Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
Rahu Transit 2022: 18 ஆண்டுகளுக்கு பின் ராகு மேஷ ராசிக்கு செல்வதால் ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கப்போகுது?
2022 ஆம் ஆண்டின் முதல் பெரிய கிரக பெயர்ச்சியான ராகு பெயர்ச்சி நடக்கப் போகிறது. அதுவும் ராகு ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு 2022 ஏப்ரல் 12 ஆம் தேதி செல்லவிருக்கிறார்.
நவகிரகங்களில் ராகுவும் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் சூரியன், சந்திரன், புதன், செவ்வாய், சனி, குரு போன்ற கிரகங்களைப் போன்ற உடல் அமைப்பு ராகுவிற்கு இல்லை. இது ஒரு நிழல் கிரகம். மேலும் இது மாயையின் கிரகம் என்றும் அழைக்கப்படுகிறது. வேத ஜோதிடத்தில் ராகு ஒரு தீய கிரகமாக கருதப்படுகிறது. ராகு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 1 1/2 ஆண்டுகள் ஆகும். இந்நிலையில் 2022 ஆம் ஆண்டின் முதல் பெரிய கிரக பெயர்ச்சியான ராகு பெயர்ச்சி நடக்கப் போகிறது. அதுவும் ராகு ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு 2022 ஏப்ரல் 12 ஆம் தேதி செல்லவிருக்கிறார்.

ராகு ராசியை மாற்றுவதால், பல குழப்பங்களை உருவாக்கலாம் மற்றும் வாழ்க்கையில் உறுதியற்ற தன்மையைக் கூட உண்டாக்கலாம். எனவே தயாராக இருங்கள். இந்த ராகு பெயர்ச்சியால் நிதி, வணிகம், உடல் நலம் மற்றும் வாழ்க்கையின் பிற முக்கிய பகுதிகளில் அதிக தாக்கம் ஏற்படக்கூடும். இப்போது 2022-இல் ராகு மேஷ ராசிக்கு செல்வதால் ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிதமானதாக இருக்கும். திருமணமாகாதவர்கள் பேசும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. திருமணமானவர்கள், தங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்த வேண்டும். இக்காலத்தில் உங்கள் மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகவே தியானம், யோகா செய்ய அறிவுறுத்தப்படுகிறது. நிதி நிலை நன்றாக இருக்கும். இருப்பினும் புத்திசாலித்தனமாக செலவு செய்யுங்கள். தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை, பணிச்சுமை அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு, நினைத்தது போல் பலன் கிடைக்காது.

ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நிதி பிரச்சனைகள் வரலாம். எனவே பட்ஜெட்டை திட்டமிடுங்கள். வேலை மாற்றம் மற்றும் இடமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு இது சாதகமான காலமாக இருக்கும். காதல் மற்றும் பிற உறவுகள் பிரச்சனையின்றி அமைதியாக இருக்கும்.

மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் எதிர்பாராத லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் திரும்ப கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். ஒரு தொழிலதிபராக இருந்தால், உங்கள் வணிகத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, முதுகு மற்றும் கால்களை கவனித்துக் கொள்ளுங்கள். வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். உறவுகளானது பதற்றம் மற்றும் தவறான புரிதல்களால் பாதிக்கப்படலாம். திருமணமாகாதவர்கள், தங்கள் வாழ்க்கைத் துணையை சந்திப்பார்கள்.

கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் திருமணமாகாதவர்கள் தங்கள் அன்புரிக்குரியவரிடம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தலாம். இதன் மூலம் திருமணம் கூட நடைபெற வாய்ப்புள்ளது. திருமணமான தம்பதிகளுக்கு சாதகமான நேரம். நிதி ரீதியாகவும், நேரம் நன்றாக இருக்கும். இருப்பினும், புதிய முதலீடுகளைச் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அமைதியின்மையை உணரலாம். அந்த நேரத்தில், உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யுங்கள். உங்கள் தொழிலில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உயர்கல்வி படிக்க விரும்புபவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்களைத் தேடி பல வேலை வாய்ப்புகள் வரும். வெளிநாடுகளில் இருந்து சில திட்டங்களைப் பெற வாய்ப்புள்ளது. கடந்த கால முதலீடுகள் இந்த நேரத்தில் பலனளிக்க வாய்ப்புள்ளது. மேலும் நிதி நிலைமை வலுவாகும். திருமணமாகாதவர்கள் ராகு பெயர்ச்சிக்கு பின் வாழ்க்கை துணையை சந்திக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, எலும்புகள் தொடர்பான சில பிரச்சனைகள் உங்களைத் தொந்தரவு செய்யக்கூடும். எனவே ஆரோக்கியமான உணவை உண்டு, ஃபிட்டாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

