Just In
- 15 min ago
உங்க உணவு தட்டை இந்த கலர் ஃபுல்லான உணவுகளுடன் கண்டிப்பா மாற்றணுமாம்... ஏன் தெரியுமா?
- 31 min ago
மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா மேற்கொள்ளும் புதிய டயட் பற்றி தெரியுமா?
- 46 min ago
உங்க பிறந்த தேதி 7,16 மற்றும் 25 இதுல ஒன்னா? அப்ப உங்க எதிர்காலம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
- 1 hr ago
இந்த 5 ராசிக்காரங்க மட்டும் உங்களுக்கு கணவன் & மனைவியா வந்தா? நீங்க பார்ட்டிக்கு போகவே முடியாதாம்!
Don't Miss
- Automobiles
இது தெரிஞ்சா பலர் விமானத்திலேயே ஏற மாட்டாங்க! ஆக்ஸிஜன் மாஸ்க் பின்னால் உள்ள யாருக்கும் தெரியாத ரகசியம்!
- Finance
ஹிண்டன்பர்க் பிரச்சனைக்கு மத்தியில் அதானி அடுத்த டீல்.. GVK பவர் நிறுவனத்தை வாங்க போட்டி..!
- News
யூடியூப் சேனல்களில் ஒரே அவதூறு.. கொதித்த நடிகர் சரத்குமார்..சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பரபர புகார்
- Movies
ஒவ்வொரு மணிநேரத்திற்கும் அப்டேட்.. 6 மணிநேரத்திற்கு தளபதி 67 அப்டேட்தான்.. திணறலில் ரசிகர்கள்!
- Sports
அவர் இல்லைனா இந்தியா ஜெயிக்காது.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. ரோகித்திற்கு முன்னாள் வீரர் எச்சரிக்கை!
- Technology
உலகத்தை மீண்டும் திரும்பி பார்க்க வைக்கப்போறாங்க.! Nothing Phone 2 பற்றி தீயாய் பரவும் செய்தி.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Simam Sani Peyarchi Palangal 2023: சிம்ம ராசிக்கு 2023 சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கப் போகுது தெரியுமா?
2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவான் ராசியை மாற்றவுள்ளார். அதுவும் தனது சொந்த ராசியான கும்ப ராசிக்கு செல்கிறார். சனி பகவான் ராசியை மாற்றும் போது, சிம்ம ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். இந்த சனிப் பெயர்ச்சியானது 2023 ஜனவரி 17 ஆம் தேதி நிகழ்கிறது. இந்த கும்ப ராசியில் சனி 2025 மார்ச் 31 ஆம் தேதி வரை இருப்பார். சனி பகவான் நியாயமானவர், ஒருவரின் கர்மத்திற்கு ஏற்ப பலன்களை வழங்குவார். சனி பகவான் வகுத்த விதிகளை கடைப்பிடிப்பவர்களுக்கு நன்மைகளை வழங்குவார். அதை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்குவார்.
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சனி செல்வதால், சிம்ம ராசிக்காரர்களுக்கு கண்டகச் சனி தொடங்குகிறது. எனவே இந்த ராசிக்காரர்கள் வெற்றிக்காக கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இந்த காலத்தை சிறந்த எதிர்காலத்திற்கான அடித்தளமாக பயன்படுத்துங்கள். சவால்கள் மற்றும் சோதனைகள் தவிர்க்க முடியாதவை, ஆனால் அவை உங்களின் சிறந்ததை வெளிப்படுத்தும். உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்க கடவுளை வழிபடுங்கள். இப்போது 2023 ஆம் ஆண்டில் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் வாழ்வில் ஒவ்வொரு பகுதியிலும் எந்த மாதிரியான பலன்களைப் பெறுவார்கள் என்பதை சற்று விரிவாக காண்போம்.

2023 சனிப்பெயர்ச்சியால் தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும்?
7 ஆவது வீட்டிற்கு செல்லும் சனியால் சிம்ம ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் சவால்களை கொண்டு வரும். உங்களுக்கு நெருங்கியவர் கூட உங்களுக்கு எதிராக மாறலாம். வேலையில் உங்கள் நண்பர்களான நடிப்பவர்களிடம் சற்று கவனமாக இருங்கள். பதவி உயர்வு கிடைப்பதில் தாமதமாகும். ஆனால் முயற்சியை கைவிடாதீர்கள். வேலையை மாற்ற முயற்சி செய்யலாம். உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை கையாள்வதில் சுறுசுறுப்பாக இருங்கள். தொழிலதிபவர்கள் கூட்டாண்மை ஒப்பந்தங்களில் பணிபுரியும் போது கவனமாக இருக்க வேண்டும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் நிபந்தனைகளை பற்றி நன்கு தெரிந்த பின்னரே கையெழுத்திட வேண்டும்.

