For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அகோரிகள் ஏன் எப்போதும் நிர்வாணமாகவும், பிணங்களுடனும் வாழ்கிறார்கள் தெரியுமா?

அகோரிகள் என்றால் யார்? இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவின் வீதிகளிலும், கோவில்களிலும் அவர்களை அதிகளவில் பார்க்கலாம். அவர்கள் மக்களுடன் சேர்ந்து வாழ்ந்தாலும் அவர்களின் உலகமே தனிதான்.

|

அகோரிகள் என்றால் யார்? இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவின் வீதிகளிலும், கோவில்களிலும் அவர்களை அதிகளவில் பார்க்கலாம். அவர்கள் மக்களுடன் சேர்ந்து வாழ்ந்தாலும் அவர்களின் உலகமே தனிதான். அவர்களின் வாழ்க்கை முறை கடினமானதாகவும், மிகவும் கடுமையானதாகவும் இருக்கும்.

Mysterious World of Aghoris

அகோரிகள் சிவன் வழிபாட்டாளர்களான வழக்கத்திற்கு மாறான குலத்தைச் சேர்ந்த சாதுக்கள். சிலர் அவர்களுக்கு தெய்வீக சக்திகள் இருப்பதாக நம்புகிறார்கள், மற்றவர்கள் அவர்களை சூனியக்காரர்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி அவர்கள் ஒரு மாய ஆளுமை கொண்டவர்கள். அகோரிகளின் உலகம் பற்றிய சில உண்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நிர்வாணத்தை ஏற்றுக்கொள்வது

நிர்வாணத்தை ஏற்றுக்கொள்வது

அகோரிகள் பெரும்பாலும் நிர்வாணமாகவும் அவர்களின் உடல்களை அப்படியே ஏற்றுக்கொள்பவர்களாகவும் வாழ்கிறார்கள். இறந்த உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட சாம்பலை உடலில் பூசிய முழு நிர்வாண உடல்களில் அகோரிகளைக் காணலாம். இது நிச்சயமாக சிலரை பயமுறுத்தலாம், சிலரை முகம் சுழிக்க வைக்கலாம், ஆனால் அவர்கள் உலகத்தின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

முடிவெட்ட மாட்டார்கள்

முடிவெட்ட மாட்டார்கள்

அகோரிகள் அவர்களின் தலைமுடி நீளமாக வளரவேவிரும்புகிறார்கள், முடி வெட்டுவதை அவர்கள் நம்புவதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, நாங்கள் அப்படித்தான் பிறந்தோம், நம்முடைய இயல்பான சுயத்தை ஏற்றுக்கொள்வதற்கான சிறந்த வழி இதுதான் என்று அவர்கள் நினைக்கிறார்கள். சுருக்கமான, ஒழுங்கமைக்கப்பட்ட கூந்தலில் நீங்கள் அகோரியை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்.

நரமாமிசம்

நரமாமிசம்

அகோரிகள் வெளிப்படையாக மனித இறைச்சியை சாப்பிடுவார்கள் என்று நம்பப்படுகிறது. அவர்கள் இறந்த சடலங்களை சாப்பிடுவார்கள், ஆனால் ஒருபோதும் சாப்பிடுவதற்காக கொல்ல மாட்டார்கள். அவர்கள் நரமாமிசம் சாப்பிடுவதை ஒருவரும் கேள்வி கேட்கமாட்டார்கள். இந்தியாவின் புனித நகரமான வாரணாசியில் இந்த காட்சிகளை சாதாரணமாக பார்க்கலாம். சிலசமயம் குப்பைகள், மீதமான உணவுகள் போன்றவற்றையும் சாப்பிடுவார்கள்.

MOST READ: நல்ல செய்தி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு கிடைக்கபோகிறது? ஊசியின் விலை எவ்வளவு இருக்கும்?

சிவனே எல்லாமானவன்

சிவனே எல்லாமானவன்

அகோரிகள் சிவபெருமானின் பக்தியில் மூழ்கிக்கிடப்பார்கள். . சிவன் சர்வவல்லமையுள்ளவர், முழுமையானவர் என்பதால் எல்லாவற்றிற்கும் பதில் என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் சிவ சாதனா, ஷாவ் சாதனா, மற்றும் ஸ்மாஷான் சாதனா என்று அழைக்கப்படும் மூன்று வகை தவத்தை மேற்கொள்கிறார்கள். சிலர் தங்களை சிவபெருமானின் அவதாரங்கள் என்றும் நம்புகிறார்கள்.

