For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நவதுர்க்கையின் வடிவத்தைக் குறிக்கும் 9 மூலிகைகள் குறித்து தெரியுமா?

மார்க்கண்டேய புராணத்தில் இந்த ஒன்பது மூலிகைகள் துர்கையின் சாராம்சத்தை கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.பிரம்ம தேவரும் இவற்றை ‘துர்கா கவசம்' என்று குறிப்பிடுகிறார்.

|

நவதுர்கை என்பது தேவி துர்க்கையின் ஒன்பது வடிவங்களாகும். ஆனால் நவதுர்க்கையின் வடிவத்தைக் குறிக்கும் ஒன்பது மூலிகைகள் உள்ளது பற்றி நீங்கள் அறிந்ததுண்டா? மார்க்கண்டேய புராணத்தில் இந்த ஒன்பது மூலிகைகள் துர்கையின் சாராம்சத்தை கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Navratri 2020: 9 Herbs For Navratri

பிரம்ம தேவரும் இவற்றை 'துர்கா கவசம்' என்று குறிப்பிடுகிறார், அதாவது இவை நமது உடலை பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்கும் ஒரு கவசமாக உள்ளன என்று கூறுகிறார். அந்த மூலிகைகள் பற்றி இப்போது அறிந்து கொள்வோம்:

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சைல புத்ரி - கடுக்காய்

சைல புத்ரி - கடுக்காய்

ஒன்பது துர்க்கையில் முதன்மையானவர் சைல புத்ரி. சைலபுத்ரியின் குணநலனை வெளிப்படுத்தும் ஒரு மூலிகை கடுக்காய். ஆயுர்வேதத்தின் முதன்மை மூலிகையாக அறியப்படும் கடுக்காயில் 7 வகைகள் உள்ளன. ஹரித்திகா , பத்யா , காயஸ்தா, அம்ருதா, ஹேமாவதி, சேத்தகி போன்றவை இதன் வகைகளாகும். ஒவ்வொரு வகையும் அவற்றுக்கான தனிப்பட்ட குணநலனைக் கொண்டுள்ளன.

பிரம்மச்சாரிணி - பிராமி

பிரம்மச்சாரிணி - பிராமி

ஒன்பது துர்க்கையில் இரண்டாவது துர்க்கை, பிரம்மச்சாரிணி. இந்த துர்க்கையை குறிக்கும் ஒரு மூலிகை பிராமி. மிகவும் அறியப்பட்ட இந்த மூலிகை இரத்த ஓட்டம், ஞாபக சக்தி, உடல் பலம் போன்றவற்றிற்கு உதவுகிறது, மேலும் இனிமையான குரல் பெறுவதற்கும் இந்த மூலிகை உதவுகிறது. இதனை ‘சரஸ்வதி' என்றும் அழைப்பார்கள். இரத்தத்தில் சரியாக செயல்படாத கூறுகளை வெளியேற்ற இந்த மூலிகை உதவுகிறது. பிராமி மூலிகையை மருந்தாக எடுத்துக் கொள்பவர்கள் பிரம்மச்சாரிணி தேவியை வழிபடுவதால் நல்ல பலன் கிடைக்கும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

சந்திரகாந்தா - சண்டுசுரா அல்லது சம்சுரா

சந்திரகாந்தா - சண்டுசுரா அல்லது சம்சுரா

நவதுர்கையில் மூன்றாவது சந்திரகாந்தா. இவரை சண்டுசுரா அல்லது சம்சுரா என்றும் அழைப்பார்கள். இது ஒரு மூலிகையின் பெயரும் கூட. சம்சுராவின் இலைகள் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மூலிகை சந்திரிகா அல்லது சர்மஹந்தி என்றும் அழைக்கப்படுகிறது. உடல் பருமன் பாதிப்பை குணப்படுத்தும் ஒரு மூலிகை இதுவாகும். உடல் பலத்திற்கும், இதயத்திற்கும் இந்த மூலிகை நல்ல பலன் அளிக்கிறது. இந்த சந்திரிகா மூலிகை பல்வேறு மருத்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

குஷ்மந்தா - வெள்ளை பூசணி

குஷ்மந்தா - வெள்ளை பூசணி

குஷ்மந்தா என்பது நவதுர்க்கையின் நான்காவது வடிவமாகும். வெள்ளை பூசணிக்காயின் மற்றொரு பெயர் குஷ்மந்தா. வடஇந்தியாவில் பூசணிக்காய் பேடா மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு வகையாகும். இதனை கும்ஹாதா என்றும் அழைப்பார்கள். உடல் பலம், வயிறு, விந்து, மற்றும் மன ஆரோக்கியத்திற்கு இந்த பூசணிக்காய் மிகவும் நல்ல பலன் அளிக்கிறது. பித்தம் மற்றும் வாயு தொடர்பான பாதிப்புகள் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிறந்த பலன் அளிக்கிறது.