2023 சனிப்பெயர்ச்சியால் காதல் மற்றும் உறவுகள் எப்படி இருக்கும்?
திருமணமாகாமல் இருப்பவர்கள் தாங்கள் காதலிப்பவரிடம் தங்கள் காதலை வெளிப்படுத்துவார்கள். இது உறவுகளை உருவாக்க உதவி புரியும். உங்கள் பெற்றோரிடம் இருந்து ஆதரவானது சற்று தாமதமாகவே கிடைக்கும். எதையும் அவசரமாக செய்யாதீர்கள். அதோடு, இக்காலத்தில் அதிர்ஷ்டம் மற்றும் அனைத்து சுகங்களையும் அனுபவிக்கும் வேகம் சற்று குறையும். பொறுமை இக்காலத்தில் மிகவும் முக்கியம். உங்கள் நடத்தையிலும் மென்மையாக இருங்கள். குறிப்பாக ஒரு விஷயம் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத போது பொறுமையையும், மென்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்.

2023 சனிப்பெயர்ச்சியால் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?
இந்த சனிப்பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையை அதிகம் பாதிக்காது. நன்றாகவே இருக்கும். வேண்டுமானால் ஒவ்வொருவரின் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகள் சில தடைகளை ஏற்படுத்தலாம். குருவின் நிலையால் திருமண வாழ்வில் சந்திக்கும் சவால்களை எளிதில் சமாளிப்பீர்கள் மற்றும் தம்பதிகளுக்கு இடையே பிணைப்பை அதிகரிக்கும். தம்பதிகள் நல்ல புரிதலுடன் இருப்பார்கள் மற்றும் நிறைய அன்பை பகிர்ந்து கொள்வார்கள்.

2023 சனிப்பெயர்ச்சி நிதி நிலை எப்படி இருக்கும்?
2023 சனிப் பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களின் வருமானம் திருப்திகரமாக இருக்கும். பணப் புழக்கம் நன்றாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்திற்காக அதிக செலவுகளை செய்ய வாய்ப்புள்ளது. ஊக வணிகம் மற்றும் டிரேடிங்கில் லாபம் கிடைக்கும். முதலீடு செய்ய விரும்புவீர்கள். இக்கட்டான நிலையில் இருந்து, தெளிவு பெற விரும்பினால், உங்கள் அன்பானவர்களிடமிருந்து யோசனைகளைப் பெறுங்கள்.

2023 சனிப் பெயர்ச்சியால் கல்வி எப்படி இருக்கும்?
சனிப்பெயர்ச்சியால் மாணவர்கள் சாதனைகளைப் படைப்பார்கள். படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும். இதனால் நல்ல உயர் நிலையை அடைவீர்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். சிலர் தங்கள் துறைகளில் பிரகாசிக்கலாம். ஆராய்ச்சி தொடர்பான மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு நல்ல பிரகாசமான எதிர்காலம் உண்டு.

2023 சனிப்பெயர்ச்சியால் ஆரோக்கியம் எப்படி இருக்கும்?
தேவையில்லாத மன அழுத்தம் மற்றும் பரபரப்பான வேலை காரணமாக தூக்க பிரச்சனைகளை சந்திக்கலாம். சிலர் நோய்களுக்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். ஆனால் அறுவைசிகிச்சைக்குப் பிறகு விரைவில் குணமடையலாம். மது அருந்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும், இல்லையெனில் அது உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். முழங்கால் மற்றும் எலும்பு தொடர்பான பிரச்சினைகள் உங்கள் மேல் கையை பாதிக்கலாம். தினசரி உணவில் கீரைகளை அதிகம் உட்கொள்ளுங்கள். கம்ப்யூட்டரில் அதிக நேரம் வேலை செய்பவர்கள் உடற்பயிற்சிக்காக சிறிது நேரம் செலவிட வேண்டியிருக்கும். இது உடல் சோர்வு மற்றும் நீரிழிவு போன்ற கோளாறுகளைத் தவிர்க்க உதவும்.

2023 சனிப்பெயர்ச்சி: சிம்ம ராசிக்கான பரிகாரங்கள்
* சனிக்கிழமைகளில் ஐப்பனை வழிபடுங்கள்.
* சனிக்கிழமைகளில் நாய்களுக்கு பிரட் சாப்பிட கொடுங்கள்.
* ஏழை எளியோருக்கு உங்களால் முடிந்ததை அவ்வப்போது தானம் செய்யுங்கள். இதனால் சனி பகவானின் அருளைப் பெறலாம்.