For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளி கொண்டாடுவதற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா? நீங்க நினைக்கிறது மட்டுமே இல்லையாம்...!

இந்தியாவின் மிகவும் முக்கியமான மற்றும் மகிழ்ச்சிகரமான பண்டிகை என்றால் அது தீபாவளிதான். தீபாவளி இந்த வருடம் நவம்பர் 4 ஆம் தேதி வியாழக்கிமை வருகிறது.

|

இந்தியாவின் மிகவும் முக்கியமான மற்றும் மகிழ்ச்சிகரமான பண்டிகை என்றால் அது தீபாவளிதான். தீபாவளி இந்த வருடம் நவம்பர் 4 ஆம் தேதி வியாழக்கிமை வருகிறது. தீபாவளி பட்டாசுத் திருவிழா, தீபத் திருவிழா மற்றும் பல என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் தீபாவளி பண்டிகை 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது. தீபாவளியின் முதல் நாள் கோவத்ச துவாதசி என்று அழைக்கப்படுகிறது. இரண்டாவது நாள் அனுமன் பூஜை, மூன்றாம் நாள் நரக் சதுர்தசி நாள் என்று அழைக்கப்படுகிறது.

Mythological Stories Behind Diwali in Tamil

இந்தியா முழுவதும் ஒரே பெயரில் கொண்டாடப்படும் பொதுவான பண்டிகையாக தீபாவளி இருக்கிறது. தென்னிந்தியாவில் தீபாவளி ஒரு நாள் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் நரகாசுரனைக் கொன்று மக்களை காப்பாற்றிய நாள்தான் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்பது தீபாவளிக்கு பின் இருக்கும் பொதுவான காரணமாகும். ஆனால் தீபாவளி கொண்டாடப்படுவதற்கு பின் பல்வேறு புராண காரணங்கள் இருக்கிறது. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பகவான் கிருஷ்ணர் நரகாசுரனைக் கொன்றார்

பகவான் கிருஷ்ணர் நரகாசுரனைக் கொன்றார்

நரகாசுரன் பூமியை அச்சுறுத்திய தீய அரக்கனாக இருந்தார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தீபாவளிக்கு முந்தைய நாள் அவரைக் கொன்றார். எனவே தீய அரக்கனின் வீழ்ச்சியாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் தீய அரக்கன் நரகாசுரனைக் கொன்று, தீய அரக்கனால் அடிமைப்படுத்தப்பட்ட 16,000 க்கும் மேற்பட்ட பெண்களை விடுவித்ததாக, விஷ்ணு புராணத்தில் நம்பப்படுகிறது. இறப்பதற்கு முன், நரகாசுரன் தன் இறந்த நாளை ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என்று வரம் கேட்டதால் கிருஷ்ணர் அந்த வரத்தை வழங்கியதாக கூறப்படுகிறது.

சத்யபாமாவும் - நரகாசுரனும்

சத்யபாமாவும் - நரகாசுரனும்

கிருஷ்ணரின் மனைவி சத்யபாமாதான் நரகாசுரனை அழித்ததாக மற்றொரு கதையும் உள்ளது. புராணத்தின் படி, நரகாசுரனை அவரது தாய் பூமாதேவியால் மட்டுமே கொல்ல முடியும் என்றும், அதே பூமாதேவியின் அவதாரமாக சத்யபாமா இருந்ததால், அவரால் மட்டுமே நரகாசுரனைக் கொல்ல முடியும். இருப்பினும், இறப்பதற்கு முன், நரகாசுரன் தனது தவறை உணர்ந்து, தனது தாயான சத்யபாமாவிடம் தனது மரணத்தை அனைவரும் வண்ணமயமான ஒளியுடன் கொண்டாட வேண்டும் என்று வரம் கேட்டார். அவரது மறைவை நினைவுகூரும் வகையில், தீபாவளி தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, இந்தியாவின் சில பகுதிகளில் நரக சதுர்த்தசி என்று கொண்டாடப்படுகிறது.

இராமரின் வெற்றி

இராமரின் வெற்றி

இராமாயணத்தின் படி, இராமர், சீதை மற்றும் இலட்சுமணன் ஆகியோர் இலங்கையில் ராவணனை வீழ்த்திய பிறகு அயோத்திக்குத் திரும்பினர், அது ஒரு அமாவாசை நாளாகும். எனவே இராமரின் வெற்றியைக் கொண்டாடும் நாளாக தீபாவளி இருப்பதாக நம்பபடுகிறது.

MOST READ:இந்த 6 ராசிக்காரர்களுக்கு துரோகம் செய்வது அல்வா சாப்பிடற மாதிரியாம்... ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...!

