Latest Updates
-
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
சிம்மத்தில் சூரியன்-புதன் சேர்க்கையால் உருவாகும் புதாத்திய யோகம்.. இந்த 5 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது..
2022 ஆகஸ்ட் 01 ஆம் தேதி புதன் சிம்ம ராசிக்குள் நுழைந்தார். இந்நிலையில் 2022 ஆகஸ்ட் 17 ஆம் தேதி சூரியன் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் சிம்ம ராசியில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.
ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமின்றி, கிரகங்களின் சேர்க்கை மற்றும் அதனால் உருவாகும் யோகங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். 2022 ஆகஸ்ட் 01 ஆம் தேதி புதன் சிம்ம ராசிக்குள் நுழைந்தார். இந்நிலையில் 2022 ஆகஸ்ட் 17 ஆம் தேதி சூரியன் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் சிம்ம ராசியில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.

சூரியனும், புதனும் எந்த ராசியின் சேர்ந்து இருந்தாலும், அது புதாதித்ய யோகத்தை உருவாக்கும். புதாதித்ய யோகம் ஒரு சுப யோகம். இந்த யோகம் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த புதாதித்ய யோகமானது சிம்ம ராசியில் ஆகஸ்ட் 21 வரை இருக்கும். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் உள்ளது. ஆனால் சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் அதிக நன்மைகளைப் பெறவுள்ளார்கள். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதை இப்போது காண்போம்.

கடகம்
சிம்மத்தில் உருவாகும் புதாதித்ய யோகத்தால் கடக ராசிக்காரர்களின் சில வேலைகளில் பெரிய வெற்றி கிடைக்கும். பண வரவு மிகவும் சிறப்பாக இருக்கும். உங்களின் அனைத்து பணிகளும் அனைவராலும் பாராட்டப்படும். வியாபாரிகளுக்கு இந்த யோகத்தால் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டில் உருவாகும் புதாதித்ய யோகத்தால், சிம்ம ராசிக்காரர்களுக்கு இது சிறப்பான காலமாக இருக்கும். இக்காலத்தில் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. புதாதித்ய யோகத்தால் நிதி நிலைமை வலுவாக இருக்கும். பல வழிகளில் இருந்து உங்களைத் தேடி பணம் வரும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவுகள் மேம்படும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதே சமயம் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டில் புதாதித்ய யோகம் உருவாகவுள்ளது. இதனால் வருமானம் உயரும் வாய்ப்புள்ளது. கையில் பணம் அதிகம் இருக்கும். வணிகத்தில் பணத்தை முதலீடு செய்தால், நல்ல லாபம் கிடைக்கும். சொத்து மற்றும் வாகனம் தொடர்பான எந்த ஒரு முடிவை எடுக்கவும் இது நல்ல காலம்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டில் புதாதித்ய யோகம் உருவாகிறது. இதனால் வேலை மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபகரமான காலமாக இருக்கும். வணிகம் மேம்படும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த புதாதித்ய யோக காலம் நல்ல அதிர்ஷ்டமானதாக இருக்கும். அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். நிலுவையில் இருக்கும் உங்கள் வேலைகள் இக்காலத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications
