For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யாரை கொரோனா வைரஸ் பாதிக்கும் - எட்டாம் வீடு சொல்லும் ரகசியம்!

நோய்களுக்கும் நவ கிரகங்களுக்கும் தொடர்பு இருக்கிறது. ஜாதக கட்டங்களில் லக்னம் முதல் மோட்ச ஸ்தானம் எனப்படும் 12ஆம் வீடு வரைக்கும் உள்ள வீடுகளில் அமரும் கிரகங்களைப் பொருத்து ஒருவரை நோய் பாதிக்கிறது.

|

இன்றைக்கு உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். பன்றிக்காய்ச்சல் வந்த போதும் இப்படித்தால் உலகம் முழுவதும் ஒருவித பதற்றம் நிலவியது. அதே போல பனிக்காலத்தில் பரவக்கூடிய குளிர் நோயான இந்த கொரோனா வைரஸ் காய்ச்சல் பலரது உயிரையும் குடித்து வருகிறது. சாதாரண சளி காய்ச்சல் வந்தால் கூட இப்போது கொரோனா தாக்கியிருக்குமோ என்று பயப்படுகின்றனர். அட நமக்கெல்லாம் அந்த நோய் வரவே வராது என்று கெத்தாக நினைத்தவர்களுக்கு கூட திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தை தழுவியிருக்கிறார்கள். எந்த நோய் யாருக்கு வரும் என்று மருத்துவர்கள் கணிப்பதை விட மருத்துவ ஜோதிடத்தின் மூலம் கணிக்கலாம்.

Medical Astrology: Know Which Planets Denote Which Disease

சிலர் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் மருத்துவமனைக்கு செலவழித்துக்கொண்டே இருப்பார்கள். காரணம் ஏதாவது ஒரு நோய்கள் மாறி மாறி பாதித்துக்கொண்டே இருக்கும். எட்டாம் வீட்டில் நவகிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து நோய்கள் தாக்கும். ஒருவரின் ஜாதகத்தில் எட்டாம் இடம் ஆயுள் ஸ்தானம். ஆயுள் காரகன் சனிபகவான், ஆயுள் எப்படி முடியும் எந்த நோயினால் மரணம் நேரும் என்பதை கூட ஜோதிடத்தின் மூலம் கணிக்கலாம். தசாபுத்தியும் கூட மரணத்தை நிர்ணயிக்கிறது.

MOST READ: கொரோனா வைரஸ் - கர்ப்பிணிகள், குழந்தைகள் கவனமாக இருங்க...

ஜாதகத்தில் எட்டாம் இடத்தின் அதிபதி லக்னத்தில் இருந்தால் சில சங்கடங்கள் தோன்றும் என்றாலும், நல்ல ஆயுள் பலன் இருக்கும்.எட்டாம் இட அதிபதி இரண்டாம் இடத்தில் இருந்தால், அவர் 7ஆம் பார்வையாக எட்டாம் இடத்தைப் பார்ப்பார். அதன் மூலம் ஜாதகருக்கு தீர்க்க ஆயுள் கிடைக்கும். 8ஆம் இடத்திற்கான அதிபதி, எட்டில் இருப்பது அந்த ஜாதகருக்கு நீண்ட ஆயுளைத் தரக்கூடும். 8ஆம் இடத்திற்கான அதிபதி 6ல் மறைவதை விட, 12ஆம் வீட்டில் மறைவது, நல்ல ஆரோக்கியத்தையும், தீர்க்க ஆயுளையும் வழங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எந்த கிரகத்திற்கு எந்த நோய்

எந்த கிரகத்திற்கு எந்த நோய்

சந்திரன் ஒருவரின் ஜாதகத்தில் பாதகமான நிலையை பெற்றிருந்தால் ரத்த அழுத்தம், காச நோய், ரத்த சோகை, சளி, கபம், நீரிழிவு, குடல் புண் ஏற்படும். குரு ஒருவரின் ஜாதகத்தில் பாதகமான நிலையை பெற்றிருந்தால் தொண்டை சம்பந்தமான நோய்கள், தைராய்டு, பக்க வாதம், கீழ் வாதம், நீரிழிவு தாக்கும். சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் பாதகமான நிலையை பெற்றிருந்தால் கண், காது, மூக்கு நோய்கள். நுரையீரல் நோய், இருமல், பாலியல் தொடர்பான நோய்கள் ஏற்படும். சனி ஒருவரின் ஜாதகத்தில் பாதகமான நிலையை பெற்றிருந்தால் மனநோய், கை கால் வலிப்பு, மூளை பாதிப்பு, தோல் நோய் ஏற்படும்.

