For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறக்கப்படுவது ஏன் தெரியுமா?

மகாவிஷ்ணுவினால் வதம் செய்யப்பட்ட மது-கைடபர் முனிவர்கள் தங்களுக்கு கிடைத்த வைகுண்டப்பேறு உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்பினர்.

|

மஹா விஷ்ணுவால் வதம் செய்யப்பட்ட மது-கைடபர் முனிவர்கள் தங்களுக்கு கிடைத்த வைகுண்டப்பேறு உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்பினர். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டே மஹாவிஷ்ணு, மார்கழி மாதத்தில் வளர்பிறை ஏகாதசி நாளில் சொர்க்க வாசலைத் திறந்து அனைவருக்கும் மோட்சத்திற்கு வழிகாட்டுவதாக கருதப்படுகிறது.

MOST READ: இந்த 4 ராசிக்காரரை தான் சனிபகவான் படாதபாடு படுத்துவாராம்.. உங்க ராசியும் அதுல இருக்கா?

திருப்பார்கடலில் பள்ளிகொண்டிருக்கும் மஹா விஷ்ணுவுக்கு பூலோகத்தில் நாள்தோறும் திருநாள் தான். அதிலும் மார்கழி மாதம் என்றாலே கொண்டாட்டம் தான். காரணம், மார்கழி மாதம் தான் தேவர்களுக்கு அதிகாலைப் பொழுது. மஹாவிஷ்ணு அந்த நேரத்தில் தான் சயன கோலத்தில் இருந்து விழித்தெழும் நேரம். அதனால் தான் மாதங்களில் நான் மார்கழி என்று பகவத் கீதையில் சொல்லியுள்ளார்.

MOST READ: பலநூறு ஆண்டுகளாக சீனாவில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க இத தான் சாப்பிடுவாங்களாம்..

மஹா விஷ்ணுவுக்கு பிடித்தமான மார்கழி மாதத்தில் தான் நாடு முழுவதும் உள்ள வைணவ கோவில்களில், வைகுண்ட ஏகாதசி திருவிழாவும், பக்தர்களுக்கு மோட்சத்தை அளிக்கும் பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வும் நடைபெறும். பரமபத வாசல் என்பது திருப்பாற்கடலில் ஸ்ரீமன் நாராயணன் வாசம் செய்யும் இடம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திருப்பாற்கடல், வைகுண்டம்

திருப்பாற்கடல், வைகுண்டம்

பன்னிரு ஆழ்வார்கள் குறிப்பிட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் திருப்பாற்கடல், வைகுண்டம் இரண்டையும் மனிதர்களால் தரிசிக்கவே முடியாது. ஒருவன் அளவுக்கு மீறிய புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே அவனால், வைகுண்டத்தையும், திருப்பாற்கடலையும் தரிசிக்க முடியும். ஆனால், ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீரங்கநாதரை தரிசித்தால், திருப்பாற்கடல், வைகுண்டம் என இரண்டு தலங்களையும் தரிசித்த புண்ணியம் நமக்கு கிடைக்கும்.

வைகுண்டத்திற்கு செல்லலாம்

வைகுண்டத்திற்கு செல்லலாம்

அதிலும் மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி நாளில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாக நுழைந்து ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்தால், நமக்கு நிச்சயம் வைகுண்டத்தில் வாசம் செய்வதற்கான பெரும்பாக்கியம் கிட்டும். அன்றைய நாளில் தன்னை தரிசனம் செய்யும் பக்தர்கள் அனைவரையுமே, மஹா விஷ்ணு தான் வாசம் செய்யும் வைகுண்டத்திற்கு அழைத்து செல்வார் என்பது ஐதீகம்.

மது-கைடபர் அசுரர்கள்

மது-கைடபர் அசுரர்கள்

அந்த பாக்கியத்தை நமக்கு பெற்றுத் தந்ததே இரண்டு அசுரர்கள் தான். ஸ்ரீமஹாவிஷ்ணுவால் வதம் செய்யப்பட்டதால், நேரடியாக வைகுண்டத்தில் வாசம் செய்யும் பாக்கியம் பெற்ற மது-கைடபர் என்ற இரு அசுரர்கள். அவர்கள் இருவரும் தங்களுக்கு கிட்டிய இந்த பரமபத பாக்கியம் பூலோக வாசிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று நல்லெண்ணம் கொண்டனர்.

பூலோக வைகுண்டம்

பூலோக வைகுண்டம்

எனவே, அவர்கள் திருமாலின் பாதங்களில் சரணடைந்து, பகவானே, எங்கள் இருவருக்கும் கிடைத்த வைகுண்ட வாசம், பூலோக வாசிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அதனால், மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி நாளில், தாங்கள் பூலோக சொர்க்கம் என போற்றப்படும் ஸ்ரீரங்கத்தில் வடக்கு வாசல் வழியாக உற்சவ மூர்த்தியாக தாங்கள் வெளிவரும்போது, தங்களைப் பின்தொடரும் பக்தர்களின் பாவங்கள் நீங்கி, அவர்கள் அனைவருக்கும் வைகுண்டத்தில் வாசம் செய்யும் பாக்கியத்தை அருளவேண்டும் என்று மனமுருகி வேண்டிக்கொண்டனர்.

