கன்னியில் புதன் வக்ரமாவதால் செப்டம்பர் 10 முதல் இந்த ராசிக்காரங்க ரொம்ப கவனமாக இருக்கணும்...

புதன் 2022 செப்டம்பர் 10 ஆம் தேதி கன்னி ராசியில் வக்ரமாகிறார். அதன் பின் அக்டோபர் 02 ஆம் தேதி புதன் நேர்பாதையில் பயணிக்கத் தொடங்குவார். கன்னி ராசியில் வக்ரமாகும் புதனால் 12 ராசிக்காரர்களும் பெறும் பலன்கள் இதோ!

ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படுபவர் புதன். இந்த புதன் புத்தி, தகவல் தொடர்பு, கணிதம், நட்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. தற்போது இந்த புதன் கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்த புதன் 2022 செப்டம்பர் 10 ஆம் தேதி கன்னி ராசியில் வக்ரமாகிறார். அதன் பின் அக்டோபர் 02 ஆம் தேதி புதன் நேர்பாதையில் பயணிக்கத் தொடங்குவார். பின்பு 2022 அக்டோபர் 26 ஆம் தேதி புதன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்வார்.

Mercury Retrograde in Virgo 10 September 2022 Effects and Remedies on Zodiac Signs in Tamil

செப்டம்பர் 10 ஆம் தேதி புதன் வக்ரமாவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இருப்பினும் ஒரு கிரகம் வக்ரமாகும் போது, அதன் நற்பலன்கள் தாமதமாகும் மற்றும் சற்று கடினமான காலமாக இருக்கும். இப்போது கன்னி ராசியில் வக்ரமாகும் புதனால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

புதன் வக்ரமாவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் லாபமும், வருமானமும் அதிகரிக்கும். பணியில் மாற்றம் ஏற்படலாம். குடும்ப சூழ்நிலை மேம்படும். ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். முக்கியமாக கோபத்தைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு புதன் வக்ர பெயர்ச்சி காலம் சாதகமாக இருக்கும். நேர்மறையாக இருப்பீர்கள். நம்பிக்கை அதிகரிக்கும். வருமானத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். தாயின் முழு அன்பையும் பெறுவீர்கள். இக்காலத்தில் ஆடைகளை பரிசாக பெறுவீர்கள். வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

மிதுனம்

மிதுனம்

புதனின் வக்ர பெயர்ச்சியானது மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் நற்பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் பணி பாராட்டப்படும். வியாபாரிகளுக்கு கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு புதன் வக்ர பெயர்ச்சி அற்புதமாக இருக்கும். தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் மற்றும் இன்டர்வியூ செல்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். இக்காலத்தில் பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புள்ளது. உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும். ஆனால் இக்காலத்தில் செலவுகள் அதிகம் இருக்கும்.

சிம்மம்

சிம்மம்

புதன் வக்ர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களின் வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். குடும்ப மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். அதிக உற்சாகம் கொள்வதைத் தவிர்த்திடுங்கள். இக்காலத்தில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இடமாற்றத்திற்கான வாய்ப்புள்ளது.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் முழு நம்பிக்கையுடன் இருப்பார்கள். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். இருப்பினும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இக்காலகட்டத்தில் உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. பெற்றோரிடம் இருந்து பண உதவி கிடைக்கும். பேசும் போது நிதானத்தைக் கடைபிடியுங்கள். இக்காலத்தில் எதிர்மறை எண்ணங்கள் உங்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

துலாம்

துலாம்

புதன் வக்ர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு சற்று மோசமாக இருக்கும். மன உளைச்சலால் சிரமப்படுவீர்கள். தொழிலில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் பாதகமான சூழ்நிலைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. உங்களின் பொறுமை குறையும். வாழ்க்கைத் துணையிடம் இருந்து சற்று விலகி இருப்பீர்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதன் வக்ர பெயர்ச்சி அசுப பலன்களைத் தரும். அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். எதிர்மறை எண்ணங்களால் தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இருப்பினும், இக்காலத்தில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் உள்ளன.

தனுசு

தனுசு

புதன் வக்ர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களின் மனதில் எதிர்மறை எண்ணங்கள் நிறைந்திருக்கும். எனவே இக்காலத்தில் மன அமைதியைப் பராமரிக்க அறிவுறுத்தப்படுகிறது. வருமானம் அதிகரிக்கும் அதே வேளையில் செலவுகளும் அதிகரிக்கும். உங்கள் மீதான நம்பிக்கையைக் குறைத்து, உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டாம். ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். நண்பர்களின் உதவியால் சில வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு புதன் வக்ர பெயர்ச்சியால் தொழில் சார்ந்த பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். நம்பிக்கை அதிகரிக்கும். அதே சமயம் மனதில் எதிர்மறை எண்ணங்களும் இருக்கும். இக்காலத்தில் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். மூதாதையர் சொத்துக்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இந்த புதன் வக்ர பெயர்ச்சி காலத்தில் தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பார்கள். மனதில் ஒருவித குழப்பத்துடனேயே இருக்க நேரிடும். பணியிடத்தில் மாற்றம் ஏற்படலாம். வருமானம் குறையும். செலவுகள் அதிகரிக்கும். இதனால் சற்று சிரமங்களை சந்திப்பீர்கள். இக்காலத்தில் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்கள் புதன் வக்ர பெயர்ச்சி காலத்தில் வணிகத்தில் ஈடுபடும் போது கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். முக்கிய முடிவுகளை எடுக்கும் போது குடும்ப உறுப்பினர்களை அணுகவும். மாணவர்களுக்கு சாதகமற்ற காலமாக இருக்கும். ஆயினும், நிதி நிலை வலுவாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, September 8, 2022, 12:20 [IST]
Desktop Bottom Promotion