Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
சனிக்கிழமையில் சனி பகவானுக்கு தீபத்தில் ஒரு கிராம்பு போட்டு ஏற்றினால், வாழ்வில் உள்ள பிரச்சனைகள் நீங்குமாம்!
ஜோதிடத்தில் சனியினால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க சில பரிகாரங்கள் உள்ளன. இந்த பரிகாரங்களை சனிக்கிழமைகளில் செய்வதன் மூலம் வாழ்வில் உள்ள தடைகள் நீங்கி வெற்றி கிடைக்க ஆரம்பிக்கும்.
நீதியின் கடவுளான சனி பகவானுக்கு உரிய நாள் தான் சனிக்கிழமை. சனி பகவான் சூரியன் மற்றும் சாயாவின் மகன் ஆவார். இவர் சூரியனைப் போன்றே, கடவுள் மற்றும் கிரகம் ஆகிய இரண்டு அந்தஸ்தையும் கொண்டவர். சனி பகவான் மிகவும் கொடூரமானவராக கருதப்படுகிறார். ஆனால் இவர் ஒருவரின் செயல்களுக்கு ஏற்பவே பலன்களை அளிப்பார். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டுகள் ஆகும். சனியின் வக்ர பார்வை அசுபமாக கருதப்படுகிறது. சனியின் வக்ர பார்வை ஒருவர் மீது விழுந்தால், அவர் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

ஜோதிடத்தில் சனியினால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க சில பரிகாரங்கள் உள்ளன. இந்த பரிகாரங்களை சனிக்கிழமைகளில் செய்வதன் மூலம் வாழ்வில் உள்ள தடைகள் நீங்கி வெற்றி கிடைக்க ஆரம்பிக்கும் மற்றும் தூங்கிக் கொண்டிருக்கும் அதிர்ஷ்டமும் பிரகாசிக்கும். அந்த பரிகாரங்கள் என்னவென்பதை இப்போது காண்போம்.

விளக்கில் கிராம்பு
சனிக்கிழமையன்று சனி பகவானை வழிபடும் போது கடுகு எண்ணெய் தீபம் ஏற்றுவது நல்லது. அதுவும் இந்த தீபத்தை ஏற்றும் போது, அதில் கிராம்பு சேர்ப்பது இன்னமும் நல்லது. இப்படி செய்வதன் மூலம் சனி பகவானின் அருள் கிடைக்கும். மேலும் இந்த பரிகாரத்தை செய்தால் நிதி நன்மைகளும் கிடைக்கும். குறிப்பாக இந்த செயலை வாரந்தோறும் தவறாமல் செய்து வந்தால், வீட்டில் பண பற்றாக்குறை ஏற்படாது.

எள்ளு விளக்கு
சனிக்கிழமை அன்று சனி பகவானை வணங்குவதற்கு கோவிலுக்கு சென்றால் கடுகு எண்ணெய் விளக்கு ஏற்றுங்கள். அப்படி ஏற்றும் போது மறக்காமல் அந்த விளக்கில் கருப்பு எள்ளு மூட்டையை வைக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கடுகு எண்ணெய் விளக்கு
சனிக்கிழமை சனி பகவானுக்கு மட்டுமின்றி, அனுமனுக்கும் உகந்த நாளாகும். அதோடு அனுமன் சனி பகவானின் நண்பன். எனவே சனிக்கிழமைகளில் அனுமன் கோவிலுக்கு சென்று கடுகு எண்ணெய் தீபம் ஏற்றி, அனுமன் சாலிசாவை சொல்லி வழிபட வேண்டும்.

பைரவருக்கு கடுகு எண்ணெய் தீபம்
உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்துவிதமான பிரச்சனைகளும் விலகுவதற்கு சனிக்கிழமைகளில் பைரவர் முன்பு கடுகு எண்ணெய் தீபம் ஏற்றுங்கள். இப்படி செய்வதன் மூலம் பைரவர் மகிழ்ச்சி அடைந்து, நன்மைகளை வழங்குவார்.

ஆற்றில் விளக்கேற்றவும்
சனிக்கிழமைகளில் ஆறு அல்லது நதிகளில் கடுகு எண்ணெய் விளக்கேற்றுங்கள். இதனால் வீட்டின் வறுமை நீங்கி, செல்வம் பெருக ஆரம்பிக்கும். அதுவும் இந்த பரிகாரத்தை சனிக்கிழமைகளில் செய்து வந்தால் நற்பலன்கள் கிடைக்கும்.

மண்விளக்கு ஏற்றவும்
சனிக்கிழமைகளில் நவகிரகங்களை வழிபடும் போது மண் தீபம் ஏற்று வழிபட்டால், சனி மற்றும் செவ்வாயின் அருள் கிடைக்கும். ஆனால் இந்த விளக்கை ஒருமுறை ஏற்றினால், மீண்டும் பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications