Latest Updates
-
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்! -
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்னென்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
சூரிய பெயர்ச்சியால் ஜனவரி 14 முதல் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது..
2023 ஜனவரி மாத சூரிய பெயர்ச்சியானது நற்பலனை வாரி வழங்கப் போகிறது. இப்போது 2023 ஜனவரி 14 ஆம் தேதி சூரியன் மகர ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
Makar Sankranti 2023: நவகிரகங்களின் தலைவராக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் தலைமைத்துவம், தைரியம், வலிமை, ஆரோக்கியம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாதம் எடுத்துக் கொள்ளும். தற்போது சூரியன் தனுசு ராசியில் பயணித்து வருகிறார். இவர் 2023 ஜனவரி 14 ஆம் தேதி சனி ஆளும் மகர ராசிக்கு செல்கிறார். சூரியனின் ராசி மாற்றம் சங்கராந்தி என்று அழைக்கப்படும். இந்நிலையில் சூரியன் மகர ராசிக்கு செல்வதால், அது மகர சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது.

முக்கியமாக சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதம் பிறக்கிறது. அதுவும் சூரியன் மகர ராசிக்கு செல்லும் போது தான் தமிழ் மாதமான தை மாதம் பிறக்கிறது. என்ன தான் சூரியன் எதிரி ராசிக்கு சென்றாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சியானது நற்பலனை வாரி வழங்கப் போகிறது. இப்போது 2023 ஜனவரி 14 ஆம் தேதி சூரியன் மகர ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 9ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். இந்த நேரத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் தந்தையுடனான உறவும் மேம்படும். ஆன்மிக நடவடிக்கைகளில் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் தைரியமும் வலிமையும் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்
மிதுன ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் பணியிடத்தில் சூழ்நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் செயல்களை மற்றவர்கள் பாராட்டுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். நிதி விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். சில வேலைகளில் இருந்த டென்ஷன் விலகும். திருமண உறவு மேம்படும். உங்கள் காதல் வாழ்க்கையும் முன்பை விட சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில், நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இக்காலத்தில் பணம் உள்ள யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.

கடகம்
கடக ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். தொழில் ரீதியாக இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த சில தடைகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். திருமணமாகாதவர்கள் இந்த நேரத்தில் சிறந்த வாழ்க்கைத் துணையைப் பெறுவார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். உங்களின் முடிவெடுக்கும் திறன் அதிகரித்து, எதிர்காலத்தில் நற்பலனைத் தரும். ஆன்மீக விஷயங்களில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். கடின உழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் செய்யும் எந்த வேலையும் உங்களுக்கு வெற்றியைத் தரும். குடும்பத்தில் பெரியவர்களை மதிக்கவும். பரம்பரை சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். வணிகர்களுக்கு இது நல்ல காலமாக இருக்கும்.

மகரம்
மகர ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் மகர ராசிக்காரர்களுக்கு இக்காலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இக்காலத்தில் பழைய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரிகள் இக்காலத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது. இல்லாவிட்டால் ஏமாற்றமடைவீர்கள். இக்காலத்தில் உங்கள் துணையிடம் இருந்து நல்ல ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு இந்த நேரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
