Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் செவ்வாய்: மார்ச் 26 முதல் இந்த 6 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது.. -
4 கத்திரிக்காயும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 23 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரும் நாளாக இருக்குமாம்...! -
சுக்கிரன் மேஷ ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் பெரிய வெங்காயம் இருந்தா 10 நிமிடத்தில் இந்த சட்னியை அரைங்க... இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்! -
Tamil Nadu Election 2026: தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் உள்ள டாப் 5 மாவட்டங்கள் என்னென்ன தெரியுமா? -
ஆந்திரா முட்டை புலுசு ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க... சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும்...! -
புதன் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
காரசாரமான கேரளா ஸ்டைல் ஈஸி பெப்பர் சிக்கன் ரெசிபி... இப்படி செஞ்சு பாருங்க... வேற லெவல் சைடிஷா இருக்கும்...! -
கள்ளக்காதலில் ஈடுபட அதிக வாய்ப்புள்ள 4 ராசிகள் இவங்கதான்... இவங்ககிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...!
நவம்பர் மாதம் இந்த ராசிகளுக்கு கொஞ்சம் கஷ்ட காலமா தான் இருக்குமாம்... உங்க ராசிக்கு எப்படி?
உங்களுக்கு 2021 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் நவம்பர் மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என கொடுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் நவம்பர் மாதம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறது. உங்களுக்கு 2021 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் நவம்பர் மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என நவம்பர் மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, நவம்பர் மாதம் உங்களுக்கு கலவையான பலன்களைத் தரப் போகிறது. சில நேரங்களில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழில் ரீதியாக இந்த மாதம் சிறப்பாக இருக்கும். கல்வித் துறையில் விரும்பிய முடிவுகளைப் பெறுவீர்கள். ஆனால் உங்கள் சோம்பேறித்தனம் மற்றும் விஷயங்களைத் தள்ளிப்போடும் பழக்கத்தை நீங்கள் கைவிட வேண்டும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும், ஆனால் சிறிய விஷயங்களை பெரிதாக்குவதைத் தவிர்க்கவும். இந்த மாதத்தின் முதல் பாதி காதல் மற்றும் திருமண உறவுகளுக்கு சாதகமானது. ஆனால் பிற்பகுதியில் சில பிரச்சனைகள் இருக்கலாம். நிதியைப் பொறுத்தவரை, இந்த மாதம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். அதனால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த மாதம், உங்கள் உடல்நிலை சற்று குறைவாக இருக்கும். இருப்பினும், கடுமையான நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கலவையான முடிவுகள் கிடைக்கும். தொழில் மற்றும் கல்வியைப் பொறுத்தவரை, விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அதே வேளையில், நிதி விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக செலவு செய்யும் போது சிந்தித்து செலவழிக்க வேண்டும். குடும்ப வாழ்க்கை மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும். இம்மாதத்தில் உங்கள் பேச்சை அமைதியாகவும், இனிமையாகவும் வைத்திருங்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, இந்த நவம்பர் மாதம் நீங்கள் எதிர்பார்ப்பது போல் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. இந்த மாதம் உங்களுக்கு சவாலாக இருக்கும். ஆனால் நிதி அடிப்படையில், சராசரி மாதமாக இருக்கும். உங்கள் தொழில் மற்றும் கல்வி வாழ்க்கையில் தடைகள் இருக்கும். இருப்பினும் அவற்றைப் பெற நீங்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். காதல் விஷயங்கள் சற்று டென்சனாக இருக்கலாம். இருப்பினும், குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். இது உங்களுக்குள் நேர்மறை உணர்வை உருவாக்கவும், சவால்களை சமாளிக்கவும் உதவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இக்காலம் உங்களுக்கு நன்றாக இருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களே, உங்கள் தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை, இந்த