்கு 2023-ல் நடக்கும் சனிப் பெயர்ச்சியில் இருந்து விடுதலை கிடைக்கப் போகிறது. இப்போது 2023-ல் நடக்கும் சனிப் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் சனியின் பிடியில் இருந்து விடுதலை பெற்று நற்பலனைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
2023-ல் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் நற்பலனைப் பெறுவார்கள். ஏனெனில் சனி மகர ராசியில் இருக்கும் போது ரிஷப ராசிக்காரர்களுக்கு பல பிரச்சனைகளைத் தந்தார். இந்நிலையில் சனி பகவான் கும்ப ராசிக்கு செல்லும் போது, சனியின் தோஷங்கள் அனைத்தும் நீங்கி நல்ல பலன்களைப் பெறுவார்கள். குறிப்பாக வேலையில் மற்றும் பயணங்களால் நல்ல ஆதாயம் உண்டாகும். போட்டியில் வெற்றி பெறுவார்கள். அதோடு நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். இதுவரை வாழ்வில் சந்தித்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள்.

மிதுனம்
சனி பகவான் மகர ராசியில் இருக்கும் போது மிதுன ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி தொடங்கியது. ஆனால் 2023-ல் சனி பகவான் கும்பம் செல்லும் போது, அஷ்டம சனியில் இருந்து மிதுன ராசிக்காரர்கள் விடுபட்டு, வாழ்வில் நன்மைகளைப் பெறப் போகிறார்கள். குறிப்பாக வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்பு பாராட்டப்படும். உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளும் நீங்கும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள்.

துலாம்
2020 ஆம் ஆண்டு முதல் மகர ராசியில் பயணித்து வந்தால். இதனால் துலாம் ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி தொடங்கியது. ஆனால் 2023-ல் நடக்கும் சனிப் பெயர்ச்சியில் இருந்து துலாம் ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி முடிந்து, கடந்த இரண்டரை ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். பிரிந்து இருந்தவர்கள் இந்த ஆண்டில் நெருங்கி வருவார்கள். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பல வழிகளில் இருந்து வருமானம் கிடைக்கும்.

தனுசு
2023-ல் கும்ப ராசிக்கு செல்லும் சனி பகவானால் தனுசு ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து முழுமையாக விடுபடுகிறார்கள். இனிமேல் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் ஓரளவு ஸ்திரத்தன்மை இருக்கும். மன அழுத்தத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். உங்கள் நிதி வலுவாக இருக்கும். கடந்த காலத்தில் செய்த கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். வேலையில் உங்கள் செல்வாக்கும் நிலையும் அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்பும் கிடைக்கலாம். குடும்ப வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். பெற்றோர் மற்றும் மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)