Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
Mangal Gochar March 2023 Effects: செவ்வாய் பெயர்ச்சியால் மே 10 வரை இந்த ராசிகளுக்கு சூப்பரா இருக்கப் போகுது...
செவ்வாய் 2023 மார்ச் 13 ஆம் தேதி காலை 05.02 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார். இந்த மிதுன ராசியில் செவ்வாய் மே 10 ஆம் தேதி வரை இருந்து, பின் கடக ராசிக்கு செல்வார்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். அந்த வகையில் நவகிரகங்களின் படைத்தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த செவ்வாய் 2023 மார்ச் 13 ஆம் தேதி காலை 05.02 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார்.

இந்த மிதுன ராசியில் செவ்வாய் மே 10 ஆம் தேதி வரை இருந்து, பின் கடக ராசிக்கு செல்வார். மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாயின் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்கள் நற்பலனையும், சில ராசிக்காரர்கள் மோசமான பலன்களையும் பெறலாம். இப்போது 2023 மார்ச் மாதத்தில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாயால் 12 ராசிக்காரர்களும் பெறும் பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசியின் முதல் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் மேஷ ராசிக்காரர்கள் ஆற்றல் நிறைந்து இருப்பார்கள். தைரியம் மற்றும் பலம் அதிகம் கொண்டிருப்பார்கள். இக்காலத்தில் எடுக்கும் முடிவுகள் மற்றும் செய்யும் வேலைகள் அனைத்தும் பாராட்டைப் பெறும். எப்பேற்பட்ட மோசமான சூழ்நிலைகளையும் எளிதில் கையாள்வீர்கள். குடும்பத்தில் இளைய உடன்பிறப்புகளால் பிரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். அதிக தொண்டுகளை செய்வீர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் எதிர்பாராத ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடும். கண்கள், பற்கள் மற்றும் காது தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எவ்வளவு வெற்றிகள் கிடைத்தாலும், குடும்பத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்காது. ஆரோக்கிய பிரச்சனைகள் இக்காலத்தில் உங்களை தொந்தரவு செய்யும். இக்காலகட்டத்தில் உங்கள் பிடிவாதத்தை கட்டுப்பாட்டில் வைத்து உழைத்தால் வெற்றி காண்பீர்கள். எந்தவொரு பிரச்சனையையும் பேசி தீர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். திருமண வேலைகள் சற்று தாமதமாகும். கூட்டு தொழில் செய்வதை இக்காலத்தில் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

கடகம்
கடக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் செலவுகள் மற்றும் அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து சில மோசமான செய்திகளைப் பெறக்கூடும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் யாருக்கும் அதிக கடன் கொடுக்காதீர்கள். இல்லாவிட்டால் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். எந்த ஒரு பிரச்சனையையும் பேசி தீர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலமானது சிம்ம ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். உங்களின் அனைத்து திட்டங்களும் நல்லபடியாக நடந்து, அதில் வெற்றியும் கிடைக்கும். உங்களின் வருமானம் அதிகரிக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. காதல் விஷயங்களில் அலட்சியமாக இருப்பீர்கள். வேலையில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்க விரும்பினால், அதற்கு இக்காலத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் எதிர்பாராத பல இனிமையான பலன்களைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெறுவார்கள். இக்காலத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். நீங்கள் ஏதேனும் போட்டியில் நிற்க முடிவு செய்தால், இக்காலத்தில் அதில் வெற்றி காண்பீர்கள். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும்.

துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பல எதிர்பாராத பலன்களைப் பெறுவார்கள். வேலைகளில் தடைகளை சந்தித்தாலும், அதில் வெற்றி காண்பீர்கள். புதிய வேலையைத் தொடங்க சிறிது காலம் தள்ளிப் போடுங்கள். எப்பேற்பட்ட கடினமான சூழ்நிலைகளையும் எளிதில் கையாள்வீர்கள். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. இதுவரை உங்களை வீழ்த்த நினைத்தவர்கள், இக்காலத்தில் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். மொத்தத்தில் இக்காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அவ்வளவு நன்றாக இருக்காது. ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. நிதி ரீதியாக, இக்காலம் வலுவாக இருக்கும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். வீடு வாங்க விரும்பினால் அதற்கு இக்காலம் நன்றாக இருக்கும். அலுவலகத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

தனுசு
தனுசு ராசியின் 7 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் திருமண வாழ்க்கை சற்று கசப்பாக இருக்கும். திருமண பேச்சு வார்த்தைகளில் சற்று தாதமம் ஏற்படும். கூட்டு வியாபாரம் செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. அதிக உணர்ச்சிவசப்பட்டு எந்த ஒரு வேலையையும் அல்லது முடிவையும் எடுக்காதீர்கள். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்.

மகரம்
மகர ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இருப்பினும் அதிக அலைச்சலை சந்திக்க நேரிடும். வெளிநாடு செல்ல முயற்சித்தால், அதற்கு இக்காலத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். புதிய வேலையை தொடங்க நினைத்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். மொத்தத்தில் இக்காலத்தில் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

கும்பம்
கும்ப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பலவிதமான சவால்களை சந்திப்பீர்கள். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற அதிக முயற்சி செய்ய வேண்டியிருக்கும். பணிபுரிபவர்கள் வேலையில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புண்டு.

மீனம்
மீன ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இதனால் இக்காலத்தில் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விரும்பத்தகாத செய்திகளைப் பெறுவீர்கள். கடினமான சூழ்நிலைகளையும் எளிதில் சமாளிப்பீர்கள். இக்காலத்தில் எந்த ஒரு முடிவையும் கவனமாக எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications