For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகாளய அமாவாசை 2019: புரட்டாசி சனிக்கிழமை வரும் மகாளய அமாவாசையால் என்ன பலன்?

மகாளயா அமாவாசை வரும் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. இது முன்னோர்களுக்கு நாம் பித்ரு காரியங்களை செய்வதற்கான முக்கியமான அமாவாசை. 20 ஆண்டுகளுக்குப் பிறகு மகாளய அமாவாசை சனிக்கிழமை வருகிறது.

|

முன்னோர்களுக்கு திதி கொடுக்க ஆடி,தை, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை சிறப்பானது. அதுவும் இந்த ஆண்டு சனிக்கிழமை வரப்போகும் மகாளய அமாவாசை சிறப்பானது. 20 வருடங்களுக்குப் பிறகு புரட்டாசி சனிக்கிழமை அன்று மகாளய அமாவாசை வருகிறது.

இந்த ஆண்டு மகாளய அமாவாசை புரட்டாசி 11ஆம் தேதி செப்டம்பர் 28ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை 3.08 மணிக்கு உத்திரம் நட்சத்திரம் கூடிய நாளில் மகாளய அமாவாசை தொடங்குகிறது. கடந்த 1999ஆம் ஆண்டு சனிக்கிழமை அக்டோபர் 9ஆம் தேதி புரட்டாசி 22ஆம் தேதி ஹஸ்தம் நட்சத்திரம் கூடிய தினத்தில் மகாளய அமாவாசை வந்தது. இந்த அரிய நிகழ்வு 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது.

Mahalaya Amavasya

இந்த மகாளய அமாவாசையில் கோவில்களுக்கு சென்று வழிபடுவதோடு பித்ரு தோஷம் நீங்க திதி தர்ப்பணம் கொடுங்க. முக்கியமாக தானம் செய்யுங்கள். துர்மரணம் அடைந்தவர்களுக்கு கண்டிப்பாக திதி கொடுப்பது அவசியம். இந்த மகாளய அமாவாசையில் இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது நல்லது தோஷங்கள் இருந்தாலும் தீரும்.

சனிபகவானுக்கும் நம்முடைய கர்மாவிற்கும் தொடர்பு உள்ளது. சனி முன்னோர்கள். குல தெய்வத்தை சுட்டிக்காட்டும் சனிக்கிழமை திதி கொடுப்பது நன்மை தரும். குல தெய்வ வழிபாடு சிறப்பு. அதேபோல வயதானவர்கள் மோட்சத்தை நோக்கி செல்ல மந்திர உச்சாடனம் செய்யலாம். பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும். இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதோடு நிறைய தானங்களை தரலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முன்னோர்களுக்கு தர்ப்பணம்

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை நாம் மறக்கக்கூடாது அவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அமாவாசை, புண்ய கால தர்பணம், வருஷ ஸ்ரார்தம், மஹாளய பட்சம் ஆகிய 96 நாட்கள் தர்பணம் செய்ய வேண்டும் என சாஸ்திரம் பரிந்துரைக்கிறது. இன்று வேலை மற்றும் தொழில், வாழும் சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த 96 நாட்களும் தர்பணம் செய்வது அனைவருக்கும் இயலாத காரியமாகும் என்றாலும் முக்கியமான தர்பணங்களையாவது தவறாமல் செய்வது நல்லது, அந்த வகையில் தக்ஷிணாயனத்தில் வரும் ஆடி அமாவாசையும் மகாளய அமாவாசையும் முக்கியமான ஒன்றாகும். அதேபோல உத்தராயணத்தில் தை அமாவாசையும் முக்கியமானது.

மகாளய பட்ச காலங்கள்

மகாளய பட்ச காலங்கள்

மகாளய பட்ச காலத்தில் நம்முடன் இருக்கும் முன்னோர்களை நாம் சிரத்தையோடு வழிபாடு செய்து தர்ப்பணம் கொடுப்பதால் பித்ரு தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறலாம். பித்ரு கடன் செய்வதனால் அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். பித்ரு கடன் செய்யாது இருந்தால் பித்ரு தேவதைகள் சபித்து விடுவார்கள் என்பதும் காலம் காலமாக இந்துக்களின் நம்பிக்கை. அமாவாசை அன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்துருக்கள் வந்து நின்று கொண்டு காத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரவேண்டும். இதனால் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசீர்வதிப்பர். இவ்வாறு செய்யாவிட்டால் பித்ருக்கள் வருத்தப்படும்போது அது பித்ரு தோஷமாக சந்ததியரின் ஜாதகத்தில் அமைகிறது.

தோஷங்களால் பாதிப்பு

தோஷங்களால் பாதிப்பு

குடும்பத்தில் இயற்கையாக மரணித்தவர்கள் தவிர கொலை, தற்கொலை, விபத்து மற்றும் அகால மரணங்கள் மூலம் உயிர் நீத்தவர்களுக்கு முறையான கர்மகாரியங்களை செய்வது அவசியம். அப்படி செய்வதன் மூலம் அந்த ஆத்மாக்கள் பித்ருலோகத்தை அடையும். அவ்வாறு செய்யாமல் விடுவதன் மூலம் பலவித தோஷங்கள் ஏற்படுகின்றன. அவை ஜாதகக் கட்டங்களில் அமர்கின்றன.

