For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2020 ஆம் ஆண்டில் சாதித்த மிகவும் சக்தி வாய்ந்த இந்திய பெண்கள்!

|

பெண்கள் இந்தியாவில் மட்டுமின்றி உலகில் அனைத்து பகுதிகளிலும் சாதனை படைத்து வருகிறார்கள். தங்களுக்கு பிடித்த துறைகளில் தங்களின் திறமைகளை வெளிக்காட்டி, தாங்களும் சிறந்தவர்கள் என்று நிரூபித்து வருகின்றனர். இத்தகைய பெண்கள் பழங்கால ஆணாதிக்க விதிமுறைகளை உடைத்தெறிவது மட்டுமல்லாமல், பாரம்பரியமாக ஆணாதிக்கம் செலுத்தும் துறைகளிலும் புகுந்து தங்களின் திறமைகளால் சிறந்தும் விளங்குகிறார்கள்.

ஒரு பில்லியன் டாலரில் தொடங்கப்பட்ட நிறுவனத்தின் இணை நிறுவனரில் இருந்து இந்தியாவின் பணக்கார பெண் வரை என மிகவும் பிரபலமான ஃபோர்ப்ஸில் இடம்பெற்று பல இந்திய பெண்கள் சாதனைப் படைத்துள்ளனர். கீழே 2020 ஆம் ஆண்டில் சாதித்த மிகவும் சக்தி வாய்ந்த டாப் 10 இந்திய பெண்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

MOST READ: மார்ச் மாதம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு அற்புதமாக இருக்கப் போகுது.. உங்க ராசியும் இதுல இருக்கா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரியங்கா சோப்ரா ஜோனஸ்

பிரியங்கா சோப்ரா ஜோனஸ்

தற்போது உலகின் மிகவும் வெற்றிகரமான மற்றும் செல்வாக்கு மிக்க பிரபலங்களில் ஒருவராக பிரியங்கா சோப்ரா ஜோனஸ் கருதப்படுகிறார். இவர் சிறந்த நடிகை மட்டுமின்றி, இவர் உலகளவில் ஒரு சொந்தமான தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ஒரு வெற்றிகரமான தொழிலதிபரரும் கூட. 2018 ஆம் ஆண்டில், அவர் பம்பிள் என்ற ஒரு டேட்டிங் ஆப்பில் முதலீடு செய்த பின்னர் தொழில்நுட்ப முதலீட்டாளர் ஆனார். பார்ச்சூன் இந்தியா படி, இந்த ஆப் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடத்திற்குள் 2 மில்லியனுக்கும் அதிகமான யூசர்களைப் பதிவு செய்தது. 2020 ஆம் ஆண்டில், இவர் பார்ச்சூன் இந்தியாவின் வணிகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலில் இடம் பெற்றார். மேலும் இந்த பட்டியலில் இவர் 37 ஆவது இடத்தையும் பிடித்துள்ளார்.

பாலா தேவி

பாலா தேவி

ஸ்காட்டிஷ் நிறுவனமான ரேஞ்சர்ஸ் எஃப்.சி. என்ற ஒரு வெளிநாட்டு கிளப்புடன் ஒப்பந்தம் செய்த முதல் இந்திய கால்பந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றார். ஜனவரி மாதம் அந்த கிளப் பாலா தேவி 10 ஆம் நம்பர் ஜெர்சி அணிந்திருந்ததை வெளியிட்டது. பாலா தேவை கால் பந்து வீரர் மட்டுமின்றி, மணிப்ழுர் காவல் துறையிலும் பணியாற்றுகிறார்.

லெப்டினன்ட் ஜெனரல் மாதுரி கனிட்கர்

லெப்டினன்ட் ஜெனரல் மாதுரி கனிட்கர்

ஜெனரல் மாதுரி கனிட்கர் இந்திய வரலாற்றில் மூன்றாவது பெண் லெப்டினன்ட் ஜெனரல் மற்றும் இந்திய ராணுவத்தில் இரண்டாவது மிகப்பெரிய பதவியை அடைந்த முதல் பெண் என்ற பெருமைக்கு உரியவர்.