 அனைத்திற்கும் மருந்து

அனைத்திற்கும் மருந்து

அகோரிகள் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையளிக்கக் கூடியவர்கள் என்று நம்பப்படுகிறது. அவர்களைப் பொறுத்தவரை, உடல் எரிக்கப்படும்போது அவை சிதையிலிருந்து எடுக்கும் மனித எண்ணெய் மிகவும் சக்திவாய்ந்ததாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். குணப்படுத்த முடியாத நோய்களுக்கான மருந்துகள் கூட தங்களிடம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

சடலத்தின் மீது தியானம்

சடலத்தின் மீது தியானம்

அகோரிகள் சுடுகாட்டில் பிணத்தின் மீது அமர்ந்து தியானம் செய்வார்கள். சடலத்தின் மீது ஒற்றைக்காலில் பார்வதி தேவி போல தவமிருப்பார்கள். நம்மில் பெரும்பாலானோர் சுடுகாடு மற்றும் பிணத்தின் அருகில் செல்லவே அஞ்சுவோம். ஆனால் அவர்கள் தைரியத்தின் உருவமாக வாழ்கிறார்கள்.

MOST READ: இந்தியாவிற்கு ஏன் நள்ளிரவில் சுதந்திரம் வழங்கப்பட்டது தெரியுமா? பலரும் அறியாத சுவாரஸ்ய வரலாறு...

பிணங்களுடன் உடலுறவு

பிணங்களுடன் உடலுறவு

அகோரி இறந்த உடல்களுடன் உடலுறவு கொள்வது அனைவரும் அறிந்ததுதான். அதற்கான காரணம் என்னவெனில், பிரதான மக்களால் அசுத்தமாகக் கருதப்படுவதில் அவர்கள் தூய்மையைக் காண்கிறார்கள். மேலும், காளி தேவியின் விசுவாசிகளைப் போலவே, அவர்கள் நிறைவேற்ற வேண்டியது தேவியின் ஆழ்ந்த ஆசை என்று கூறுகிறார்கள். மேலும், இறந்தவர்களுடன் உடலுறவு கொள்வது அவர்களுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளைக் கொடுக்கும் என்று அவர்களால் நம்பப்படுகிறது.

இதயத்தில் வெறுப்பின்மை

இதயத்தில் வெறுப்பின்மை

இந்த சாதுக்கள் தகன மைதானத்தில் உள்ள விலங்குகளுடன் தங்கள் உணவைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அது ஒரு மாடு அல்லது நாயாக இருந்தாலும், அனைத்து உயிர்களும் அவர்களுக்கு ஒன்றுதான். வெறுப்பவர் உண்மையிலேயே தியானிக்க முடியாது என்று அவர்கள் நம்புகிறார்கள். எனவே, சாதுக்கள் தியானிக்க வெறுப்புணர்வே இல்லாத வாழ்க்கை வாழ்வது முக்கியம்.

அகோரிகளின் ஆயுள்

அகோரிகளின் ஆயுள்

மற்ற அகோரிகள் பின்பற்றும் விதமாக கினா ராம் என்ற அகோரி 150 ஆண்டுகள் வாழ்ந்ததாகவும் அவரது மரணம் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இறந்ததாக கூறப்படுகிறது. பல அகோரிகளும் அவரை தங்களின் குருவாக கருதுகிறார்கள்.

உயிர்வாழும் ரகசியங்கள்

உயிர்வாழும் ரகசியங்கள்

இந்த சாதுக்கள் கடுமையான மற்றும் தீவிரமான வானிலைகளில் கூட வாழ்வார்கள். அவர்கள் பயங்கரமான காடுகளிலும் பனி மூடிய மலைகளிலும் வாழத் தெரிந்தவர்கள். வெப்பமான பாலைவனத்திலும் அவர்களை பார்க்கலாம், ஒரு சாதாரண மனிதர் இந்த சூழ்நிலைகளில் ஒருபோதும் வாழமுடியாது.

MOST READ: இந்த காய்கறிகளை சரியாக சமைக்காமல் சாப்பிட்டால் உங்கள் உயிரே போக வாய்ப்புள்ளதாம் தெரியுமா?

மாந்திரீகம்

மாந்திரீகம்

அகோரிகள் சூனியம் செய்வதாக அறியப்படுகிறார்கள், ஆனால் அவர்கள் யாருக்கும் அல்லது எதற்கும் தீங்கு விளைவிப்பதில்லை, அது அவர்களை குணமாக்குகிறது என்றும் இறந்தவர்களுடன் பேச அவர்களின் அமானுஷ்ய சக்திகளை அதிகரிக்கிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் நிறைய சடங்குகளை செய்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mysterious World of Aghoris

Check out some weird facts about Aghoris which are simply beyond our perception.
Story first published: Wednesday, August 12, 2020, 18:06 [IST]
Desktop Bottom Promotion