கன்னி
கன்னி ராசியின் 8 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் காதல் வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். திருமணமானவர்களுக்கு தங்கள் துணையுடன் சண்டை ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. வணிகர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. மாணவர்கள் படிப்பில் சில சிறந்த முடிவுகளைப் பெற வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சில செரிமான பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. நிதி நிலைமையில் சற்று ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கலாம்.

துலாம்
துலாம் ராசியின் 7 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் சில நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்ட கால முதலீடுகளால் நல்ல பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. ஒரு புதிய வேலையைத் தேடுகிறீர்களானால், புதிய வாய்ப்புகளைப் பெறலாம். ஆனால் புதிய தொழில் தொடங்க சிறந்த காலம் அல்ல. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறிய வலி மற்றும் அசௌகரியங்கள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். காதல் வாழ்க்கை மிதமானதாக இருக்கும். குறிப்பாக திருமணமான தம்பதிகள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. நிதி நிலைமை நன்றாக இருக்கும். கடன் வாங்க அல்லது நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். பணிபுரிபவர்கள் பணியிடத்தில் சில மாற்றங்களை சந்திக்க நேரிடும். வியாபாரிகள் தங்கள் ஊழியர்களிடம் இருந்து சரியான ஆதரவைப் பெறாமல் போக வாய்ப்புள்ளது. இருப்பினும் உறவுகளில் எவ்வித பிரச்சனையும் இருக்காது.

தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் நிதி ரீதியாக நன்றாக இருக்கும். பங்கு சந்தை விஷயங்களில் கவனமாக இருங்கள். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் முன்னேற்றத்திற்கான ஒரு நல்ல வாய்ப்புக்களைப் பெற வாய்ப்புள்ளது. மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் காதல் வாழ்க்கை ஏற்ற தாழ்வுகள் நிறைந்திருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சில உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும்.

மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் உடல்நலம் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். நிதி நிலையில் சில சிரமங்களை சந்திக்கக்கூடும். இந்த நேரத்தில் யாருக்கும் கடன் கொடுக்காமல் இருப்பது நல்லது. பரஸ்பர புரிதல் மற்றும் அன்புக்குரியவரின் தவறுகளை மன்னிப்பதன் மூலம் உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வணிகர்கள் தங்கள் போட்டியாளர்களிடமிருந்து சில கடுமையான போட்டியை சந்திக்க நேரிடும். மேலும் இக்காலத்தில் அவசரமாக எந்த ஒப்பந்தங்களையும் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

கும்பம்
கும்ப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நிதி ரீதியாக, நீங்கள் புதிய வருமான ஆதாரங்களை ஆராய்ந்து நீண்ட கால முதலீடுகளை எதிர்நோக்குவீர்கள். வேலை மாற விரும்புபவர்களுக்கு இது நல்ல நேரமாக இருக்கும். தொழில்முனைவோர் சில நல்ல ஒப்பந்தங்களையும் பெறுவார்கள். திருமணமாகாதவர்கள், தங்கள் வாழ்க்கைத்துணையை சந்திக்கலாம். திருமணமானவர்களுக்கு, சில முந்தைய பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

மீனம்
மீன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் நீண்ட கால முதலீடுகள் உங்களுக்கு சிறந்த பலனைத் தரும். இருப்பினும், எப்போதும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. திருமணமானவர்கள் அல்லது காதலிப்பவர்கள், தங்கள் துணையுடன் சிறு சிறு தகராறுகளை சந்திக்கலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உணவில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. வணிகர்கள், பெரிய திட்டங்களில் பணிபுரியும் போது அனைத்து ஆவணங்களையும் கவனமாக சரிபார்க்க வேண்டும். பணியிடத்தில் கடின உழைப்பினால் வெற்றி பெறுவீர்கள்.



Click it and Unblock the Notifications