சீமா குஷ்வாஹா

சீமா குஷ்வாஹா

டெல்லியில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த நிர்பயாவின் வழக்கறிஞர் தான் சீமா குஷ்வாஹா. கடந்த 7 ஆண்டுகளாக நிர்பயாவை சீரழித்த குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர, நிர்பயாவின் பெற்றோருடன் சேர்ந்து கடுமையாக போராடி வெற்றி கண்டவர்.

ரிது கரிதால்

ரிது கரிதால்

2020 ஆம் ஆண்டின் ஃபோர்ப்ஸ் இந்தியா Self Made Women பட்டியலில் இடம் பெற்றவர் தான் ரிது கரிதால். 'ராக்கெட் பெண்மணி' என்று அழைக்கப்படும் ரிது கரிதால் மங்கல்யான் திட்டத்தின் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.

பில்கிஸ் பானு

பில்கிஸ் பானு

ஷாஹீன் பாகின் 'டாதி' என்று அழைக்கப்படும் 82 வயதான பில்கிஸ் பானு, 2020 டைம் இதழின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். ஷாஹீன் பாக் நகரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக 2 மாத கால உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்ட போட கவனத்தை ஈர்த்தவர் தான் பில்கிஸ் பானு.

அங்கிட்டி போஸ்

அங்கிட்டி போஸ்

ஃபேஷன் சில்லறை விற்பனையாளர்களுக்கான தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக தளமான ஜிலிங்கோவின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தான் அங்கிட்டி போஸ். இவர் 1 பில்லியன் டாலரில் தொடங்கப்பட்ட நிறுவனத்தின் முதல் பெண் இணை நிறுவனராக இருந்தார். அதோடு 2020 ஆம் ஆண்டின் ஃபோர்ப்ஸ் இந்தியா Self Made Women பட்டியலிலுல் இடம் பெற்றார்.

திவ்யா கோகுல்நாத்

திவ்யா கோகுல்நாத்

திவ்யா கோகுல்நாத் ஒரு ஆசிரியர் மற்றும் பெண் தொழிலதிபர். "Byju's-The Learning App" என்ற கல்வி கற்றல் தொடர்பான ஆப்பின் இணை நிறுவனர் ஆவார். இவர் Byju's-ன் நிறுவனர் பைஜு ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார். ஃபோர்ப்ஸ் வெளியிட்ட 2020 ஆசியாவின் சக்திவாய்ந்த பெண் தொழிலதிபர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

அமீரா ஷா

அமீரா ஷா

அமீரா ஷா ஒரு இந்திய தொழில்முனைவோர் ஆவார். இவர் மெட்ரோபோலிஸ் ஹெல்த் கேர் (Metropolis Health Care) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார். ஃபோர்ப்ஸ் ஆசியாவின் 2020 ஆம் ஆண்டின் சக்திவாய்ந்த பெண் தொழிலதிபர்களின் பட்டியலில் இடம் பிடித்த இந்திய பெண்களுள் இவரும் ஒருவர் ஆவார்.

ரோஷினி நாடார் மல்ஹோத்ரா

ரோஷினி நாடார் மல்ஹோத்ரா

ரோஷினி நாடார் மல்ஹோத்ரா ஒரு இந்திய தொழிலதிபர், HCL டெக்னாலஜிஸின் தலைவர் மற்றும் இந்தியாவில் பட்டியலிடப்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை வழிநடத்தும் முதல் பெண். 36,800 கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள இந்தியாவின் பணக்கார பெண் தான் ரோஷினி. ஃபோர்ப்ஸ் படி, உலகின் மிக சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் இவர் 54 வது இடத்தில் உள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Most Powerful Women Of India In 2020

International Womens day 2021: Here are some powerful Indian women of 2020. Take a look.
Story first published: Monday, March 1, 2021, 14:08 [IST]