For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Maghi Ganesh Jayanti 2021 : கணேஷ் ஜெயந்தி அன்று ஏன் சந்திரனைப் பார்க்கக்கூடாது தெரியுமா?

மகி கணேஷ் ஜெயந்தி என்று அழைக்கப்படும் விநாயகர் சதுர்த்தி, கோவா மற்றும் மகாராஷ்டிராவில் முழு ஆர்வத்துடனும், கோலாகலமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பக்தர்கள் விநாயகரை நினைத்து விரதம் இருந்து போற்றி வணங்குவார்கள்.

|

இந்து நாட்காட்டியின் படி, ஒவ்வொரு மாதமும் 4 ஆவது சுக்ல பக்ஷத்தில் விநாயகர் சதுர்த்தி அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் விநாயகருக்கான மிகவும் புனிதமான நாள் என்றும் அறியப்படுகிறது. சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் மகனும், முழுமுதற் கடவுளுமான விநாயகரின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் இது கொண்டாடப்படுகிறது.

Maghi Ganesha Jayanti 2021: Date, Time, Shubh Muhurat And Significance In Tamil

மகி கணேஷ் ஜெயந்தி என்று அழைக்கப்படும் விநாயகர் சதுர்த்தி, கோவா மற்றும் மகாராஷ்டிராவில் முழு ஆர்வத்துடனும், கோலாகலமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பக்தர்கள் விநாயகரை நினைத்து விரதம் இருந்து போற்றி வணங்குவார்கள். சிலர் பூஜை செய்தும், பிரசாதங்களை மற்றவர்களுக்குக் கொடுப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிப்ரவரி மாதத்தில் விநாயகர் சதுர்த்தி எப்போது?

பிப்ரவரி மாதத்தில் விநாயகர் சதுர்த்தி எப்போது?

2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் விநாயகர் சதுர்த்தியானது பிப்ரவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

கணேஷ் ஜெயந்தி பூஜைக்கான சுப முகூர்த்தம்

கணேஷ் ஜெயந்தி பூஜைக்கான சுப முகூர்த்தம்

பிப்ரவரி மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு பூஜை செய்ய உகந்த நேரம் காலை 11:28 முதல் மதியம் 1:43 வரை ஆகும். இந்த நாளில் விநாயகருக்கு பூஜை செய்வதற்கான நல்ல நேரம் 2 மணி நேரம் 14 நிமிடங்கள் வரை தான் இருக்கும்.

கணேஷ் ஜெயந்தியின் முக்கியத்துவம்

கணேஷ் ஜெயந்தியின் முக்கியத்துவம்

இந்து புராணங்களின் படி, கணேஷ் ஜெயந்தி அன்று பக்தர்கள் விரதம் இருந்தால், அவர்கள் வாழ்க்கையில் எதிலும் வெற்றி பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது. அதுவும் இந்நாளில் எதுவும் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்தால், வாழ்வில் சந்திக்கும் தடைகள் அனைத்தும் விலகும். இதனால் விநாயகரை விக்னஹர்த்தா என்றும் அழைக்கின்றனர். சதுர்த்தி நாளில் சந்திரனைப் பார்க்கக்கூடாது என்றும், அவ்வாறு பார்த்தால் தீங்கு விளையும் என்று கூறுவதுண்டு.

ஏன் சந்திரனைப் பார்க்கக்கூடாது?

ஏன் சந்திரனைப் பார்க்கக்கூடாது?

புராணத்தின் படி, ஒரு நாள் இரவு விநாயகர் தனது வாகனமான எலியின் மீது ஏறி தங்குமிடத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வானத்தில் சந்திரனைத் தவிர வேறு யாரும் இல்லை. விநாயகரின் எடையை சுமந்து கொண்டு எலி படிப்படியாக முன்னேறி செல்லும் போது, எலி ஒரு பாம்பைக் கண்டது. இதனால் பாம்பில் இருந்து தப்பிக்கும் முயற்சியில், எலி விநாயகரை தரையில் இறக்கிவிட்டது. விநாயகர் தனது பெரிய வயிற்றை நிர்வகிக்க முடியாமல் சிரமப்படுவதைக் கண்ட சந்திரன், விநாயகரைப் பார்த்து சிரித்து, விநாயகரின் தோற்றத்தைக் கேலி செய்தார். அதோடு தனது தோற்றத்தில் பெருமிதமும் கொண்டார்.

எனவே சந்திரனுக்கு ஒரு பாடம் கற்பிக்க நினைத்த விநாயகர், சந்திரனைப் பார்ப்பவர்கள் மித்யத தோஷத்தைப் பெறுவார்கள் என்று சாபமிட்டார். அதைத் தொடர்ந்து, விநாயகரின் கோபத்தை உணர்ந்த சந்திரன், விநாயகரிடம் மன்றாடி மன்னிக்கும் படி கேட்டுக் கொண்டார். சந்திரன் மனம் திருந்தியதைக் கண்ட விநாயகர், அவரை மன்னித்து சாபத்தை திரும்ப பெற முடியாது. இருப்பினும், அதன் தாக்கத்தைக் குறைக்க முடியும் என்று கூறினார். எனவே ஆணவம் ஒருவரின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதை நினைவூட்ட விநாயகர் சதுர்த்தி நாளில் சந்திரனை யாரும் பார்க்கக்கூடாது என்று கூறினார்.

கணேஷ் ஜெயந்தியை மக்கள் எவ்வாறு கொண்டாடுகிறார்கள்?

கணேஷ் ஜெயந்தியை மக்கள் எவ்வாறு கொண்டாடுகிறார்கள்?

* கணேஷ் ஜெயந்தி நாளில் சிலர் மஞ்சள் தூள் மற்றும் நீரால் விநாயகரைப் பிடித்து வைப்பார்கள்.

* எள்ளு விதைகளால் ஆன இனிப்புக்கள் மற்றும் பலகாரங்களை செய்து விநாயகருக்கு படைப்பார்கள்.

* மேலும் நாளில் சிவப்பு உடைகள், சிவப்பு மலர்கள் மற்றும் சிவப்பு நிற இனிப்புக்களை விநாயகருக்கு படைத்து வணங்குவார்கள்.

* விநாயகரை நினைத்து விரதம் இருப்பார்கள். மந்திரங்களை சொல்லி, விநாயகருக்கு பூஜை செய்வார்கள்.

* முக்கியமாக இரவில் சந்திரனைப் பார்ப்பதைத் தவிர்ப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Maghi Ganesh Jayanti 2021: Date, Time, Shubh Muhurat And Significance In Tamil

Maghi Ganesh Jayanti 2021: Date, Time, Shubh Muhurat And Significance In Tamil. Read on..
Desktop Bottom Promotion