 ஜைனர்கள்

ஜைனர்கள்

நவீன ஜைன மதத்தின் மகாகுருவாகக் கருதப்படும் மகாவீர் தீர்த்தங்கரும் தீபாவளி நாளில் தனது ஞானத்தை அடைந்தார். ஜைனர்களுக்கு, தீபாவளி வர்த்தமான மகாவீரரின் (சமணர்களின் இருபத்தி நான்காவது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் மற்றும் நவீன ஜைன மதத்தை நிறுவியவர்) ஞானம் பெற்றதை நினைவுபடுத்துகிறது. கிமு 527 அக்டோபர் 15 இல் நிகழ்ந்தது பக்தியுள்ள ஜைனர்களுக்கான தீபாவளி கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும், மேலும் நினைவேந்தலின் நோக்கத்தைத் தவிர, இந்த திருவிழா பூமிக்குரிய ஆசைகளிலிருந்து மனித ஆன்மாவின் விடுதலையைக் கொண்டாடுவதைக் குறிக்கிறது.

வாமன அவதாரம்

வாமன அவதாரம்

தீபாவளி தினத்தன்று, லட்சுமி தேவி, விஷ்ணுவின் ஐந்தாவது அவதாரமான வாமன அவதாரத்தில் சிறையிலிருந்து மீட்கப்பட்டார். மகாபலி என்ற மன்னன், பூமியை ஆண்ட ஒரு சக்தி வாய்ந்த அரக்கன். மகாபலி வெல்ல முடியாதவர் மற்றும் தேவர்கள் கூட அவரை போர்களில் தோற்கடிக்க முடியவில்லை. விஷ்ணு ஒரு குட்டை பிராமணனாக மாறுவேடமிட்டு சில தானத்திற்காக மகாபலியை அணுகினார். நீதியும் கருணையும் கொண்ட மன்னன் பிராமணரின் கோரிக்கையை மறுக்க முடியாமல் ராஜ்ஜியத்தையும் செல்வத்தையும் (இதில் லக்ஷ்மி தேவி என்று கூறப்படுகிறது) அவருக்கு கொடுத்தார். மகாபலியை மகாவிஷ்ணு முறியடித்ததை தீபாவளி குறிக்கிறது. தீபாவளியன்று லட்சுமி தேவியை வழிபடுவதற்கு இதுவே காரணம். கேரளாவில் ஆகஸ்ட் மாதத்தில் ஓணம் பண்டிகையாக இது கொண்டாடப்படுகிறது.

பாண்டவர்களின் வருகை

பாண்டவர்களின் வருகை

மகாபாரதத்தின் படி, வனவாசத்திற்குப் பிறகு பாண்டவர்கள் திரும்பியது தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. சூதாட்ட மண்டபத்தில் சூழ்ச்சியால் தோற்ற பிறகு வனவாசத்திற்கு அனுப்பப்பட்டனர். அதன்பின் நடந்த போரில் வெற்றிபெற்று பாண்டவர்கள் நகரம் திரும்பிய போது அந்நாட்டின் மக்கள் தங்கள் அன்புக்குரிய பாண்டவர்களை வீடுகளில் விளக்கேற்றி வரவேற்றதாக கூறப்படுகிறது.

MOST READ:20 லட்ச மக்களை கொன்றது முதல் மகனை நாஜிகளிடம் பலிகொடுத்தது வரை கொடூரத்தின் உச்சம் தொட்ட ஜோசப் ஸ்டாலின்

 லட்சுமி தேவியின் பிறந்த நாள்

லட்சுமி தேவியின் பிறந்த நாள்

தீபாவளி நாளில் லட்சுமி தேவி ஆழ்கடலில் இருந்து அவதரித்ததாக கூறப்படுகிறது. சாஸ்திரங்களில், கடவுள்கள் ஒரு காலத்தில் அமரர்களாக இருந்தார்கள் என்று அறியப்படுகிறது, அழியாமையைப் பெற, அவர்கள் சமுத்திர-மந்தன் என்று அழைக்கப்படும் அழியாமையின் அமிர்தத்தைத் தேட கடைய வேண்டியிருந்தது. அமாவாசை இரவில், லட்சுமி தேவி, கடலில் இருந்து எழுந்தார். பின்னர் விஷ்ணுவை திருமணம் செய்து கொண்டார், அந்த நிகழ்வைக் கொண்டாட, பல விளக்குகள் ஏற்றப்பட்டு, வானத்தை ஒளிரச் செய்தன. இந்த நாள் தீபாவளியாக கொண்டாடப்பட்டது.

விக்ரமாதித்யரின் பட்டாபிஷேகம்

விக்ரமாதித்யரின் பட்டாபிஷேகம்

விக்ரமாதித்ய மன்னர் தீபாவளி தினத்தன்று மன்னனாக முடிசூட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. அவர் தனது வீரம் மற்றும் மகத்துவத்திற்காக நன்கு அறியப்பட்ட சிறந்த மன்னர்களில் ஒருவர். மிகப் பெரிய இந்து மன்னர்களில் ஒருவரான விக்ரமாதித்யர் கிழக்கில் நவீனகால தாய்லாந்து முதல் மேற்கில் நவீனகால சவூதி அரேபியாவின் எல்லைகள் வரை உலகின் மிகப்பெரிய பேரரசை ஆண்டார். தீபாவளி ஒரு மதப் பண்டிகை என்பதைத் தவிர, ஒரு வரலாற்றுத் தொடர்பையும் கொண்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mythological Stories Behind Diwali in Tamil

Check out the interesting legends and stories behind Diwali.
Desktop Bottom Promotion