மாதம் சாதாரணமாக இருக்கும். ஆனால் உங்களின் பெரிய இலக்குகள் மற்றும் லட்சியங்கள் உங்களை இம்மாதத்தில் வீழ்த்தலாம். உங்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாது. குடும்ப வாழ்க்கை சராசரியாக இருக்கும். காதல் வாழ்க்கை சவால் நிறைந்ததாக இருக்கும். ஆனால் திருமணமானவர்களுக்கு, இந்த மாதம் நல்லதாக இருக்கும். இம்மாதத்தில் ஒரு பெரிய வளமான நிதி வாழ்க்கையை வாழ்வீர்கள். இருப்பினும், உங்கள் மற்றும் உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் நவம்பர் மாதத்தில் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். உங்களின் பொறுமை உங்களுக்கு தொழிலில் வெற்றியைத் தரும். படிப்பைப் பொறுத்தவரை, இம்மாதம் சிறப்பாக இருக்கும். போட்டித் தேர்வுகளை எழுதினால் வெற்றி பெறலாம். மனப்பூர்வமாக முயற்சி செய்தால், உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். கலையில் நாட்டம் உண்டாகும். குடும்ப வாழ்க்கை மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். ஆனால் இந்த மாதம் காதலர்களுக்கு மகிழ்ச்சியாகவும் காதல் நிறைந்ததாகவும் இருக்கும். திருமணமானவர்களுக்கு கடினமாக இருக்கும். இந்த மாதம், உங்கள் வருமானம் அதிகரிக்கும் மற்றும் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளால் நல்ல பணம் சம்பாதிப்பீர்கள். அதே வேளையில் செலவுகளும் அதிகரிக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். சிறு பிரச்சனைகளுக்கும் மருத்துவரை அணுக தாமதிக்க வேண்டாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களே, தொழிலைப் பொறுத்தவரை நவம்பர் மாதம் சிறந்த நேரம். விரும்பிய முடிவுகளைப் பெறுவதற்கான வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். இம்மாதம் கல்வித் துறையில் நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றன. போட்டித் தேர்வுகளில் வெற்றிக்கான பாதைகள் திறக்கப்படும். குடும்ப வாழ்க்கையில் மன அழுத்தம் ஏற்படும். உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்துங்கள். காதல் விஷயங்களில் இம்மாதம் நன்றாக இருக்கும். உறவுகள் வலுவடையும், காதல் திருமணங்களும் சாத்தியமாகும். திருமணமானவர்கள் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை நடத்துவார்கள். இந்த மாதம், நீங்கள் எந்த வகையான நிதி கவலைகளிலிருந்தும் விலகி இருப்பீர்கள். உங்களின் தேவைகள் நிம்மதியாக பூர்த்தியாகும். ஆனால் ஆரோக்கியத்தைப் பற்றி சில கவலைகள் எழலாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களே, தொழிலைப் பொறுத்தவரை, நவம்பர் மாதத்தில் லேசான பலன்களே கிடைக்கும். சில நேரங்களில் வெற்றி பெறுவீர்கள், சில நேரங்களில் ஏமாற்றங்களை சந்திக்க வேண்டியிருக்கும். இருப்பினும் படிப்பு விஷயங்கள் நன்றாக இருக்கும். விடாமுயற்சி வெற்றிக்கு முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். சமூகப் பணிகளில் அதிக ஈடுபாடு இருப்பதால், உங்கள் குடும்பத்திற்கு நேரம் கொடுக்க முடியாது. இதன் காரணமாக குடும்பத்திலிருந்து விலகி இருப்பதாகத் தெரியும், இதனால் பெரும் மன அழுத்தம் ஏற்படும். காதலிப்பவர்கள், இம்மாதம் காதலிப்பவருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். திருமண வாழ்க்கையில் சில மனக்கசப்புகள் இருக்கும். இம்மாதத்தில் வருமானத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியம். இம்மாதத்தில் மன உளைச்சல் ஏற்படலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, நவம்பர் மாதத்தின் முதல் பாதியில் உங்கள் தொழிலில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். ஆனால் இரண்டாம் பாதியில் நிலைமைகள் சிறப்பாக இருக்கும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உள்ளன. இந்த மாதம் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். இந்த மாதம் காதலர்களுக்கு மிகவும் காதல் நிறைந்ததாக இருக்கும், ஆனால் திருமணமானவர்களுக்கு ஏற்றஇறக்கமாக இருக்கும். இந்த மாதம் வருமானம் குறையும், செலவுகள் அதிகமாகும். கடன் தொல்லை கூட உங்களுக்கு ஏற்படும். மாதத்தின் பிற்பாதியில் நிலைமை சற்று சிறப்பாக இருக்கும். இந்த மாதத்தில் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள் மற்றும் எண்ணெய் உணவுகளை உட்கொள்வதை கட்டுப்படுத்துங்கள், இல்லையெனில், உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் சில