Latest Updates
-
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா? -
சனிபெயர்ச்சியால் 2027-ல் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
செப்டம்பர் மாதத்தில் இந்த 5 ராசிக்காரங்க நிறைய பிரச்சனைகளை சந்திக்கப் போறாங்க...
2022 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாத கிரக நிலைகளால் எந்த ராசிக்காரர்களுக்கு மோசமான மாதமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலையைப் பொறுத்து 12 ராசிக்களுக்குமான பலன்கள் மாறுபடும். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டின் ஒன்பதாவது மாதமான செப்டம்பர் மாதத்தில் நுழைந்துள்ளோம். இந்த மாதத்தில் 3 முக்கிய கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன. இது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அதில் சில ராசிக்காரர்கள் நற்பலனையும், சிலர் மோசமான பலனையும் பெறுவார்கள். இப்போது 2022 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாத கிரக நிலைகளால் எந்த ராசிக்காரர்களுக்கு மோசமான மாதமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

சிம்மம்
செப்டம்பர் மாத கிரக நிலைகளால் சிம்ம ராசிக்காரர்கள் வணிகம் தொடர்பான எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுக்க இது சிறந்த மாதம் அல்ல. அனுபவசாலிகளிடம் கலந்தாலோசித்த பின்னரே எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நிதி ரீதியாக, இந்த மாதம் ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இம்மாதத்தில் எங்கும் பணத்தை முதலீடு செய்யாதீர்கள். இல்லையெனில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் செப்டம்பர் மாதத்தில் தங்கள் வேலையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரிகளுக்கு லாபம் குறைவாக இருக்கும். வணிகர்கள் விரும்பும் வெற்றியை இம்மாதத்தில் காண முடியாத. திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பணத்தை செலவழிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், பணப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.

விருச்சிகம்
செப்டம்பர் மாதம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாகவும், ஆரோக்கிய ரீதியாகவும் பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும். இந்த மாதத்தில் நிறைய பணப் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். எனவே எந்த செலவையும் கவனமாக செலவழிக்க அறிவுறுத்தப்படுகிறது. முதலீடு செய்யும் போது கவனமாக இருங்கள். இம்மாதத்தில் சில தேவையற்ற செலவுகள் வரலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறு பிரச்சனைகள் தொந்தரவு செய்து கொண்டே இருக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக செப்டம்பர் மாதம் சாதகமாக இருக்காது. தொழிலில் சில பிரச்சனைகளையும், சவால்களையும் சந்திக்க நேரிடும். இம்மாதத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். வியாபாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செப்டம்பர் மாதம் மகர ராசிக்காரர்கள் சிறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பார்கள். யோகாசனம் செய்வதால் நற்பலன் கிடைக்கும்.

தனுசு
செப்டம்பர் மாதம் தனுசு ராசிக்கார மாணவர்களுக்கு சற்று கஷ்டமானதாக இருக்கும். மாணவர்கள் அதிகம் முயற்சி செய்தால் மட்டுமே வெற்றியைப் பெற முடியும். குடும்ப வாழ்க்கையிலும் சிரமங்களை சந்திப்பார்கள். இம்மாதத்தில் உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் தகராறு ஏற்படலாம். இம்மாதத்தில் சந்திக்கும் பிரச்சனைகளை பொறுமையாக அணுக அறிவுறுத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications