Latest Updates
-
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: மே மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் அபார வளர்ச்சியை காண்பாங்க..
Budh Gochar February 2023: புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 27 முதல் இந்த ராசிகளுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
கும்ப ராசிக்கு செல்லும் புதன், அந்த ராசியில் மார்ச் 15 ஆம் தேதி வரை இருப்பார். இதனால் புதன் பெயர்ச்சியின் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
Budh Gochar February 2023: நவகிரகங்களில் புத்திகாரகன் என்று அழைக்கப்படுபவர் புதன். நவகிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இந்த புதன் தற்போது சனி ஆளும் மகர ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2023 பிப்ரவரி 27 ஆம் தேதி சனியின் அசல் முக்கோண ராசியான கும்ப ராசிக்கு புதன் பெயர்ச்சியாகிறார். சனியும், புதனும் நட்பு கிரகங்கள். எனவே கும்ப ராசிக்கு செல்லும் புதன் அற்புதமான பலன்களை வழங்கப் போகிறார்.

தகவல் தொடர்பு, பேச்சு ஆகியவற்றிற்கு காரணமாக புதன் கருதப்படுவதால், புதன் பெயர்ச்சியின் தாக்கமானது ஒருவரது தகவல் தொடர்பு திறன் மற்றும் பேச்சில் இருக்கும். கும்ப ராசிக்கு செல்லும் புதன், அந்த ராசியில் மார்ச் 15 ஆம் தேதி வரை இருப்பார். இதனால் புதன் பெயர்ச்சியின் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் காணப்படும். இப்போது கும்பம் செல்லும் புதனால் மார்ச் 15 வரை 12 ராசிக்கார்களுக்கும் எப்படி இருக்கும் என்பதை காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் முயற்சியால் வருமானம் அதிகரிக்கும். நிதி நிறுவனத்தில் இருப்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வணிகர்களுக்கு நல்ல அதிர்ஷ்டமான மற்றும் லாபகரமான காலமாக இருக்கும். ஊடகத்தில் இருப்பவர்கள் நல்ல பணத்தை சம்பாதிப்பார்கள். சட்ட விஷயங்களில் வெற்றி கிடைக்கு. திருமணமானவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். மாணவர்களின் செயல்திறன் வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பணியிடத்தில் சிறப்பான செயல்திறனால் நல்ல பாராட்டைப் பெறுவீர்கள். பரம்பரை தொழிலில் இருப்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வேகமாக முடிக்கப்படும். ரியல் எஸ்டேட்டில் பணிபுரிந்தால், அதில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். இக்காலகட்டத்தில் உங்களின் நற்பெயர் அதிகரிக்கும், உறவுகள் மேப்டும். உங்களுக்கும் உங்கள் தந்தைக்கும் இடையேயான உறவு வலுவாகும்.

மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். பணியிடத்தில் மரியாதையும், நற்பெயரும் அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் செல்லும் முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். இக்காலத்தில் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் தந்தையுடனான உறவு மேம்படும். உங்களின் நண்பர்களின் உதவியால் முக்கிய வேலைகளை முடிப்பீர்கள்.

கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் பணியிடத்தில் உங்களுக்கு எதிராக சதி திட்டங்கள் செய்யப்படலாம் என்பதால் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. எம்என்சி-யில் வேலை செய்பவர்களுக்கு இக்காலம் நல்ல காலமாக இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு இக்காலத்தில் நல்ல வேலை கிடைக்கும். ஆனால் இக்காலத்தில் முதலீடு செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதகால் வியாபாரம் செய்பவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும். இருப்பினும் இக்காலத்தில் வாக்குவாதங்களில் கவனமாக இருங்கள். நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க உங்கள் வாழ்க்கைத் துணை உதவியாக இருப்பார். வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். புதிய நபர்களை இக்காலத்தில் சந்திப்பீர்கள்.

கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலமானது சற்று சவாலானதாக இருக்கும். உங்களின் கடின உழைப்பு உங்களுக்கு நற்பெயரை வழங்கும். உடன் பணிபுரிபவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்த்திடுங்கள். அதிக செலவுகள் உங்கள் நிதி நிலையை மோசமாக்கும். புதிதாக எதிலும் முதலீடு செய்யாதீர்கள். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.

துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் பத்திரிக்கை, நடிப்பு, ஊடகம் மற்றும் கலைத் துறைகளில் இருப்பவர்களுக்கு அவர்களின் முயற்சிகளுக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். மாணவர்கள் இக்காலத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்பவர்க்ள், கூட்டாளருடன் நேர்மையாக இருக்க வேண்டும். எதையும் மறைக்காதீர்கள். இல்லாவிட்டால் அது உங்கள் உறவை சேதப்படுத்திவிடும். இக்காலத்தில் உங்கள் வேலையை மாற்ற வாய்ப்புள்ளது .

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் பணிபுரிபவர்கள் இக்காலத்தில் வெற்றியைப் பெற வழக்கத்தை விட அதிக முயற்சிகளை எடுக்க வேண்டும். வேலையை மாற்ற நினைத்தால், அதற்கு முயற்சிக்கலாம். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். வீட்டில் சூழல் அமைதியாக இருக்கும். பரம்பரை சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய வாகனம் வாங்கவும் வாய்ப்புகள் அமையும்.

தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உறவினர்களால் நல்ல மகிழ்ச்சியை அடைவீர்கள். உங்களுடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்புடன் இருப்பார்கள். பணியிடத்தில் உங்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படலாம். ஊடகம், பத்திரிக்கை, மார்கெட்டிங் அல்லது தகவல் தொடர்பு போன்றவற்றில் பணிபுரிபவர்கள், இக்காலத்தில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். திருமணமான தம்பதிகளுக்கு இடையே சிறுசிறு பிரச்சனைகள் வரலாம்

மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நீங்கள் மிகவும் மென்மையாக பேசுவீர்கள். பேச்சால் மற்றவர்களை எளிதில் ஈர்ப்பீர்கள். உங்கள் முயற்சிகளால் தொழிலில் வெற்றி காண்பீர்கள். வணிகர்கள் இக்காலத்தில் பயணம் செய்ய வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக இக்காலம் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் உழைப்புக்கு ஏற்ற சம்பளம் வழங்கப்படும். இடமாற்றத்திற்கு வாய்ப்புள்ளது.

கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் கடினமான சூழ்நிலைகளில் இருந்து எளிதில் வெளியேறுவீர்கள். வேலையை இழக்கவும் வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகளுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகள் உங்களை மகிழ்ச்சியடைய வைப்பார்கள். மாணவர்கள் தங்கள் இலக்குகளை அடைவார்கள். இக்காலகட்டத்தில் உறவினர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் அதிக செலவு செய்யாதீர்கள். இக்காலகட்டத்தில் வேலை தொடர்பாக வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளது. உங்கள் வருமானம் அதிகரிக்கலாம். வணிகர்களுக்கு இக்காலம் அவ்வளவு சிறப்பாக இருக்காது. இக்காலத்தில் பெரிய முதலீடுகளை செய்து விடாதீர்கள். இல்லாவிட்டால் இழப்புகளை சந்திக்க நேரிடும். குடும்ப வாழ்க்கை பிரச்சனைகள் நிறைந்து இருக்கும். மாணவர்கள் மேல்படிப்புக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