விடாமல் விரட்டும் நோய்கள்

விடாமல் விரட்டும் நோய்கள்

மேஷ லக்னத்திற்கு செவ்வாய் லக்னாதிபதியாகவும், எட்டாம் இட அதிபதியாகவும் உள்ளார். எனவே செவ்வாய் நீச்சம் பெற்றால் உடல் ஆரோக்கியம் கெடும். மனக் கஷ்டம் இருக்கும். எந்நேரமும் நோய் இருந்து கொண்டே இருக்கும். துலாம் லக்னத்திற்கு, சுக்ரன் தான் லக்னாதிபதியாகவும், எட்டாம் இட அதிபதியாகவும் இருக்கிறார். இவர் உச்சம் பெறுவது ஆறாம் இடம் என்பதால் நோய் தாக்கம் அதிகரிக்கும். ரிஷபம் மற்றும் சிம்ம லக்னத்திற்கு குரு தான் எட்டாம் இடத்தின் அதிபதி. இந்த ஜாதகர்களைப் பொறுத்தவரை குரு நீச்சம் பெறாமல் இருப்பது நல்லது. உச்சம் பெறாமலும் இருக்க வேண்டும். குரு நீச்சம், உச்சம் பெற்றிருந்தால் சிறுவயது முதல் நோய்கள் வந்து கொண்டே இருக்கும்.

சனி பகவான் தரும் நோய்கள்

சனி பகவான் தரும் நோய்கள்

மிதுன லக்னத்திற்கும், கடக லக்னத்திற்கும் சனியே எட்டாம் இடத்தின் அதிபதி. இவர் நீச்சம் பெறாமல் இருக்க வேண்டும். அப்படி நீச்சம் பெற்றால் அந்த ஜாதகரின் மனம் ஒரு நிலையில் இருக்காது. தவிர மூட்டு வலி, வயிற்றுக் கோளாறு, மூல நோய் வரக்கூடும். விருச்சிகம், கும்பம் லக்னத்திற்கு புதன் எட்டாம் இடத்தின் அதிபதி. எனவே புதன் ஆட்சி, உச்சம் பெற்றால் ஜாதகருக்கு யோகம். அதுவே நீச்சம் பெற்றால், ஜாதகரின் ஆயுள் பலம் குறையும். குடல் புண், ரத்த அழுத்தம் வரும், நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

நீரிழிவு நோய் பாதிப்பு

நீரிழிவு நோய் பாதிப்பு

கன்னி லக்னத்திற்கு செவ்வாய் எட்டாம் இட அதிபதியாக இருக்கிறார். இவர் மகரத்தில் உச்சம் பெறுவது நல்ல யோக பலன் தரும். நீண்ட ஆயுள் இருக்கும். மாறாக நீச்சம் பெற்றால் ஜாதகருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், எலும்பு தேய்மானம், மூட்டு வலிகள் தொல்லை தரும். தனுசு லக்னத்திற்கு எட்டாம் பாவாதிபதி சந்திரன். அவர் 6ஆம் பாவத்தில் உச்சம் பெறுவது யோகம் என்றாலும் ஜாதகர் மனநோயாளி போல் சில சமயம் நடந்து கொள்வார். சந்திரன் நீச்சம் பெற்றால் ஜாதகருக்கு முடக்குவாதம் போன்ற நோய்கள் தாக்கும்.

சூரியன் தரும் நோய்கள்

சூரியன் தரும் நோய்கள்

மகர லக்னத்திற்கு சூரியனே எட்டாம் இடத்தின் அதிபதி. சூரியன் நான்காம் இடமான மேஷ ராசியில் உச்சம் பெறுவது சிறப்பு. சூரியன் 10ஆம் இடமான துலாம் ராசியில் நீச்சம் பெற்று விடக்கூடாது. அவ்வாறு நீச்சம் பெற்றால் ஜாதகருக்கு தலைவலி, ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் போவது, உடல் சோர்வு, நரம்பு தளர்வு, சரியான உறக்கம் இல்லாமை போன்றவற்றால் தவிப்பார்கள்.

சளி தொந்தரவு

சளி தொந்தரவு

மீன லக்னத்திற்கு 8 ஆம் இடத்தின் அதிபதி சுக்ரன். இவர் 7ஆம் இடமான கன்னியில் நீச்சம் பெறுவது நன்மையை வழங்கும். மாறாக உச்சம் பெற்றால் அந்த ஜாதகருக்கு சிறுவயது முதல் நெஞ்சில் சளித் தொல்லை இருக்கும். இளம் வயதில் சர்க்கரை நோய், உடல் பருமன், தசைப்பிடிப்பு, தொற்று நோய்கள் பாதிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Medical Astrology: Know Which Planets Denote Which Disease

Medical Astrology helps to diagnose diseases from signs, houses and planets. It is also possible to predict death through Medical astrology. 8th house planets in connection to health.
Story first published: Thursday, January 30, 2020, 13:18 [IST]
Desktop Bottom Promotion