For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நகர பொங்கலை காட்டிலும் கிராமத்து பொங்கல் பண்டிகையின் சிறப்புகள் என்ன தெரியுமா?

பொங்கல் பண்டிகை இந்தியா முழுவதும் பரவலாகக் கொண்டாடப்பட்டாலும் தமிழகத்தில்தான் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

|

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை நாளை தொடங்கி நான்கு நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. புதிய வருடம் பிறந்ததிலிருந்து பொங்கல் பண்டிகைக்கான கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. பொங்கலை பண்டிகை என்று கூறுவதைவிட திருவிழா என்றே அழைக்கலாம். பொங்கல் பண்டிகை இந்தியா முழுவதும் பரவலாகக் கொண்டாடப்பட்டாலும் தமிழகத்தில்தான் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

pongal-festival-2020-celebration-and-importance

இந்த பண்டிகையை உற்றார் உறவினர் அனைவரும் இணைந்து கொண்டாடுவார்கள். தமிழர் திருநாளான இந்த பண்டிகையை தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பா நாடுகள், அமெரிக்கா போன்று தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் பொங்கல் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படும். பொங்கல் பண்டிகை கிராமங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதும் சூரியனுக்கும் மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோலங்கள்

கோலங்கள்

எந்தவொரு பண்டிகை என்றாலும், தமிழ் மக்கள் பொதுவாக முதலில் ஆரம்பிப்பது கோலங்களில் இருந்துதான். ஒவ்வொரு பண்டிகைக்கும் ஏற்றவாறு கோலங்கள் போடுவார்கள். பொதுவாக கிராமங்களில் சுண்ணாம்பால் வீடு திண்ணையில் கோலம் போடும் பழக்கம் உள்ளது. பொங்கல் பண்டிகையில் அனைவரும் பொங்கல் பானை கோலத்தைதான் அதிகமாக போடுவார்கள்.

MOST READ:தை மாதத்தில் எந்த ராசிக்கு கல்யாணம் கூடி வரும் தெரியுமா?

போகிப் பண்டிகை

போகிப் பண்டிகை

பழைய கழித்தலும், புதியன புகுதலும் போகி பண்டியின் நோக்கம். மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. வீடுகளை சுத்தம் செய்து, சுண்ணாம்பு அடித்து, பழைய பொருட்களைத் தீயில் போட்டு எரித்துக் கொண்டாடுவார்கள். இதன் பொருள் பழைய எண்ணங்களைத் தீயில் போட்டு எரித்துவிட்டு, புதிய நல்லெண்ணங்களை மனதில் வைக்க வேண்டும் என்பது ஆகும். மேலும் நிலத்திற்கு ஏராளமான செழிப்பைக் கொடுக்கும் மழைக்கும் நன்றி செலுத்தும் விதமாகக் கொண்டாடப்படுகிறது.

போகியில் செய்யக்கூடாதது

போகியில் செய்யக்கூடாதது

காற்று மாசு அதிகம் உள்ளதால், போகிப் பண்டிகையில் பிளாஸ்டிக், டையர் போன்ற பொருட்களை எரிக்கக்கூடாது என்று அரசு சில விதிகளை விதித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், மாசில்லா போகிப் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று அரசு வலியுறுத்திவருகிறது.

நன்றி செலுத்துவது

நன்றி செலுத்துவது

இந்தியாவின் முதுகெலும்பு விவசாய தொழில். விவசாயத்திற்கு மிகவும் முக்கியமாக இருக்கும் சூரியன், மாடு மட்டும் உழவர்களின் தியாகத்தையும் பெருமையையும் போற்று விதமாகத்தான் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வருஷம் முழுவதும் வயலில் உழைத்து களைத்திருக்கும் உழவர்கள் அறுவடை செய்து வீட்டிற்கு நெல்லை கொண்டு வந்ததும் கொண்டாடப்படுகிறது. உழவுக்கு உதவிய, சூரியன், ஆடு, மாடு, உழவர் என அனைத்திற்க்கும் நன்றி செலுத்தும் விதமாகப் பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுகிறார்கள் தமிழர்கள்.

MOST READ:உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா? அப்ப இனிமேல் காளானை அடிக்கடி சாப்பிடுங்க...