விஷயங்களைத் தவிர ஆனந்தமாக இருக்கும். தொழிலைப் பொறுத்தவரை, இம்மாதம் சிறப்பாக இருக்கும். உங்கள் தொழிலில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் படிப்பில் சில தடைகள் ஏற்படலாம். உங்கள் நண்பர்களிடம் சற்று கவனமாக இருங்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தில் சில நல்ல செய்திகளைக் காணலாம். காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் சாதகமாக இருக்காது. காதல் வாழ்க்கையில் விஷயங்கள் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இருப்பினும், திருமணமானவர்கள் இந்த மாதம் முழுவதும் நல்ல நேரத்தை அனுபவிப்பார்கள். இந்த மாதத்தில் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் மற்றும் உங்கள் நிதி நிலைமைகள் நன்றாக இருக்கும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களே, தொழில் ரீதியாக குறிப்பாக வேலை செய்பவர்களுக்கு இம்மாதம் மிகவும் நன்றாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து மகிழ்ச்சியான செய்திகளை பெறலாம். சில சமயங்களில் படிப்பில் இருந்து கவனம் சிதறலாம். உயர்கல்வி படிப்பவர்களுக்கு சாதகமான காலம். தொழில்நுட்பக் கல்வித் துறையில் புதிய வாய்ப்புகள் உருவாகலாம். குடும்பத்தில் மன அழுத்தம் ஏற்படலாம். சகோதர சகோதரிகளின் ஆதரவும் கிடைக்கும். நவம்பர் மாதம் காதல் விவகாரங்களில் கொஞ்சம் மன அழுத்தமாக இருக்கும், ஆனால் திருமணமானவர்களுக்கு நன்றாக இருக்கும். குடும்பத்தில் எந்த நல்ல செய்தியையும் பெறுவீர்கள். நவம்பர் மாதம் உங்களுக்கு நிதி ரீதியாக சாதாரணமாக இருக்கும். இந்த மாதத்தில் உங்கள் செலவுகள் அதிகரிக்கும் என்றாலும், உங்கள் வருமானமும் ஒரே நேரத்தில் உயரும். இந்த மாதத்தில் உங்கள் உடல்நலம் குறித்து எச்சரிக்கையாக இருப்பீர்கள். யோகா மற்றும் உடற்பயிற்சிகளுடன், உங்கள் உணவுப் பழக்கவழக்கங்களில் நன்கு கவனம் செலுத்துவீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, நவம்பர் மாதத்தில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். சில நேரங்களில் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். மற்ற நேரங்களில் தடைகளையும், சவால்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். நவம்பர் மாதம் உங்கள் தொழிலுக்கு சராசரியாக இருக்கும். படிப்பில் ஆர்வம் காட்டினால், நல்ல பலன்களை அடைவீர்கள். உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். மேலும், இந்த மாதம் புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களால் உங்கள் குடும்பத்திற்கு போதுமான நேரத்தை கொடுக்க முடியாது. இதனால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. காதல் உறவுகளுக்கு சாதகமான காலம். நீங்கள் விரும்பும் நபரிடம் காதலை சொல்ல இது ஒரு சாதகமான காலம். பொருளாதார ரீதியாக கலவையான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் உடல்நலம் சம்பந்தமாக சிறுசிறு பிரச்சனைகள் வரலாம், ஆனால் பெரிய நோயினால் பாதிக்கப்படமாட்டீர்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களே, தொழிலைப் பொறுத்தவரை நவம்பர் மாதம் நன்றாக இருக்கும். வேலை தொடர்பான பயணங்கள் நல்ல பலனளிக்கும். இம்மாதம் உங்கள் படிப்பு சிறப்பாக இருக்கும். உயர்கல்வி படிப்பதில் சில சவால்களை சந்திக்க நேரிடும். குடும்ப வாழ்க்கையிலும் மன அழுத்தம் ஏற்படும். முரட்டுத்தனமாக பேசாதீர்கள், ஏனெனில் அது நிலைமையை மோசமாக்கும். மாதப் பிற்பகுதியில் நிலைமைகள் மேம்படும். உங்கள் தந்தையை கவனித்துக் கொள்ளுங்கள். காதலில் இருக்கும் தம்பதிகள் ஒன்றாக மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். எந்தவொரு தவறான புரிதலையும் சரியான தொடர்பு மூலம் தீர்க்க முயற்சிக்கவும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். நவம்பர் மாதம் உங்களுக்கு பொருளாதார முன்னேற்றம் தரும். புதிய வருமான ஆதாரங்கள் தோன்றும், புதிய வணிக உறவுகளும் உருவாகும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். செலவுகள் அதிகரிக்கலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும், இருப்பினும் மாதப் பிற்பகுதியில் சில உடல்நலப் பிரச்சனைகள் வரலாம் என்பதால் சீரான உணவை உண்ணுங்கள் மற்றும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications











