Latest Updates
-
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை
உங்க சகோதரர் எப்பவும் சந்தோஷமா இருக்கணுமா? அப்ப அவங்க ராசிக்கு ஏற்ற நிறத்தில் ராக்கி கட்டுங்க...
ரக்ஷா பந்தன் அன்று சகோதரிகள் தங்கள் சகோதர்களின் மணிக்கட்டில் ராக்கி கட்டுவார்கள். ஆனால் அப்படி கட்டும் ராக்கியானது, சகோதரரின் ராசிக்கு ஏற்ப கட்டினால், அது அவர்களின் வாழ்க்கையில் சந்தோஷத்தையும், செழிப்பையும் தரும்.
ஒவ்வொரு ஆண்டும் ரக்ஷா பந்தன் ஆவணி மாத பௌர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. ரக்ஷா பந்தன் விழாவானது சகோதர மற்றும் சகோதரிகளின் அன்பின் அடையாளமாகும்.

இந்த நாளில் சகோதரிகள் தங்கள் சகோதர்களின் மணிக்கட்டில் ராக்கி கட்டுவார்கள். ஆனால் அப்படி கட்டும் ராக்கியானது, சகோதரரின் ராசிக்கு ஏற்ப கட்டினால், அது அவர்களின் வாழ்க்கையில் சந்தோஷத்தையும், செழிப்பையும் தரும். மேலும் அவரது வாழ்க்கை துன்பமின்றி இருக்கும். இப்போது ஒவ்வொரு ராசிக்கும் ஏற்ற ராக்கியின் நிறம் என்னவென்பதை பார்ப்போம்.

மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாற். எனவே இந்த ராசிக்காரர்கள் சிவப்பு நிற ராக்கியைக் கட்டுவது நல்லது. இந்நிறத்தில் ராக்கி கட்டினால், அது சகோதரரின் வாழ்க்கையில் சுபிட்சத்தையும், செழிப்பையும் தரும். மேலும் அவர் ஆற்றல்மிக்கவராக இருப்பார்.

ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் வெள்ளை நிற ராக்கியைக் கட்டுவது நல்லது. இதனால் அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியுடனும், செழிப்புடனும் இருக்கும்.

மிதுனம்
மிதுன ராசியின் அதிபதி புதன். இந்த ராசிக்காரர்கள் பச்சை நிறத்திலான ராக்கி கட்டுவது நல்லது. இது அவர்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்கான அதிர்ஷ்டத்தைக் கொடுப்பதோடு, நீண்ட ஆயுளையும் கொடுக்கும்.

கடகம்
கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த ராசிக்காரர்கள் வெள்ளை அல்லது மஞ்சள் நிறம் கொண்ட ராக்கியைக் கட்டுவது நல்லது. இது அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் தரும்.

சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த ராசிக்காரர்கள் சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்திலான ராக்கியைக் கட்டுவது நல்லது. இதனால் அது அவர்களின் வாழ்க்கையில் சந்தோஷத்தையும், செழிப்பையும் நீடித்து நிலைக்க வைக்கும்.

கன்னி
கன்னி ராசியின் அதிபதி புதன். இந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றது பச்சை நிறத்திலான ராக்கி. இது நல்ல அதிர்ஷ்டத்தை வழங்குவதோடு, சகோதர சகோதரிகளுக்கு இடையேயான அன்பு நீடித்திருக்கும்.

துலாம்
துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் நீலம் அல்லது வெள்ளை நிறத்திலான ராக்கியைக் கட்ட வேண்டும். இது அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும், செழிப்பையும், அமைதியையும் அளிக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த ராசிக்காரர்கள் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறம் கொண்ட ராக்கியைக் கட்டிக் கொள்வது மிகவும் நல்லது. இது வாழ்வில் மகிழ்ச்சியையும், அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்கும்.

தனுசு
தனுசு ராசியின் அதிபதி குரு. இந்த ராசிக்காரர்கள் தங்க அல்லது மஞ்சள் நிற ராக்கியைக் கட்டுவது மிகவும் நல்லது. இதனால் வாழ்க்கை செல்வ செழிப்புடன், சந்தோஷமாகவும், அதிர்ஷ்டம் நிறைந்ததாகவும் இருக்கும்.

மகரம்
மகர ராசியின் அதிபதி சனி. இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் அடர் நீல நிற ராக்கியைக் கட்டுவதே நல்லது. இதனால் அவர்களின் வாழ்வில் உள்ள துன்பங்கள் நீங்கி, வாழ்க்கை சுபமாக இருக்கும்.

கும்பம்
கும்ப ராசியின் அதிபதி சனி. இந்த ராசிக்காரர்களும் அடர் நீல நிற ராக்கியைக் கட்டிக் கொள்வது நல்லது. இதனால் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் நீங்குவதோடு, செல்வ வளம் அதிகரிக்கும்.

மீனம்
மீன ராசியின் அதிபதி குரு. இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் மஞ்சள் அல்லது பச்சை நிற ராக்கியைக் கட்டுவது நல்லது. இதனால் வாழ்க்கை சந்தோஷமாகவும், பிரச்சனைகளின்றி செழிப்புடனும் இருக்கும்.



Click it and Unblock the Notifications
