Latest Updates
-
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்..
2023 சனிப்பெயர்ச்சி: 2025 வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமானதா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
2023 ஆம் ஆண்டின் ஜனவரி 17 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசிக்கு செல்கிறார். 30 ஆண்டுகளுக்கு பின் கும்பம் செல்லும் சனி பகவான், அந்த ராசியில் 2025 வரை இருப்பார்.
Sani Peyarchi 2023: ஜோதிட சாஸ்திரத்தில், கிரகங்களின் நிலைகளைக் கொண்டு ஒருவருக்கு நடக்கவிருக்கும் நல்லது, கெட்டது கணித்து கூறப்படுகின்றன. நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர் சனி பகவான். இவர் ஒரு ராசியில் இருக்கும் போது, அந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை என்றால் என்ன என்பதை புரிய வைக்க, பல சோதனைகளைத் தருவார். இவர் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் இருப்பார். ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்கும் சனி பகவான், எவ்வளவு சோதனைகளை தருவாரோ, அவ்வளவு நன்மைகளையும் வாரி வழங்குவார்.

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் ஜனவரி 17 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசிக்கு செல்கிறார். 30 ஆண்டுகளுக்கு பின் கும்பம் செல்லும் சனி பகவான், அந்த ராசியில் 2025 வரை இருப்பார். இந்த சனிப்பெயர்ச்சியால் கும்பம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது. மேலும் இந்த சனிப்பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக 4 ராசிக்காரர்கள் இந்த சனிப்பெயர்ச்சியால் நிதி நிலையில் முன்னேற்றத்தைக் காண்பதோடு, தொழிலில் நல்ல வெற்றியையும் பெறுவார்கள். இப்போது அந்த 4 ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தனுசு
2023 சனிப்பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறார்கள். சனி தனுசு ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இது செல்வத்தின் வீடாகும். எனவே இக்காலத்தில் வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்கள் அல்லது வெளிநாடு சென்று சம்பாதிக்க விரும்புவோருக்கு நற்பலன்கள் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சிக்கு பின் அற்புதமானதாக இருக்கும். உங்களின் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.

மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் மூன்றாவது அல்லது கடைசி கட்டம் தொடங்குகிறது. கடைசி கட்டம் என்பதால், மகர ராசிக்காரர்களுக்கு சனி பகவான் நற்பலன்களை வாரி வழங்குவார். குறிப்பாக நிதி ரீதியாக வலுவாக இருப்பீர்கள். ஆனால் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் 2 ஆவது கட்டம் தொடங்குகிறது. முக்கியமாக கும்ப ராசி சனி பகவானுக்கு மிகவும் பிடித்த ராசியாகும். எனவே சனி பகவான் கும்ப ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை வழங்குவார். இந்த பெயர்ச்சியின் போது சச ராஜயோகம் உருவாவதால், கும்ப ராசிக்காரர்களின் மரியாதை சமூகத்தில் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். அரசியலில் இருப்பவர்கள் தேர்தலில் நின்றால் வெற்றி பெறுவார்கள்.

மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். இதனால் மிதுன ராசிக்காரர்கள் அஷ்டம சனியில் இருந்து விடுபடுகிறார்கள். இதுவரை படாதபாடு பட்ட மிதுன ராசிக்காரர்களுக்கு இனி வரும் காலம் பொற்காலமாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். வேலையில் வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டில் யாரேனும் உடல்நலக் குறைவால் மோசமான நிலையில் இருந்தால், அவர்கள் இனி நன்றாக இருப்பார்கள். உங்களின் ஆரோக்கியம் மேம்படும். உங்கள் தந்தையுடனான உறவு வலுவாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications