Latest Updates
-
ராகு-கேது பெயர்ச்சி 2026: துலாம் முதல் மீனம் வரை யாருக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கும்?- விளக்கும் ஜோதிடர்! -
விநாயகர் சதுர்த்திக்கு ஒருவாட்டி இந்த அம்மிணி கொழுக்கட்டையை ட்ரை பண்ணி பாருங்க.. -
Ganesh Chaturthi 2026: விநாயகருக்கு பூஜை செய்ய உகந்த 21 இலைகளும்.. அவற்றால் கிடைக்கும் நன்மைகளும்.. -
தினமும் காலையில் 1 பல் பூண்டு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? புட்டுபுட்டு வைக்கும் டாக்டர்! -
1 வருடம் கழித்து கன்னி ராசிக்கு செல்லும் சூரியன்: இந்த ராசிக்காரங்க தொழிலில் நல்ல வளர்ச்சியை பாக்கப்போறாங்க.. -
ராகி இட்லியும், வெங்காய கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சுவையானதும், சத்தானதும் கூட -
செப்டம்பர் 12, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க வேலை மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்! -
செவ்வாய் கடக ராசிக்கு செல்வதால் நவம்பர் மாதம் வரை டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
கிரக நிலைகளால் ஜூன் மாதம் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...
2022 ஜூன் மாதத்தில் 5 கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. அதனால் ஜூன் மாதத்தில் பல ராசிக்காரர்களின் வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஜோதிடத்தில் ஜூன் மாதம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் பல கிரகங்கள் தனது ராசியை மாற்றுவதோடு, சில கிரகங்களின் சேர்க்கையும் நிகழ்கிறது. கிரகங்களின் இயக்கம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் ஜூன் மாதத்தில் 5 கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. அதனால் ஜூன் மாதத்தில் பல ராசிக்காரர்களின் வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்போது ஜூன் மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகள் குறித்து விரிவாக காண்போம்.

2022 ஜூன் மாத புதன் பெயர்ச்சி
பேச்சு மற்றும் புத்திக்காரனான புதன் ஏற்கனவே ரிஷப ராசியில் வக்ர நிலையில் பின்னோக்கி பயணித்து வருகிறார். ஜூன் மாதத்தின் தொடக்கத்தில், அதாவது ஜூன் 3 ஆம் தேதி புதன் ரிஷப ராசியில் வக்ர நிலையில் இருந்து மாறி நேர்கதியில் பயணிக்கவுள்ளார்.

2022 ஜூன் மாத சனி வக்ர பெயர்ச்சி
ஜோதிடத்தில் சனி பகவானுக்கு தனி முக்கியத்துவம் உண்டு. இவர் 2022 ஏப்ரல் மாதத்தில் தான் கும்ப ராசிக்கு மாறினார். ஆனால் ஜூன் 05 ஆம் தேதி சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்ர நிலையில், பின்னோக்கி நகர தொடங்குகிறார். சனி அனைத்து கிரகங்களிலும் மெதுவாக நகரும் கிரகம். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சுமார் இரண்டரை வருடங்கள் ஆகும்.

2022 ஜூன் மாத சூரிய பெயர்ச்சி
சூரியன் ஏற்கனவே ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இவர் 2022 ஜூன் 15 ஆம் தேதி மிதுன ராசிக்கு மாறி பயணிக்கவுள்ளார். சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுகிறார். இப்படி ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதம் பிறக்கிறது. சூரியன் மிதுன ராசிக்கு செல்லும் போது தான் ஆனி மாதம் பிறக்கிறது.

2022 ஜூன் மாத சுக்கிர பெயர்ச்சி
சுக்கிரன் தற்போது மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இவர் 2022 ஜூன் 18 ஆம் தேதி ரிஷப ராசிக்கு செல்கிறார். ஜோதிடத்தில் சுக்கிரன் இன்பம், ஆடம்பரம் ஆகியவற்றை வழங்கும் கிரகமாக கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல இடத்தில் இருந்தால், அந்நபர் அனைத்து விதமான சுகபோகங்களையும் பெறுவார்.

2022 ஜூன் மாத செவ்வாய் பெயர்ச்சி
கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படும் செவ்வாய் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். இவர் 2022 ஜூன் 27 ஆம் தேதி மீனத்தில் இருந்து மேஷ ராசிக்கு செவ்வாய் இடம் மாறுகிறார். இந்த செவ்வாய் பெயர்ச்சி ஜூன் 27 ஆம் தேதி திங்கள்கிழமை காலை 5:39 மணிக்கு நிகழ்கிறது.

2022 ஜூன் மாத கிரக சேர்க்கைகள்
ஜூன் மாதத்தில் இரண்டு முக்கிய கிரகங்களின் சேர்க்கை நிகழ்கிறது. இதில் ஏற்கனவே புதன் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூன் மாதத்தில் சுக்கிரன் ரிஷப ராசிக்குள் நுழைவார். இம்மாதிரியான சூழ்நிலையில் ரிஷப ராசியில் புதன்-சுக்கிரன் சேர்க்கை உருவாகிறது. ஜோதிடத்தில் இந்த சேர்க்கையின் போது லட்சுமி நாராயண் யோகம் உருவாகிறது. இந்த யோகம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த யோகம் செல்வம், மகிழ்ச்சி, செழிப்பு ஆகியவற்றை கொடுக்கக்கூடியது. மேலும் நிதி நிலைமை மேம்படுவதோடு, சமூகத்தில் மரியாதையும் அதிகரிக்கும்.

2022 ஜூன் மாத கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்
ஜூன் மாதத்தில் புதன்-சுக்கிரன் இணைவதால் உருவாகும் லட்சுமி நாராயண் யோகத்தில் 5 ராசிக்காரர்கள் லட்சுமி தேவியின் அருளைப் பெறவுள்ளார்கள். ஜூன் மாதம் ரிஷபம், சிம்மம், தனுசு, கன்னி மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் ஜூன் மாதத்தில் பணம் சம்பாதிக்க நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். மூதாதையர் சொத்துக்களால் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் திட்டங்கள் வெற்றி பெறும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு இருக்கும்.



Click it and Unblock the Notifications
