Latest Updates
-
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
கன்னியில் புதன் வக்ரமாவதால் செப்டம்பர் 10 முதல் இந்த ராசிகளுக்கு யோகமான காலமாக இருக்கப் போகுது...
செப்டம்பர் 10 ஆம் தேதி காலை கன்னி ராசியில் புதன் வக்ரமாகிறார். கன்னி ராசியில் வக்ரமாகும் புதனால் எந்த ராசிகளுக்கு நற்பலன்கள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
ஜோதிடத்தில் உள்ள கிரகங்களில் புதன் மிகவும் சிறப்பு வாய்ந்த முக்கியமான கிரகமாகும். ஏனெனில் புதன் புத்திகாரனாவார். அதனால் தான் புதனின் ஒவ்வொரு மாற்றமும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த புதன் கன்னி ராசியில் தற்போது யணித்து வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் 10 ஆம் தேதி காலை கன்னி ராசியில் புதன் வக்ரமாகிறார். அதன் பின் அக்டோபர் 02 ஆம் தேதி புதன் கன்னி ராசியில் நேர்பாதையில் பயணிக்கத் தொடங்குவார்.

கிரகங்கள் வக்ர நிலையில் இருக்கும் போது அதிக செல்வாக்கு கொண்ட ஒரே கிரகம் என்றால் அது புதன் மட்டும் தான். வக்ரத்தில் இருக்கும் போது எந்த கிரகத்தின் பலன்களும் சற்று மோசமாகவே இருக்கும் என்று கூறுவார்கள். ஆனால் அது அனைத்து ராசிகளிலும் இருக்காது. சில ராசிக்காரர்களுக்கு புதன் வக்ரமாவதால் நற்பலன்களும் கிடைக்கும். இப்போது கன்னி ராசியில் வக்ரமாகும் புதனால் எந்த ராசிகளுக்கு நற்பலன்கள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

மிதுனம்
மிதுன ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் சமூகத்தில் நற்பெயரை உருவாக்க முடியும். பல செல்வாக்குமிக்கவர்களை ஈர்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும். புதனின் வக்ர நிலை குடும்ப உறவுகளை மேம்படுத்த உதவும். ஒரு வீட்டை கட்ட அல்லது வீட்டைப் புதுப்பிக்க நினைத்தால், இக்காலத்தில் உங்களின் திட்டங்களில் வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். அதனால் வழக்கத்தை விட அதிகமான நற்பலன்கள் கிடைக்கும். புதன் வக்ர நிலையால் குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் நீங்கி, மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். வீட்டுச் சூழல் அமைதியாக இருக்கும். இக்கால கட்டத்தில் வாழ்க்கையில் சில மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பீர்கள்.

தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் பணியிடத்தில் பணிபுரிபவர்களுடன் ஒரு வலுவான பிணைப்பை உருவாக்க முடியும். அவர்களின் ஆதரவால் உங்கள் பணியில் வெற்றி பெறுவீர்கள். தொழிலதிபர்கள், இந்த காலகட்டத்தில் அதிக வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

மகரம்
மகர ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் உங்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். வேலை காரணமாக சிலர் பயணம் செய்ய வேண்டியிருக்கும். இதனால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications
