For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சி தரும் சம்பவம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

காந்திஜி இந்திய விடுதலைக்கும், சமூக நீதியை வலியுறுத்தியும், சமய நல்லிணக்கதிற்கும், தீண்டாமைக்கு எதிராகவும், முழு மதுவிலக்கு கோரியும் 17 முறை, 139 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டார்.

|

இந்திய சுதந்திர போராட்டத்தின் மிக முக்கியமான தலைவர்களில் மகாத்மா காந்தியும் ஒருவர். இவர் தலைமையில்தான் இந்தியாவின் சுதந்திர விடுதலை போராட்டம் நடைபெற்றது. ஆதலால், தான் இவரை நம் தேசத்தந்தை என்று அழைக்கிறோம். அகிம்சை வழியில் அறத்துடன் இவர் முன்னெடுத்த போராட்டம் உலகளவில் கவனம் பெற்றது. நம்மை எதிர்ப்பவர்களை சண்டையிட்டு வெல்லாமல் அகிம்சையின் மூலமும் வெல்லலாம் என்பதனை நிரூபித்து காட்டியவர் காந்தி. இவரது போராட்டக்குணம் நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய வியக்கத்தக்க ஒன்று. இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.

Mahatma Gandhi Biography in Tamil: Know Gandhiji Life History, Quotes, Slogans, Family Tree Details in Tamil

சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது. இது அரசு விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைய முக்கிய காரணமாக இருந்த மகாத்மா காந்தியின் வாழ்க்கை தொகுப்பினை இந்த கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறப்பு

பிறப்பு

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 2 அக்டோபர் 1869 அன்று இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தாய் மொழி குஜராத்தி. மகாத்மா காந்தியின் தந்தையின் பெயர் கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி, தாயார் பெயர் புத்லிபாய் ஆகும். காந்தி, அவரது வீட்டில் இறுதியாகப் பிறந்த குழந்தை. அவருக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருந்தனர்.

திருமண வாழ்க்கை

திருமண வாழ்க்கை

ராஜ்கோட்டில் தனது 13ஆவது வயதில் மேல்நிலை கல்வி பயின்றபோது, தம் வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார் காந்தி. பின்னாளில் இருவரும் நான்கு ஆண் மகன்களைப் பெற்றெடுத்தனர். மோகனதாஸ் கரம்சந்த் காந்தி, தனது 16வது வயதில் தந்தையை இழந்தார்.

பாரிஸ்டர் பட்டம்

பாரிஸ்டர் பட்டம்

தனது 18ஆம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பாரிஸ்டர் (barrister) எனப்படும் வழக்குரைஞர் படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து சென்றார். தன் படிப்பை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிய காந்தி மும்பை உயர் நீதிமன்றத்தில் சிறிது காலம் வழக்குரைஞராக பணியாற்றினார்.

கறுப்பின மக்களுக்காக போராடினார்

கறுப்பின மக்களுக்காக போராடினார்

1893ஆம் ஆண்டு, இந்தியாவில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு சென்றார் காந்தி. தென்னாப்பிரிக்காவில் நிறவெறியால் கருப்பின மக்கள் ஒடுக்கப்பட்டு அவர்களது உரிமைகள் அனைத்துமே பறிக்கப்பட்டன. அப்போது காந்தியடிகள் கருப்பின மக்களுக்கு ஆதரவாக அவர்களுடைய உரிமைகளைப் பெற்றுத் தருவதற்காக போராடினார். பிறகு 1915ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிலிருந்து மீண்டும் இந்தியா திரும்பினார் மகாத்மா காந்தி. தென்னாப்பிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்க உதவியது.

இந்திய காங்கிரஸ் கட்சி

இந்திய காங்கிரஸ் கட்சி

தென்னாப்ப்ரிக்காவில் கறுப்பின மக்கள் சந்திக்கும் இன்னல்களும், அங்கு குடியேறிய இந்திய மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, 1894 ஆம் ஆண்டு இந்திய காங்கிரஸ் என்ற கட்சியினை தொடங்கி, அதற்கு அவரே பொறுப்பாளரானார். பிறகு 1906 ஆம் ஆண்டு முதல்முறையாக ஜோகர்ன்ஸ்பர்க் என்ற இடத்தில், அகிம்சை வழியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு, கைது செய்யப்பட்டு பலமுறை சிறை சென்றார். இவ்வாறு அகிம்சை வழியில் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய மக்களின் பிரச்சனையில் வெற்றிக் கண்ட மகாத்மா காந்தி, இந்தியா திரும்பியதும், கோபாலகிருஷ்ண கோகலே மற்றும் ரவீந்திரநாத் தாகூர் போன்ற பெரும் அரசியல் தலைவர்களின் நட்பு ஏற்பட காரணமாக அமைந்தது.