நோய்கள் பாதிப்பு

நோய்கள் பாதிப்பு

இதனால் நமக்கு மட்டுமல்லாது நமது சந்ததியினருக்கும் திருமண தடை, குழந்தையின்மை ஏற்படும். வேலையில்லாத நிலையும், எதற்கெடுத்தாலும் பிரச்சினை, தீராத நோய்கள், கடன் பிரச்சினை என வாட்டி வதைக்கும். இதனால் கோபம், மனஉளைச்சல், நிம்மதியற்ற வாழ்க்கையால் சிலருக்கு தற்கொலை சிந்தனை ஏற்படும்.

எள் கலந்த நீர்

எள் கலந்த நீர்

நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ்மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ்வருடமும் அதே திதியன்று அக்னிக்கும் பிராமணர்களுக்கும் ஒரே நேரத்தில் போஜனமளித்து பின் பிண்ட ரூபத்தில் இருக்கும் பித்ருக்கு எள் கலந்த நீர் அளித்து தர்பணம் செய்வதே சிரார்த்தமாகும். இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன.

எள் விஷ்ணுவின் அம்சம்

எள் விஷ்ணுவின் அம்சம்

சூரியனை ஆத்ம காரகன் எனவும் குருவை ஜீவ காரகன் எனவும் ஜோதிடம் போற்றுகிறது. ஆனால் இந்த உடலுக்கு சனைஸ்வரன் எனும் சனி பகவானையே காரகனாக கூறுகிறது. எனவே சனீஸ்வர பகவானின் தானியமான எள்ளை பித்ரு ஸ்ரார்த கர்மங்களுக்கும் வாகனமான காகத்தை பித்ரு ரூபமாகவும் பார்க்கிறது நமது வேதங்கள். எள்ளை மகாவிஷ்ணுவின் வியர்வையிலிருந்து தோன்றியதாக இதிகாசங்கள் கூறுகின்றன. எனவே அதனை பித்ருக்களுக்கான கர்மங்களுக்கு பயன்படுத்த பரிந்துரைக்கிறது நமது வேதம்.

ஏழைகளுக்கு தானம்

ஏழைகளுக்கு தானம்

புனிதமான மகாளய அமாவாசையன்று, முன்னோரையும் மறைந்த தாய், தந்தையரையும் நினைத்து திதிகொடுப்பது. புண்ணிய நதிகள், கடல் போன்ற இடங்களில் புனித நீராடி இஷ்டதெய்வ ஆலயங்களில் வழிபாடு, சிறப்பு பூஜைகள் செய்வது, ஏழைகள், இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்வது நாம் செய்த பாவங்கள், கர்மவினைகள், தீவினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கும் என்பது நம்பிக்கை. சிலர் தண்ணீர் கூட தானமாக தரலாம். ரொம்ப முக்கியமானது அன்னதானம்தான். நம் முன்னோர்களை மகிழ்விக்கும்.

எங்கு தர்ப்பணம் செய்யலாம்

எங்கு தர்ப்பணம் செய்யலாம்

ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள் இராமேஸ்வரம், திருப்புல்லானி மற்றும் கயா அக்ஷயவடம் போன்ற இடங்களில் தில ஹோமம் செய்வது தர்ப்பணம் செய்வது பித்ரு தோஷத்தை போக்கும் என்கிறது சாஸ்திரம். திருச்சி காவிரிக்கரையில் உள்ள அம்மா மண்டபம். வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள புஷ்பவனேஸ்வரர் - செளந்தர நாயகியம்மன் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த சிவத்தலமாகும். பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற 14 தலங்களில் திருப்புவனமும் ஒன்று. அக்காலத்தில் புகழ்பெற்ற சுச்சோதி மன்னன் முன்னோர்களுக்கு திதி கொடுக்க திருப்புவனம் வந்து வைகையாற்றங்கரையில் வேண்டுதல் செய்துள்ளார்.

 பித்ரு தர்ப்பண ஸ்தலங்கள்

பித்ரு தர்ப்பண ஸ்தலங்கள்

இந்தியாவில் பித்ரு ஸ்தலங்கள் 7 உள்ளன. அவை, காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, ஏழாவதாக திலதர்ப்பணபுரி. பித்ரு ஸ்தலங்களில் ஒன்றாக இந்த திலதர்ப்பணபுரி விளங்குகிறது. இராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்து பூஜைகளும் திலதர்ப்பணபுரியிலும் செய்யப் படுகின்றன இந்த திலதர்ப்பணபுரி திருக்கோயில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது. அங்கு சென்று தர்ப்பணம் கொடுப்பவர்களுக்கு பித்ரு தோஷங்கள் நீங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

mahalaya amavasya 2019: shani amavasya on Mahalaya Amavasya

Mahalaya amavasya this year Shani Amavasya tithi which is falling on September 28 this year is considered to be very auspicious. The day is considered to be extremely good to worship Lord Shani. Here are ways you could get the grace of Lord Shani and our ansestors.
Story first published: Thursday, September 26, 2019, 15:45 [IST]
Desktop Bottom Promotion