Latest Updates
-
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
இந்த 4 ராசி ஆண்கள் எப்பவும் மனைவியிடம் அடங்கிதான் போவாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
காதலர்களுக்கு இடையில் சமநிலை இருக்கும்போது அந்த உறவு அர்த்தமுள்ளதாகவும், அற்புதமானதாகவும் மாறுகிறது. துரதிர்ஷ்டவசமாக அனைவருக்கும் இப்படிப்பட்ட சமநிலையான உறவு கிடைத்து விடுவதில்லை. இதற்கு காரணம் இருவேறு ஆளுமை மற்றும் கருத்தியல் கொண்டவர்கள் காதலிப்பதுதான். வித்தியாசமான இருவர் காதலிக்கும் போது இந்த சமநிலையை பராமரிப்பது மிகவும் கடினம்.

சமநிலையற்ற காதலில் எப்போதும் ஒருவர் ஆதிக்கம் செலுத்துபவராக இருப்பார்கள். இதனால் காதலில் மற்றொருவர் அதிகம் பாதிக்கப்படக் கூடியவராக இருப்பார்கள். பெண்கள் மட்டுமல்ல சில சமயம் ஆண்களும் காதலில் இந்த அடக்குமுறைக்கு ஆளாவார்கள். ஜோதிடக் கணிப்புகளின் படி, சில ராசிகளில் பிறந்த ஆண்கள் இப்படி பெண்களின் ஆதிக்கத்திற்கு கீழ்ப்படிந்து செல்வார்கள். அவர்கள் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மிதுனம்
மிதுன ராசி ஆண்கள் தங்களுக்கு பிடித்த பெண்ணை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள ஆர்வமாக உள்ளனர். அவர்கள் காதலிக்கும்போது தங்கள் இதயம், வீடு, பணப்பை என அனைத்தையும் திறந்து வைப்பதன் மூலம் காதலை வெளிப்படுத்துகிறார்கள். இருப்பினும், தங்களுக்கான எல்லைகளை அமைத்துக் கொள்ளத் தவறுவதால், அவர்கள் ஆரோக்கியமற்ற கூட்டாளர்களிடம் ஈர்க்கப்படுகிறார்கள் மற்றும் உறவுகள் அவர்களின் கட்டுப்பாட்டை மீறுகின்றன. இப்படித்தான் மிதுன ராசிக்காரர்கள் சில சமயங்களில் மற்றவரின் ஆதிக்கத்தில் சிக்கிக்கொள்கிறார்கள்.

மீனம்
மீன ராசி ஆண்கள் மிகவும் அமைதியான மற்றும் அக்கறையுள்ளவர்களில் ஒருவர். அவர்கள் செய்ய விரும்புவது மகிழ்ச்சியானக் குடும்பத்தை உருவாக்குவதுதான். இந்த ஆண்களில் சிலர் மகிழ்ச்சியான வாழ்க்கைத்துணை மகிழ்ச்சியான வாழ்க்கையை உருவாக்குவார்கள் என்று நிரூபிக்கிறார்கள், எனவே அவர்கள் தங்கள் கருத்துக்கள் மீறப்படுவதாக உணரும்போது அல்லது அவர்களின் கூட்டாளிகள் தங்கள் உறவில் அனைத்து முடிவுகளையும் எடுக்கும்போது அவர்கள் பெரும்பாலும் எதிர்த்து பேச மாட்டார்கள். உறவில் மிகவும் தாமதமாகத்தான் அவர்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதை உணர்கிறார்கள்.

கடகம்
கடக ராசி ஆண்கள் எப்போதும் மற்றவர்களை மகிழ்விப்பவர்களாக இருப்பார்கள். எனவே அவர்கள் தங்கள் காதலியை முதலாளியாக இருக்க அனுமதிக்கிறார்கள். இருப்பினும், இந்த ஆண்களில் பலர் உறுதியான உறவில் ஈடுபடுவதற்கு முன் இருமுறை யோசிப்பது இல்லை. ஆனால் அவர்கள் செய்தவுடன், இந்த ஆண்களில் பெரும்பாலோர் அமைதியைக் காப்பதற்கும் சுமூகமான உறவைப் பெறுவதற்கும் பெண்களை அதிகாரம் செலுத்த அனுமதிக்கிறார்கள்.

மகரம்
மகர ராசி ஆண்கள் திருமண வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். எனவே என்ன செய்தாவது தங்கள் திருமண வாழ்க்கையை காப்பாற்ற முயலுவார்கள். திருமண உறவை பராமரிக்க அவர்கள் தங்கள் மனைவியுடன் நேரத்தை செலவிடுகிறார்கள். மேலும், தங்கள் உறவை வலுப்படுத்த கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் அவர்கள் தங்கள் காதலி/மனைவியுடன் உடன்படுகிறார்கள். தங்கள் மனைவியின் மகிழ்ச்சிதான் தங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதனால் அவர்களை ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications
