Just In
- 1 hr ago
Today Rasi Palan 31 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்...
- 10 hrs ago
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- 10 hrs ago
பெற்றோர்களே! உங்க குழந்தை காலையில் சீக்கிரம் எழுந்திருக்காம இருக்கா? அப்ப இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க!
- 11 hrs ago
தம்பதிகளே! உங்க உறவில் நம்பிக்கையையும் நெருக்கத்தையும் உருவாக்க நீங்க என்ன பண்ணணும் தெரியுமா?
Don't Miss
- News
அந்த வீட்டுல என்னமோ நடக்குது.. ரெய்டில் காத்திருந்த ஷாக்.. வசமாக சிக்கிய அதிமுக மகளிரணி ‘புள்ளி’!
- Automobiles
டாடா வயிற்றில் புளியை கரைக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... அஞ்சு நாளில் இவ்ளோ பேர் புக்கிங் பண்ணீட்டாங்களா!
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Movies
பேயாட்டம் ஆடிய காஜல் அகர்வால்.. கருங்காப்பியம் டிரைலர்.. மிரண்டு போன விஜய்சேதுபதி!
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
மிதுனத்தில் செவ்வாய் வக்ரமாவதால் அடுத்த 12 நாட்கள் இந்த ராசிக்காரங்க நிறைய பிரச்சனையை சந்திப்பாங்க...
ஜோதிடத்தில் கிரகங்களில் ஏற்படும் மாற்றங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் கிரகங்கள் மனித வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் அக்டோபர் 30 ஆம் தேதி மிதுன ராசியில் வக்ர நிலையில் பயணிக்க தொடங்கியுள்ளார். இந்த வக்ர நிலையில் செவ்வாய் நவம்பர் 13 வரை இருந்து, பின் வக்ர நிலையில் ரிஷப ராசியை அடைவார்.
செவ்வாய் வக்ரமாகும் போது, மனதில் எரிச்சலும் கோபமும் அதிகரிக்கும். மேலும் தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது செவ்வாய் மிதுன ராசியில் வக்ரமாவதால் எந்த ராசிக்காரர்கள் அதிக பிரச்சனையை சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
செவ்வாய் வக்ரமானதால் மேஷ ராசிக்காரர்கள் அசுப பலன்களை அதிகம் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்கள் அதிக கோபமாக நடந்து கொள்வார்கள். இதன் விளைவாக மற்றவர்களுடன் அதிக வாக்குவாதத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்கள் இக்காலத்தில் நிறைய சவால்களை சந்திக்க நேரிடும். மன அழுத்தம் அதிகமாக இருக்கும். பணம் சம்பாதிக்கும் முயற்சிகளில் தோல்வி அடைவீர்கள்.

மிதுனம்
மிதுன ராசியில் செவ்வாய் வக்ரமாக இருப்பதால் இந்த ராசிக்காரர்கள் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படும். வாகனம் ஓட்டும் போது கவனமாக ஓட்டுங்கள். வேலையில் அதிக கவனம் செலுத்துங்கள். இல்லாவிட்டால் தவறுகளை செய்து பெரிய பிரச்சனையில் சிக்குவீர்கள். இக்காலத்தில் கோபத்தையும், ஈகோவையும் தவிர்த்தடுங்கள். இல்லையெனில் திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். இக்காலத்தில் நிதி தொடர்பான எந்த முடிவையும் எடுக்காதீர்கள்.

துலாம்
செவ்வாய் வக்ரமாக இருப்பதால் துலாம் ராசிக்காரர்களுக்கு தங்கள் தந்தையுடனான உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தந்தையுடன் பேசும் போது சற்று கவனமாக இருங்கள். தொழில் ரீதியாக, உயர் அதிகாரிகளை திருப்திப்படுத்த முடியாமல் போகலாம். உங்கள் வேலையில் சில தடைகள் ஏற்படலாம். கடினமான சூழ்நிலைகளை கண்டு அஞ்சாமல், தைரியமாக எதிர்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

விருச்சிகம்
செவ்வாய் வக்ரமாக இருப்பதால் விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்களின் பணிகளை முடிப்பதில் சிரமங்களை சந்திப்பீர்கள். காதலிப்பவர்கள் தங்கள் காதலில் பிரச்சனைகளை சந்திப்பார்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

மீனம்
மீன ராசிக்காரர்கள் செவ்வாயின் வக்ர நிலையால் தங்கள் ஆரோக்கியத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. செவ்வாய் வக்ரமாக இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளை சந்திக்கலாம். இக்காலத்தில் சொத்து வாங்குவது நல்லதல்ல. மொத்தத்தில் இக்காலத்தில் சாதகமற்ற காலமாக இருக்கும் என்பதால் எந்த ஒரு புதிய விஷயத்தையும் இக்காலத்தில் தொடங்காதீர்கள்.