Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 27 முதல் இந்த 4 ராசிக்காரங்க நிறைய பிரச்சனைகளை சந்திக்கப் போறாங்க...
பிப்ரவரி மாதத்தின் ஆரம்பத்தில் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு புதன் மாறினார். அதன் பின் பிப்ரவரி 27 ஆம் தேதி புதன் கும்ப ராசிக்கு மாறவுள்ளார்.
Mercury Transit In Aquarius On February 2023: நவகிரகங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றும். அந்த வகையில் 2023 பிப்ரவரி மாதத்தில் பல கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன. குறிப்பாக புதன் பிப்ரவரி மாதத்தில் இரண்டு முறை ராசியை மாற்றுகிறார். அதே சமயம் அஸ்தமனமாகிறார். அதில் மாதத்தின் ஆரம்பத்தில் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு மாறினார். அதன் பின் பிப்ரவரி 27 ஆம் தேதி புதன் கும்ப ராசிக்கு மாறவுள்ளார். இந்த கும்ப ராசியில் ஏற்கனவே சனியும், சூரியனும் பயணித்து வருகிறார்கள். இந்நிலையில் புதன் கும்ப ராசிக்கு செல்லும் போது, கும்ப ராசியில் சூரியன், புதன் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. புதன் இந்த கும்ப ராசியில் மார்ச் 16 ஆம் தேதி வரை இருந்து, பின் மீன ராசிக்கு செல்வார்.

ஜோதிடத்தில் பேச்சு, தகவல் தொடர்பு, புத்திசாலித்தனம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன். இப்படிப்பட்ட புதன் ராசியை மாற்றும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதுவும் கும்ப ராசிக்கு புதன் செல்வதால், சில ராசிக்காரர்கள் நிதி நிலை, ஆரோக்கியம், தொழில், குடும்ப வாழ்க்கை போன்றவற்றில் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களுக்கு எதிராக சதி செய்ய வாய்ப்புள்ளது. தொழிலில் வெற்றியைக் காண கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இருப்பினும் வெற்றி காண முடியாமல் போகலாம். குடும்ப சூழல் சற்று பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். முதலீடு செய்தால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பதால் முதலீடுகளைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை பிபி உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் கன்னி ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் வேலையில் சிரமத்தை சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. நிதி விஷங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் கடன் கொடுத்துவிடாதீர்கள். உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம். குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். சொத்து தொடர்பான தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நற்பலனைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கலாம். இக்காலத்தில் உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். முதலீடு விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் பண இழப்பை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் உங்கள் பேச்சை கட்டுப்படுத்துங்கள். இல்லாவிட்டால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் செலவுகள் திடீரென்று அதிகரிக்கும். உங்கள் ஆடம்பரத்திற்காக நிறைய பணத்தை செலவழிப்பீர்கள். ஆனால் உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பண பிரச்சனையை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் முதலீடுகளை செய்யாதீர்கள். தம்பதிகளுக்கு இடையே பிரச்சனைகளால் இடைவெளி ஏற்படலாம். குடும்ப விஷயத்தில் எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
