Latest Updates
-
பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
தமிழ்நாட்டின் மாம்பழ நகரம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது தெரியுமா? -
கஜலக்ஷ்மி ராஜயோகம் 2026: இந்த 4 ராசிகளுக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுதாம்...உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க... வீட்ல எல்லொரும் 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க...! -
உயர் இரத்த அழுத்தம் இருக்கா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க.. -
2026 IPL போட்டிகளில் விளையாடப்போகும் டாப் 10 வயதான வீரர்கள்... யாரெல்லாம் விளையாடப்போறாங்க பாருங்க...! -
மணமணக்கும்.. மட்டன் நோன்பு கஞ்சி - சிம்பிளா குக்கரில் எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
1 கப் துருவிய தேங்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா தேங்காய் சாதம் செய்யுங்க... பிரியாணியை விட சூப்பரா இருக்கும்! -
மீன ராசியில் உதயமாகும் செவ்வாய்: ஏப்ரலில் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது... -
Eid-ul-Fitr 2026: இந்தியாவில் ரம்ஜான் பண்டிகை எந்த நாளில் கொண்டாடப்பட போகிறது? மார்ச் 20 அல்லது மார்ச் 21?
ஏப்ரல் மாதத்தில் 9 கிரகங்கள் ராசியை மாற்றுவதால் இந்த 7 ராசிக்காரங்க ரொம்ப கவனமா இருக்கணும் தெரியுமா?
ஏப்ரல் மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறுவதால், பலரது வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்போது 2022 ஏப்ரல் மாதத்தில் எந்தெந்த கிரகங்கள் எப்போது ராசியை மாற்றுகின்றன என்பதைக் காண்போம்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரக மாற்றங்களின் அடிப்படையில் ஏப்ரல் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதுவும் 2022 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் பல முக்கிய கிரகங்கள் இடம் மாறுகின்றன. அதுவும் இந்த மாதத்தில் சுமார் 9 கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கின்றன. இதில் சனி, குரு, ராகு, கேது, சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் ஆகியவை அடங்கும்.

பொதுவாக கிரகங்களின் இட மாற்றங்கள் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஏப்ரல் மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறுவதால், பலரது வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்போது 2022 ஏப்ரல் மாதத்தில் எந்தெந்த கிரகங்கள் எப்போது ராசியை மாற்றுகின்றன என்பதைக் காண்போம்.

செவ்வாய் பெயர்ச்சி 2022
கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் ஏப்ரல் மாதத்தில் முதன்முதலாக ராசியை மாற்றவுள்ளார். ஏற்கனவே மகர ராசியில் பயணித்து வரும் செவ்வாய், 2022 ஏப்ரல் 07 ஆம் தேதி சனி பகவான் ஆளும் கும்ப ராசிக்கு செல்கிறார். இப்பெயர்ச்சியால் மேஷம் மற்றும் விருச்சிக ரசிக்காரர்கள் சற்று சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

புதன் பெயர்ச்சி 2022
புத்தி மற்றும் பேச்சின் கடவுளாக கருதப்படுபவர் புதன். இதுவரை மீன ராசியில் பயணித்து வரும் புதன் மேஷ ராசிக்கு 2022 ஏப்ரல் 08 ஆம் தேதி இடம் பெயரள்ளார். புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசியின் அதிபதியாவார். ஆகவே இந்த இரண்டு ராசிக்காரர்களும் பணம் மற்றும் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

ராகு பெயர்ச்சி 2022
நிழல் கிரகமான ராகு 2022 ஏப்ரல் 12 ஆம் தேதி ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் மாறுகிறார். சுமார் 18 1/2 ஆண்டுகளுக்கு பிறகு ராகு மேஷ ராசிக்கு வருகிறார். தீய கிரகமாக கருதப்படும் ராகு, இந்த மேஷ ராசியில் சுமார் 1 1/2 ஆண்டுகள் இருப்பார்.

கேது பெயர்ச்சி 2022
மற்றொரு நிழல் கிரகமான கேது 2022 ஏப்ரல் 12 ஆம் தேதி ராசியை மாற்றவுள்ளார். தற்போது கேது விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். இவர் ஏப்ரல் 12 ஆம் தேதி துலாம் ராசிக்கு இடம் மாறுகிறார். நிழல் கிரகமான கேது ஒரு மர்மமான கிரகமாக கருதப்படுகிறது.

குரு பெயர்ச்சி 2022
நவகிரகங்களில் மங்களகரமான கிரகமாக கருதப்படும் குரு பகவான் தற்போது கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இவர் 2022 ஏப்ரல் 13 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் மாறுகிறார். இப்பெயர்ச்சியின் ஒரு சிறப்பு என்னவென்றால் குரு பகவான் தான் ஆளும் மீன ராசிக்கு செல்வது தான். இந்த குரு பெயர்ச்சியால் தனுசு மற்றும் மீன ராசிக்காரரகள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.

சூரிய பெயர்ச்சி 2022
இதுவரை மீன ராசியில் பயணித்து வரும் சூரியன் 2022 ஏப்ரல் 14 ஆம் தேதி செவ்வாய் ஆளும் மேஷ ராசிக்கு செல்கிறார். இந்த சூரிய பெயர்ச்சி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் கிரகங்களின் ராஜாவாகவும், செவ்வாய் கிரகங்களின் தளபதியாகவும் கருதப்படுகிறது. இந்த சூரிய பெயர்ச்சி காலத்தில் சிம்ம ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

புதன் பெயர்ச்சி 2022
2022 ஏப்ரல் 25 ஆம் தேதி புதன் சுக்கிரன் ஆளும் ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இதனால் இப்பெயர்ச்சி காலத்தில் ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் கல்வி, வேலை மற்றும் வியாபாரம் போன்றவற்றில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

சுக்கிர பெயர்ச்சி 2022
ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் 2022 ஏப்ரல் 27 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து குரு ஆளும் மீன ராசிக்கு செல்கிறார். இப்பெயர்ச்சியால் மிதுனம், கன்னி மற்றும் தனுசு ராசிக்காரர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

சனி பெயர்ச்சி 2022
நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் 2022 ஏப்ரல் 29 அம் தேதி கும்ப ராசிக்கு இடம் மாறுகிறார். கும்ப ராசி சனி பகவானின் சொந்த ராசி. ஆகவே இப்பெயர்ச்சியால் மிதுனம், துலாம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.



Click it and Unblock the Notifications











