Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
கும்பத்தில் சனி உதயமாவதால் இன்னும் ஒரு மாதத்தில் இந்த 4 ராசிக்காரர்களின் செல்வம் அதிகரிக்கப் போகுது...
கிரகங்கள் அஸ்தமன நிலையில் இருக்கும் போது, அது வலுவிழந்து இருக்கும் மற்றும் சற்று மோசமான பலன்களை வழங்கும். இந்நிலையில் 2023 மார்ச் 06 ஆம் தேதி சனி கும்ப ராசியில் உதயமாகிறார்.
ஜோதிடத்தில் கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். சில சமயங்களில் சில கிரகங்கள் அஸ்தமனமாகி, உதயமாகும். இப்படி கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்துமே மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி சனி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சென்றார். அதைத் தொடர்ந்து சில நாட்களிலேயே சனி 2023 ஜனவரி 30 ஆம் தேதி கும்பத்தில் அஸ்தமனமானார்.

பொதுவாக கிரகங்கள் சூரியனுக்கு மிக அருகில் செல்லும் போது, அந்த கிரகங்கள் அஸ்தமனமாகும். மேலும் கிரகங்கள் அஸ்தமன நிலையில் இருக்கும் போது, அது வலுவிழந்து இருக்கும் மற்றும் சற்று மோசமான பலன்களை வழங்கும். இந்நிலையில் 2023 மார்ச் 06 ஆம் தேதி சனி கும்ப ராசியில் உதயமாகிறார். சனி கும்ப ராசியில் உதயமாவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது கும்பத்தில் சனி உதயமாவதால் எந்த ராசிக்காரர்கள் நற்பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி உதயமாகவுள்ளார். இதனால் இனிமேல் ரிஷப ராசிக்காரர்களின் நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படப் போகிறது. சிக்கிய பணம் இக்காலத்தில் கைக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் சனி உதயத்திற்கு பின் வெற்றிகரமாக முடிக்கப்படும். புதிய தொழில் தொடங்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டிருந்தால், அதற்கு இக்காலம் உகந்ததாக இருக்கும். பணிபுரிபவர்கள் இதுவரை வேலையில் சிரமத்தை சந்தித்து வந்தால், இனிமேல் தங்களின் வேலையில் வெற்றியையும், முன்னேற்றத்தையும் காண்பார்கள்.

சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி உதயமாகவுள்ளார். இதனால் சனி உதயத்திற்கு பின் சிம்ம ராசிக்காரர்கள் நல்ல பண வரவைப் பெறுவார்கள். வியாபாரிகள் தங்களின் வியாபாரத்தில் அதிக லாபத்தைக் காண்பார்கள். இதுவரை உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஏதேனும் பிரச்சனையை சந்தித்து வந்தால், இனிமேல் அது நீங்கி, திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏதேனும் நடக்க வாய்ப்புள்ளது.

கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி உதயமாகவுள்ளார். இதனால் மார்ச் 6 ஆம் தேதி முதல் கும்ப ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெறவுள்ளார்கள். பணிபுரிபவர்கள் தங்களின் துறையில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் நிலுவையில் இருந்த வேலைகள், இந்த சனி உதயத்திற்கு பின் வெற்றிகரமாக முடிக்கப்படும். வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் அமையும்.

துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சனி உதயமாகவுள்ளார். இதனால் துலாம் ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கப் போகிறது. வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காணப் போகிறார்கள். பணியிடத்தில் சந்தித்து வந்த பிரச்சனைகள் நீங்குவதோடு, உங்களின் சிறப்பான செயல்திறனால் சம்பள உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. இதுவரை குடும்ப சூழல் பிரச்சனைகள் நிறைந்திருந்தால், இனிமேல் அப்பிரச்சனைகள் நீங்கி, மகிழ்ச்சி பெருகும். முக்கியமாக உங்களின் வேலைகள் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