ஸ்கந்தமாதா - ஆளி விதை

ஸ்கந்தமாதா - ஆளி விதை

ஆயுர்வேதத்தை பின்பற்றுகிறவர்களுக்கு ஆளி விதைகள் குறித்த எந்த ஒரு அறிமுகமும் தேவையில்லை. நவதுர்கையில் ஐந்தாவதாக அறியப்படும் ஸ்கந்தமாதாவை குறிக்கும் ஒரு மூலிகையாக ஆளி விதை அறியப்படுகிறது. இந்த பல கோண தானிய விதை அல்லது மூலிகை பொதுவாக எல்லாவற்றிற்கும் ஏற்றது மற்றும் இதனை தினமும் உட்கொள்ள வலியுறுத்தப்படுகிறது.

காத்யாயனி - மச்சிக்கா

காத்யாயனி - மச்சிக்கா

நவதுர்கையில் ஆறாவது துர்க்கை, காத்யாயனி. இவர் அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்றும் அறியப்படுவார். இவருக்கு இணையான மூலிகை மச்சிக்கா . இதனை சிறு சவுக்கு என்றும் அழைக்கலாம். கபம் மற்றும் பித்தம் தொடர்பான பாதிப்புகளுக்கு மிகவும் ஏற்ற ஒரு மூலிகை மச்சிக்கா. காத்யாயனி தேவையை வழிபடும்போது மச்சிக்கா பயன்படுத்த வலியுறுத்தப்படுகிறது.

கலாரத்ரி - நாகதான்

கலாரத்ரி - நாகதான்

ஒன்பது துர்க்கையில் ஏழாவதாக அறியப்படுபவர் கலாரத்ரி. இவரை மகாயோகினி அல்லது மகாயோகிஸ்வரி என்றும் அழைப்பார்கள். இவருக்கு இணையான மூலிகையாக அறியப்படுவது நாகதான். உடலின் பல்வேறு கோளாறுகளைப் போக்குவதில் இந்த மூலிகை பெரும்பங்கு வகிக்கிறது. அனைவரின் வீடுகளிலும் இந்த செடியை வளர்ப்பது வீட்டின் பாதிப்புகளை சரி செய்யும்.

மகாகௌரி - துளசி

மகாகௌரி - துளசி

இந்துக்களில் பெரும்பாலானவர்கள் வீட்டில் துளசி செடியை காணமுடியும். இந்த துளசி செடி பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. நவதுர்கையில் எட்டாவது துர்க்கை, மகாகௌரி. இவருக்கு இணையாக கூறப்படும் ஒரு மூலிகை, துளசி. இரத்தத்தை சுத்தம் செய்யவும், இதய நோய்கள் அண்டாமல் தடுக்கவும் இந்த மூலிகை பரவலாக பயன்படுத்தப்படுகிறது. துளசியில் ஏழு வகைகள் உள்ளன. ஸ்வேதா, ஷ்யாமா, மருதா, தவனா, குதேரக்கா, அர்ஜகா, ஷாதபத்ரா போன்றவை ஏழு வகை துளசியாகும்.

சித்திதாத்ரி - தண்ணீர் விட்டான் செடி

சித்திதாத்ரி - தண்ணீர் விட்டான் செடி

நவதுர்கையில் ஒன்பதாவது துர்க்கை சித்திதாத்ரி. இவருடைய குணநலனை குறிக்கும் மூலிகை சதாவரி. இதனை தண்ணீர் விட்டான் செடி என்றும் கூறுவார்கள். உடலில் எல்லா பகுதிக்கும் ஏற்ற ஒரு மூலிகை இதுவாகும். இந்த மூலிகையை தினமும் உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

மார்க்கண்டேய புராணத்தின்படி, ஒன்பது துர்க்கையை குறிக்கும் இந்த ஒன்பது மூலிகைகள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Navratri 2020: Nine Herbs Relate With Maa Durga Nine Forms

Navratri 2020: Navdurga literally means nine forms of Maa Durga. But very few people know that there are also nine herbs, that represent the essence of Navdurga.
Desktop Bottom Promotion