அதன் பொருட்டே மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி நாளில் ஸ்ரீரங்கம் உள்பட அனைத்து வைணவ கோவில்களிலும் பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.

ஏகாதசி கொண்டாட்டம் ஏன்

ஏகாதசி கொண்டாட்டம் ஏன்

அது ஏன், ஏகாதசி நாளில் மட்டும் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. ஏகாதசி என்ற பெயர் எதனால் ஏற்பட்டது தெரியுமா? அதற்கும் ஒரு அசுரன் தான் காரணம். தேவர்கள், ரிஷிகள் மட்டுமல்லாது பூலோக வாசிகள் என அனைவரையும் துன்புறுத்தி தொந்தரவு செய்து வந்தான் முரன் என்னும் அசுரன். அவனுடைய அக்கிரமங்களை பொறுத்துக்கொள்ள முடியாத தேவர்கள், நேராக சிவபெருமானை சரணடைந்தார்கள்.

மஹாவிஷ்ணுவை சரணடையுங்கள்

மஹாவிஷ்ணுவை சரணடையுங்கள்

சிவபெருமானோ, என்னால் அந்த அசுரனை அழிக்க முடியாது என்று சொல்லி, மஹா விஷ்ணுவை சரணடைந்தால் அதற்கு வழி கிடைக்கும் என்று அறிவுறுத்தினார். அதன்படி தேவர்களும் ரிஷிகளும் மஹாவிஷ்ணுவை சரணடைந்து தங்களை காத்தருளும்படி வேண்டிக்கொண்டனர். திருமாலும், அவர்களைக் காப்பாற்ற முன்வந்து, முரனுடன் போரிட்டார்.

அசுரனை எரித்த பெண் சக்தி

அசுரனை எரித்த பெண் சக்தி

அந்த போரானது ஆயிரம் ஆண்டுகள் வரை நீடித்தது. இறுதியில் அசுரனுடன் போரிட்ட களைப்பில் பத்ரிகாஸ்ரமம் என்ற குகைக்கு சென்று சற்று ஓய்வெடுத்தார் திருமால். ஆனால், அங்கும் வந்து திருமாலை போருக்கு அழைத்தான். அப்போது, திருமாலின் சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. அந்த பெண் சக்தியை அசுரன் நெருங்கும் சமயத்தில், அந்த பெண் சக்தியிடம் இருந்து ஒரு பெரும் ஓலம் வெளிப்பட்டு அசுரனை எரித்து சாம்பலாக்கியது.

முதல் ஏகாதசி ஆரம்பம்

முதல் ஏகாதசி ஆரம்பம்

அப்போது சயனத்திலிருந்து விழித்தெழுந்த மஹாவிஷ்ணு, அந்த பெண்ணுக்கு ‘ஏகாதசி' என்று பெயரிட்டு, உன்னை வழிபடுபவர்களுக்கு வைகுண்ட பதவி அளிப்பேன், என்று வரம் அளித்தார். அந்த முதல் ஏகாதசி ஆரம்பமானது மார்கழி மாதத்தில் வளர்பிறை திதியில் வரும் ஏகாதசி நாளில் தான். அந்த நாளைத்தான் நாம் அனைவரும் வைகுண்ட ஏகாதசி என்று போற்றி கொண்டாடி வருகிறோம்.

பரமபத வாசல்

பரமபத வாசல்

அந்த நாளில் தான் ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் அலங்கார உடையணிந்து பரமபத வாசல் எனும் சொர்க்க வாசல் வழியாக ஊர்வலமாக வருகிறார். அவரோடு சேர்ந்து வைகுண்ட பாக்கியம் கிடைப்பதற்காகவே, இந்தியா மட்டுமல்லாது, உலகெங்குமிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து நம்பெருமாளோடு சேர்ந்து சொர்க்க வாசல் வழியாக வந்து தரிசிக்கின்றனர். வைணவ கோவில்களில் நடத்தப்படும் திருவிழாக்களிலேயே வைகுண்ட ஏகாதசி திருவிழா தான் மிகவும் உன்னதமான திருவிழாவாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Margazhi 2019: Why Sorga Vasal Opens on Vaikunta Ekadashi Day

The Giants who were slain by Mahavishnu wanted to make the Vaikuntam to all the people of the world. In order to fulfill their wishes, Mahavishnu is believed to open the Sorga Vasal on the eve of the Valarpirai Ekadashi eve of the month of Margazhi.
Story first published: Thursday, December 26, 2019, 13:44 [IST]
Desktop Bottom Promotion