Latest Updates
-
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான்
Shani Asta 2022: சனி அஸ்தமனத்தால் 33 நாட்கள் இந்த 4 ராசிக்காரங்க அதிகமா கஷ்டப்பட போறாங்க.. உஷார்...
கும்ப ராசிக்கு இடம் மாறுவதற்கு முன் சனி பகவான் 33 நாட்கள் மறைந்து இருப்பார். அதன்படி சனி பகவான் ஜனவரி 22 ஆம் தேதி மறைந்து இருப்பார். அதன் பின் பிப்ரவரி 24 ஆம் தேதி சனி உதயமாகி இயல்பு நிலைக்கு திரும்புவார்.
நவகிரகங்களில் ஒருவரின் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடிய நீதிமான் தான் சனி பகவான். இந்த சனி பகவான் ஒரு ராசியில் இருந்து இடம் மாறுவதற்கு இரண்டரை ஆண்டுகள் ஆகும். இதுவரை மகர ராசியில் பயணித்து வந்த சனி பகவான் 2022 ஆம் ஆண்டில் ஏப்ரல் 29 ஆம் தேதி கும்ப ராசிக்கு இடம் மாறுகிறார். இந்த கும்ப ராசிக்கு இடம் மாறுவதற்கு முன் சனி பகவான் 33 நாட்கள் மறைந்து இருப்பார்.

அதன்படி சனி பகவான் ஜனவரி 22 ஆம் தேதி மறைந்து இருப்பார். அதன் பின் பிப்ரவரி 24 ஆம் தேதி சனி உதயமாகி இயல்பு நிலைக்கு திரும்புவார். இப்படி 33 நாட்கள் மறைந்து இருக்கும் சனி, சில ராசிக்காரர்களை மோசமாக பாதிக்கும். அதாவது இந்த 33 நாட்களில் சில ராசிக்காரர்கள் சிரமங்களையும், பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். இப்போது 2022 சனி அஸ்தமனத்தால் அதிகம் கஷ்டப்படப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கடகம்
சனி அஸ்தமனத்தால் கடக ராசிக்காரர்கள் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். வேலை செய்பவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மனக்கசப்பால், உங்களால் வேலை செய்ய முடியாது. இந்த காலத்தில் பண இழப்பிற்கான வாய்ப்புக்களும் உள்ளன. மேலும் கவனக் குறைவால் சில கடுமையான விளைவுகளையும் காணலாம்.

மிதுனம்
சனி அஸ்தமனம் மிதுன ராசிக்காரர்களுக்கு மிகுந்த வேதனையை தரும். இக்காலத்தில் உங்கள் வேலையில் ஏற்படும் தொடர்ச்சியான தோல்வியால் மிகுந்த மனம் வருத்தத்துடன் இருப்பீர்கள். ஏற்கனவே மிதுன ராசிக்காரர்கள் சனியின் தாக்கத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். எனவே இக்காலத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பார்கள். அதிகமாக பணத்தை செலவழிப்பதால் வாழ்க்கைத் துணையுடன் சண்டை ஏற்படலாம். இக்காலத்தில் கடன் கொடுப்பது அவஸ்தைப்பட வைக்கும். உத்தியோகத்தில் பிரச்சனை ஏற்படலாம். வியாபாரிகளுக்கு இந்த 33 நாட்கள் சிறப்பாக இருக்காது.

கன்னி
33 நாட்கள் சனி அஸ்தமனமாவதால், கன்னி ராசிக்காரர்களுக்கு இது மிகவும் மோசமான காலமாக இருக்கும். இக்காலத்தில் எந்த வேலையையும் செய்ய மனம் வராது. ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படும். சிறு வெற்றியை காணவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். தந்தையுடனான தகராறு காரணமாக வீட்டுச் சூழல் மோசமாக இருக்கும். அதோடு உங்களால் எந்த வேலையையும் முழு மனதுடன் செய்ய முடியாமல் அவதிப்படுவீர்கள்.

துலாம்
சனி அஸ்தமனம் துலாம் ராசிக்காரர்களுக்கும் மோசமான பலன்களைத் தரும். இக்காலத்தில் குடும்பம் மற்றும் தொழிலில், விவாதங்கள் அதிகரிப்பதால் மனதில் கவலைகள் அதிகரிக்கும். சட்ட சிக்கல்களில் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது. இதன் காரணமாக பல மனநல பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் கொஞ்சம் கவனமாக இருங்கள். உங்களுக்கு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.



Click it and Unblock the Notifications