சூரியப் பொங்கல்

சூரியப் பொங்கல்

இரண்டாவது நாள், சூரிய பொங்கல் என்று அழைக்கப்படுகிறது. இது சூரியனுக்கு நன்றி கூற விடியற்காலையில் சூரியன் வருவதற்கு முன்பே குளித்துவிட்டு புத்தாடைகளை அணிவித்து பொங்கல் வைக்க ஆரம்பித்து விடுவார்கள். சூரியன் சரியாக உதிக்கும் நேரத்தில் பொங்கல் பொங்கி, படையல் போட்டு சூரியனுக்கு நன்றி செலுத்துவார்கள்.

பொங்கலோ பொங்கல்

பொங்கலோ பொங்கல்

மூன்றாவது நாள் கால்நடைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது மாட்டுப் பொங்கல் என்று அழைக்கப்படுகிறது. உழவுக்கு உதவும், ஆடு, மாடு போன்றவற்றிக்கு நன்றி செலுத்தும் விதமாக அவற்றைக் குளிப்பாட்டி, கலர் பொடி பூசி படையல் போட்டு பொங்கல் வைத்துக் கொண்டாடப்படுகிறது. இந்த படையலில், மஞ்சள் கொத்து, கரும்பு முக்கியமாக இடம் பெறும். மாட்டிற்கு பொங்கல் ஊட்டும்போது "பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல்" என்று கூவிக்கொண்டே பொங்கல் ஊட்டுவார்கள்.

கிராமத்து பொங்கல்

கிராமத்து பொங்கல்

பொங்கல் என்றாலே கிராமத்தில் கொண்டாடப்படுவதுதான் கோலாகலமாக இருக்கும். வெளிநாட்டினர் முதல் உள்ளூர் நகரகாரர்கள் வரை அனைவரும் கிராமத்திற்கு படையெடுப்பார்கள். பொதுவாக கிராமப்புறங்களில் நான்கு நாட்களும் திருவிழா போன்று வெகு விமர்சையாக கொண்டாடப்படும். வயல்வெளிகளில் இயற்கையோடு இயற்கைக்கு நன்றி சொல்லும் விழா கொண்டாடுவதுதானே சரியாக இருக்கும். எந்த ஊரிலிருந்தாலும், தன்னுடைய சொந்த கிராமத்திற்கு வந்து அனைவரும் பொங்கல் விழா கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

MOST READ:ஆண்களே! உங்கள் தாடி அழகில் பெண்கள் மயங்க வேண்டுமா? அப்ப இத யூஸ் பண்ணுங்க போதும்...!

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

பொங்கல் விழாவின் மிக முக்கியமான ஒரு விளையாட்டு ஜல்லிக்கட்டு. மதுரை அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தமிழர்களில் வீர விளையாட்டுகளில் ஒன்றுதான் ஜல்லிக்கட்டு என்று அழைக்கப்படும் ஏறு தழுவுதல். உலகம் முழுவதும் இருந்து பலர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்கவருவார்கள். ஏராளமான மாடுபிடி வீரர்கள் இதில் கலந்துகொண்டு மாட்டை அடக்கி, பரிசுகளை பெறுவார்கள்.

திருவள்ளுவர் தினம்

திருவள்ளுவர் தினம்

தமிழின் பெருமையை உலகறிய செய்த உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரைச் சிறப்பிக்கும் விதமாக தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் நாளாக கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் முக்கிய பண்டிகையான தமிழர்களின் வீரம், பெருமையை சொல்லும் பொங்கல் பண்டிகையில் திருவள்ளுவர் நாளாகச் சேர்த்து கொண்டாடப்படுகிறது.

காணும் பொங்கல்

காணும் பொங்கல்

பொங்கல் விழாவின் நான்காவது மற்றும் இறுதி நாள் காணும் பொங்கல் அல்லது கன்னிப் பொங்கல் என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் உறவினர்கள் மற்றும் பெரியவர்களிடம் சென்று ஆசி பெறுதல் என்பதாகும். பண்டிகையின் கடைசி நாளான காணும் பொங்கலில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். வழுக்கு மரம் ஏறுதல், பானை உடைத்தல், கயிறு இழுத்தல் போன்ற பல விளையாட்டுகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்துகொண்டு மகிழ்ச்சியாக விளையாடுவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Pongal Festival 2020 Celebration and Importance

Here we talking about the Pongal Festival 2020 Celebration and Importance.
Story first published: Monday, January 13, 2020, 13:44 [IST]
Desktop Bottom Promotion