For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எச்சரிக்கை... சனிக்கிழமைகளில் இந்த விஷயங்களை செஞ்சா சனிபகவானின் கோபத்துக்கு ஆளாவீங்க...

சனிக்கிழமை நீதிமான் சனிபகவானுக்கு உரிய நாள். இந்நாளில் சனிபகவானை வணங்கினால், அவரது அருளைப் பெறலாம். அதோடு சனிக்கிழமைகளில் ஒருசில விஷயங்களை செய்யக்கூடாது. ஏனெனில் அந்த விஷயங்கள் சனி பகவானை கோபப்படுத்தும்.

|

இந்து மதத்தில் வாரத்தின் ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு கடவுளை வழிபடுவதற்கு விசேஷமாக கருதப்படுகிறது. இவற்றில் திங்கட்கிழமை சிவபெருமானை வழிபடுவதற்கு சிறந்தது. செவ்வாய்க்கிழமை அனுமன் மற்றும் துர்கையை வழிபட ஏற்றது. புதன்கிழமை விநாயகருக்குரியது. வியாழக்கிழமை விஷ்ணு மற்றும் சரஸ்வதி தேவிக்குரியது. வெள்ளிக்கிழமை லட்சுமி தேவிக்குரியது. சனிக்கிழமை சனீஸ்வரன், காளி தேவி, அனுமன், பைரவருக்கும் , ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கும் உரியதாக கருதப்படுகிறது.

Shani Dev Gets Angry If You Do TheseThings On Saturday

இத்தகைய சூழ்நிலையில் இன்று சனிக்கிழமை. நீதிமான் சனிபகவானுக்கு உரிய நாள். இந்நாளில் சனிபகவானை வணங்கினால், அவரது அருளைப் பெறலாம். அதோடு சனிக்கிழமைகளில் ஒருசில விஷயங்களை செய்யக்கூடாது. ஏனெனில் அந்த விஷயங்கள் சனி பகவானை கோபப்படுத்தும். கீழே சனி பகவானைக் கோப்படுத்தக்கூடிய சனிக்கிழமைகளில் ஒருவர் செய்யக்கூடாத விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரும்பு பொருட்களை வாங்காதீர்

இரும்பு பொருட்களை வாங்காதீர்

சனிக்கிழமைகளில் இரும்புப் பொருட்களை வாங்குவது கெட்டதாக கருதப்படுகிறது. எனவே இந்நாளில் இரும்பு தொடர்பான எந்த பொருளையும் வீட்டிற்கு கொண்டு வரவோ அல்லது வாங்கவோ வேண்டாம். இலவசமாகக் கொடுத்தால் கூட இரும்பு பொருட்களை வாங்காதீர்கள். ஏனெனில் சனிக்கிழமைகளில் இரும்புப் பொருட்களை வாங்கினால் சனிபகவான் எரிச்சலைவார் என்று நம்பப்படுகிறது. முக்கியமாக ஏழரை சனி நடப்பவர்கள் இந்நாளில் இரும்புப் பொருட்களை வாங்கக்கூடாது. ஆனால் இந்த பொருட்களை தானமாக வழங்கலாம். இது தரவிர, லெதர், கருப்பு எள்ளு, கருப்பு நிற துணிகள், எண்ணெய், நிலக்கரி, துடைப்பம் மற்றும் இங்க் ஆகியவற்றை வாங்குவதும் கெட்டதாக கருதப்படுகிறது.

உப்பை வாங்காதீர்

உப்பை வாங்காதீர்

சனிக்கிழமைகளில் உப்பு வாங்குவதும் கெட்டதாக கருதப்படுகிறது. நம்பிக்கைகளின் படி, சனிக்கிழமைகளில் உப்பு வாங்குவது வீட்டிற்கு வறுமையைக் கொண்டு வரும். முக்கியமாக உப்பை சனிக்கிழமைகளில் கடனாக கூட வாங்கக்கூடாது.

நகம் மற்றும் முடி வெட்டக்கூடாது

நகம் மற்றும் முடி வெட்டக்கூடாது

சனிபகவானுக்குரிய நாளான சனிக்கிழமைகளில் நகம் மற்றும் முடி வெட்டுவது, ஷெவிங் செய்வது போன்ற செயல்களை செய்வது சனிபகவானை கோப்படுத்தும். தவறுதலாக கூட தாடி அல்லது முடியை வெட்டக்கூடாது. இதனால் சனி தோஷம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.

இறைச்சி மற்றும் ஆல்கஹால் அருந்துவதை தவிர்க்கவும்

இறைச்சி மற்றும் ஆல்கஹால் அருந்துவதை தவிர்க்கவும்

நீதிமானான சனி பகவானுக்குரிய நாளன்று தூய்மையான சாத்விக் உணவுகளை உண்பது சிறந்தாக கருதப்படுகிறது. எனவே இந்நாளில் எக்காரணம் கொண்டும் இறைச்சி மற்றும் ஆல்கஹாலை உட்கொள்ளக்கூடாது. அதுவும் கருப்பு உளுத்தம் பருப்பாலான கிச்சடியை செய்து சாப்பிட்டால், சனி பகவான் மிகவும் மகிழ்ச்சியடைவார். மேலும் இவ்வாறு செய்வதன் மூலம், சனி கிரக நிலைகளினால் ஏற்படும் தீய விளைவுகளும் நீங்கும் என்பது நம்பிக்கை.

யாரையும் புண்படுத்தாதீர்

யாரையும் புண்படுத்தாதீர்

பொதுவாக யாரையும் எக்காரணம் கொண்டும் மனம் புண்படும் படி பேசவோ, நடந்து கொள்ளவோ கூடாது. இதனால் பாவம் தான் சேரும். அதிலும் சனிக்கிழமைகளில் மனம் புண்படும்படி பேசினால், அது சனி பகவானை கோபப்படுத்தும். எனவே இச்செயலை அறவே தவிர்த்து, மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து நடந்து கொள்ளுங்கள்.

யாரையும் ஏமாற்றாதீர்

யாரையும் ஏமாற்றாதீர்

மற்றவர்களை ஏமாற்றி வாழ்வது என்பது கேவலமான ஒன்று. நீதிமான் சனிபகவான் அனைவரது பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நன்மைகளை வழங்கக்கூடியவர். அப்படிப்பட்டவருக்கு உரிய சனிக்கிழமை நாளில், மற்றவர்களை ஏமாற்றினால், அது சனி பகவானை மேலும் கோபப்படுத்தும்.

மற்றவர்களின் பணத்தை பறிக்க முயல்வது

மற்றவர்களின் பணத்தை பறிக்க முயல்வது

சொந்த உழைப்பால் உழைத்து சாப்பிடுவதை விட்டு, தீய எண்ணம் கொண்டு மற்றவர்களின் பணத்தின் மீது ஆசைக் கொண்டு, அவர்களின் பணத்தை பறிக்க முயல்வது இருப்பதிலேயே மிகப்பெரிய பாவச் செயல். இம்மாதிரியான பாவச் செயலை செய்தால், நிச்சயம் சனி பகவானின் கோபத்திற்கு உள்ளாகி, அவர்களின் பாவச் செயலுக்கு ஏற்ப பலன்களை பெறக்கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Shani Dev Gets Angry If You Do TheseThings On Saturday

Shani Dev gives good and bad results to the person on the basis of his deeds. Therefore, if you want to avoid the wrath of Saturn, then one should never do wrong and immoral acts.
Story first published: Saturday, August 14, 2021, 13:47 [IST]
Desktop Bottom Promotion