இந்திய சுதந்திர போராட்டத்தில் காந்தியின் பங்கு

இந்திய சுதந்திர போராட்டத்தில் காந்தியின் பங்கு

நம் இந்திய நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருந்த வெள்ளையர்களை வெளியேற்றுவதற்காக காந்தி அகிம்சை வழியில் தொடர்ந்து போராடினார். 1924ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியர்களை ஒன்றிணைத்து அவர் நடத்திய அறவழிப் போராட்டங்கள் ஆங்கிலேயரை அதிர செய்தன. 'உப்பு சத்தியாகிரகம்', 'வெள்ளையனே வெளியேறு', ஒத்துழையாமை இயக்கம்', ஆங்கிலேய அரசுக்கு வரி கொடுப்பதை நிறுத்தி 'வரிகொடா இயக்கம்', கள்ளுக்கடை மறியல், வெளிநாட்டுப் பொருள் புறக்கணித்து சுதேசி பொருட்களையே பயன்படுத்துதல், தனிநபர் அறப்போர், உண்ணா விரதம் போன்ற அறவழி போராட்டங்களை ஆங்கிலேய அரசுக்கு எதிராக காந்தியடிகள் நடத்தினார். "வெள்ளையனே வெளியேறு" என்ற முழக்கத்துடன் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியர்களை ஒன்றிணைத்து அறவழியில் புரட்சி செய்து நம் இந்திய நாட்டிற்கு 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்று தந்தார் நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி.

காந்தியின் உண்ணாவிரத போராட்டம்

காந்தியின் உண்ணாவிரத போராட்டம்

காந்திஜி இந்திய விடுதலைக்கும், சமூக நீதியை வலியுறுத்தியும், சமய நல்லிணக்கதிற்கும், தீண்டாமைக்கு எதிராகவும், முழு மதுவிலக்கு கோரியும் 17 முறை, 139 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டார். அவற்றில் மூன்று முறை 21 நாட்கள் கொண்ட தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தினார்.

காந்தியின் உயர்ந்த பண்புகள்

காந்தியின் உயர்ந்த பண்புகள்

அகிம்சை, எளிமை, ஏழைகளின் மீது அன்பு செலுத்துதல், தீண்டாமை ஒழிப்பு, தன்னல மறுப்பு, எதிரியையும் மன்னிக்கும் பரந்த உள்ளம் ஆகியவை காந்தியடிகளின் உயர்ந்த பண்புகளாக இருந்தன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சுதேசிப் பொருட்களின் மீது அதிகப் பற்று கொண்டவராக மகாத்மா காந்தி திகழ்ந்தார். இதனால், அவர் தேசத் தந்தையாக போற்றப்படுகிறார். காந்திக்கு மகாத்மா என்னும் கௌரவத்தை வழங்கியவர் இரவீந்திரநாத் தாகூர் ஆவார்.

காந்தியின் மறைவு

காந்தியின் மறைவு

மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு, ஜனவரி 30 ஆம் நாள் மாலை, தன் வாழ்நாளில் இறுதியாக 144 நாட்கள் தங்கியிருந்த டில்லி பிர்லா மாளிகை (காந்தி சமிதி) தோட்டத்தில் நாதுராம் கோட்ஸேவால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மகாத்மா காந்தி மறைந்த நாளான ஜனவரி 30 அன்று, இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவாக, தியாகிகள் தினம் கொண்டாடப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mahatma Gandhi Biography in Tamil: Know Gandhiji Life History, Quotes, Slogans, Family Tree Details in Tamil

Here in this article we are discussing about Mahatma Gandhi life history, quotes, slogans, family tree details in tamil.
Story first published: Friday, October 1, 2021, 17:03 [IST]
Desktop Bottom Promotion