Just In
- 2 hrs ago
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- 5 hrs ago
Today Rasi Palan 01 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் முக்கிய வேலை பாதியில் தடைபடலாம்...
- 13 hrs ago
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- 13 hrs ago
பாதாம் எண்ணெயை உங்க தலை முடியில இப்படி யூஸ் பண்ணா... கிடுகிடுன்னு முடி வளர்ந்து பளபளன்னு மின்னுமாம்!
Don't Miss
- Movies
தளபதி 67 பட ஷூட்டிங்கிற்கு தனி ஹெலிகாப்டரில் சென்றாரா கமல்? டிரெண்டாகும் புகைப்படம்.. உண்மை என்ன?
- News
கடுமையான போட்டி.. அதிமுக வேட்பாளர் அறிவிப்பதற்கு தாமதமாக காரணம் இதுதான்.. எஸ்பி வேலுமணி பேச்சு!
- Finance
நம்பிக்கையுடன் முதலீட்டாளர்கள்..பட்ஜெட்டுக்கு முன்பு 400 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Technology
ஏலியன் இருக்கா? AI ரோபோட் கண்டறிந்த 8 சிக்னல்.! வாய் பிளந்த விஞ்ஞானிகள்.! டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்.!
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Mangal Vakri 2022: மிதுனத்தில் வக்ரமாகும் செவ்வாயால் யாரெல்லாம் ஜாக்கிரதையா இருக்கணும் தெரியுமா?
ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதி செவ்வாய் ஆவார். இந்த செவ்வாய் தைரியம், வலிமை, திருமண வாழ்க்கை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் நல்ல நிலையில் இருந்தால், அவர் தைரியமாகவும், மனக்கிளர்ச்சியுடனும், நேராகவும் இருப்பார்கள். இத்தகைய செவ்வாய் 2022 அக்டோபர் 16 முதல் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2022 அக்டோபர் 30 ஆம் தேதி செவ்வாய் மிதுன ராசியில் வக்ரமாகி பயணிக்கவுள்ளார். இந்த வக்ர நிலையில் நவம்பர் 13 ஆம் தேதி ரிஷப ராசியை அடைவார்.
ஜோதிடத்தில் கிரகங்கள் வக்ர நிலை முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. வக்ர நிலை என்பது பின்னோக்கி செல்லும் நிலை ஆகும். செவ்வாய் வக்ரமாகும் போது, எரிச்சல், கோபம், விரக்தி மற்றும் பொறுமையின்மை போன்ற உணர்வுகள் அதிகம் எழும். இப்போது செவ்வாய் மிதுன ராசியில் வக்ரமாகும் போது 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 3 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ரமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பேசும் போது மிகவும் ஆக்ரோஷமாக இருப்பீர்கள். சண்டைகளில் ஈடுபடுவீர்கள். உங்களின் ஆற்றலைக் கட்டுப்படுத்தாவிட்டால், சிக்கலில் சிக்கலாம். மற்றவர்களின் சச்சரவுகளில் ஈடுபடுவதைத் தவிர்த்திடுங்கள். தொழிலதிபர்கள் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பணிபுரிபவர்களுக்கு வேலை அழுத்தமானது மன உளைச்சலை ஏற்படுத்தும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ரமாகிறார். இதனால் உங்களின் தகவல் தொடர்வு மோசமாக இருக்கும் மற்றும் இது மற்றவர்களால் முரட்டுத்தனமாக கருதப்படும். இதன் விளைவாக குடும்பத்தினர்களுடன் சண்டைகள் வரலாம். குடும்ப சொத்துக்களைப் பெற நினைத்தால், இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவது அல்லது கசப்பாகப் பேசுவது போன்றவை உங்கள் காதல் உறவைப் பாதிக்கலாம். பயணங்கள் உங்கள் செலவுகளை அதிகரிக்கும். எம்என்சி அல்லது வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் குறிப்பாக பயனடைவார்கள்.

மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் வக்ரமாகிறார். இதனால் உங்கள் வாழ்க்கை பாதிக்கப்படும். ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருங்கள். இக்காலத்தில் உங்கள் கோபத்தையும், ஈகோவையும் கட்டுக்குள் வைத்திருங்கள். இல்லாவிட்டால், அது நண்பர்கள் மற்றும் உறவுகளுக்குள் பெரிய சண்டைகளை உருவாக்கிவிடும். உங்கள் வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தால், அதை சற்று ஒத்திவையுங்கள். வீடு, வாகனம் வாங்குவதற்கு இக்காலம் ஏற்றது அல்ல.

கடகம்
கடக ராசியின் 12 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ரமாகிறார். இதனால் எம்என்சி மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் அல்லது ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் உள்ளவர்களுக்கு சிறந்த காலம். உங்களின் செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் பல வாய்ப்புக்களால் நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். வீடு அல்லது வாகனம் வாங்க திட்டமிட்டால், அதில் வெற்றி கிடைக்கும். தைரியமும், வீரமும் அதிகரிக்கும். ஆனால் அதித நம்பிக்கையை வளரவிடாதீர்கள். இல்லாவிட்டால் பிரச்சனையை சந்திப்பீர்கள். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதை புறக்கணிக்காமல் மனதார ஏற்றுக் கொள்ளுங்கள்.

கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ரமாகிறார். இதனால் வேலையில் உங்கள் அர்ப்பணிப்பு அதிகரிக்கும். வேலையில் முன்னேற்றத்தைக் காண அதிக முயற்சியை எடுக்க வேண்டும். உங்கள் தாயின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் அவருடன் நல்ல உறவை பேண முயற்சி செய்யுங்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அதற்கு சரியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ரமாகிறார். இதனால் சில கருத்து வேறுபாடுகளை சந்திப்பீர்கள். தந்தையுடன் மோதல்களை சந்திக்கலாம். திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகும் வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பயணங்களை மேற்கொள்ள திட்டமிடுவீர்கள். இதனால் உங்கள் செலவுகள் அதிகரிக்கும். ஆனால் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். உங்களின் பணிகளில் தடைகளை சந்திக்க நேரிடும். ஒவ்வொரு சவாலையும் நேருக்கு நேர் எதிர்கொள்ளுங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 8 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. சிறு உடல்நல பிரச்சனையென்றாலும் மருத்துவரை அணுகுங்கள். காதல் தொடர்பான பிரச்சனையை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படும். விரும்பிய காரியங்களை முடிப்பதில் தாமதம் ஏற்படலாம். மொத்தத்தில் பிரச்சனை நிறைந்த காலமாக இருக்கும்.

தனுசு
தனுசு ராசியின் 7 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் நீங்கள் ஆக்ரோஷமானவராகவும், தேலாதிக்கம் மிக்கவராகவும் இருப்பீர்கள். இதன் விளைவாக தேவையற்ற ஈகோ மோதல்கள் மற்றும் வாக்குவாதங்கள் ஏற்படலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடனும் பிரச்சனைகளை சந்திக்கலாம். ஆனால் தொழில் ரீதியாக வேலைகளில் வெற்றி பெறுவீர்கள்.

மகரம்
மகர ராசியின் 6 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் எந்த காரியத்திலும் நீங்கள் முழு முயற்சியை எடுத்தால், உங்களுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் சில ஆரோக்கிய பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம். இதனால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும் என்பதால் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.

கும்பம்
கும்ப ராசியின் 5 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ரமாகிறார். இதனால் மாணவர்கள் படிப்பில் சற்று கவனக்குறைவாக இருக்கலாம். பெற்றோராக இருந்தால், உங்கள் குழந்தைகளைப் பற்றிய கவலை அதிகரிக்கும். திருமணமானவர்கள், தங்கள் துணையுடன் சண்டைகளைப் போடலாம். இக்காலத்தில் நீங்கள் பேசும் போது பயன்படுத்தும் வார்த்தைகளை பார்த்து பேசுங்கள்.

மீனம்
மீன ராசியின் 4 ஆவது வீட்டில் செவ்வாய் வக்ரமாகிறார். எனவே இக்காலத்தில் உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மேலும் உங்களுக்கும் உங்கள் தாயாருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பணியிடத்தில் சூழல் சாதகமற்றதாக இருக்கும். சொத்து தொடர்பான எந்த ஒரு முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும், அதை சிறிது காலம் ஒத்தியுங்கள். வீட்டு சூழல் அமைதியற்று இருக்கும்.