Just In
- 1 hr ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி சிக்கல் தீர்க்கப்படும்...
- 11 hrs ago
ஒயிட் சாஸ் பாஸ்தா
- 12 hrs ago
உங்க ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் வைட்டமின் மாத்திரைகள 60% தள்ளுபடி விலையில் அமேசானில் வாங்கலாம்!
- 12 hrs ago
கிருஷ்ண ஜெயந்தி அன்று குழந்தைக்கு கிருஷ்ணர் வேடம் போடுவது எப்படி?
Don't Miss
- News
மக்களே உஷார்.. டிஜிபி சைலேந்திரபாபு பெயரில் போலி எஸ்எம்எஸ் .. ஏமாற வேண்டாம் என போலீஸ் எச்சரிக்கை
- Finance
அட இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. ரூபாயின் மதிப்பு மீண்டும் ஏற்றம்.. என்ன காரணம்?
- Movies
ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் நானியின் `ஷ்யாம் சிங்கா ராய்'!
- Sports
"தனிமையில் சிக்கி தவிக்கிறேன்".. விராட் கோலியின் உருக்கமான பேச்சு.. ரசிகர்கள் சோகம் - விவரம்!
- Technology
ஒன்றா, இரண்டா குறிப்பிடுவதற்கு? பட்ஜெட் விலையில் அறிமுகமான Noise ColorFit Ultra ஸ்மார்ட்வாட்ச்!
- Automobiles
இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு... உச்சகட்ட எதிர்பார்ப்பில் மஹிந்திரா ஸ்கார்பியோ ரசிகர்கள்! எதற்காக தெரியுமா?
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
சந்திர கிரகணம் பற்றி கூறப்படும் கட்டுக்கதைகள்... எத்தனை வருஷமா நமக்கு விபூதி அடிச்சிருக்காங்க பாருங்க!
சந்திர கிரகணம் இந்துக்களின் நாட்காட்டியிலும், பாரம்பரியத்திலும் முக்கியமான இடத்தைக் கொண்டுள்ளது. இந்த வருடம் 21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வருகிறது. ஒவ்வொரு முறை சந்திர கிரகணம் வரும்போதும் அதனுடன் பல கட்டுக்கதைகளும் கைகோர்த்து வருகிறது.
சந்திர கிரகணத்தின் போது கர்ப்பிணி பெண்கள் என்ன செய்ய வேண்டும், திருமணம் ஆகாதவர்கள் என்ன செய்ய வேண்டும், என்னவெல்லாம் செய்யக்கூடாது என்ன பெரிய பட்டியலே கூறப்படுகிறது. அப்படி காலம் காலமாக சந்திர கிரகணத்தை மையமாக வைத்து கூறப்படும் கட்டுக்கதைகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

வெறும் கண்ணால் சந்திர கிரகணத்தை பார்க்கக்கூடாது
சந்திர கிரகணத்தை நிர்வாணக் கண்களால் பார்ப்பது கண் ஆரோக்கியத்தையும் பார்வையையும் பாதிக்கும் என்று புராணம் கூறுகிறது.இது ஓரளவிற்கு உண்மைதான், இந்த நேரத்தில் கதிர்களின் தாக்கம் வலுவாக இருக்கலாம் ஆனால் அது நிச்சயமாக ஒருவரை குருடாக்க முடியாது. மேலும், கண்ணாடிகள், லென்ஸ்கள் போன்ற பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளன, இதன் உதவியுடன் அழகான கிரகணத்தை ஒருவர் தாராளமாக பார்க்கலாம்.

சந்திர கிரகணத்தின் போது கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது
சந்திர கிரகணத்தின் போது கர்ப்பிணி பெண்கள் வேலை எதுவும் செய்யக்கூடாது, குறிப்பாக வெளியே வரக்கூடாது என்று பல காலமாக கூறப்பட்டு வருகிறது. பொதுவாக கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் கடிமான வேலைகள் எதையும் செய்யக்கூடாது என்று கூறுவது உண்மைதான். ஆனால் சந்திர கிரகணம் அன்று செய்யக்கூடாது என்று கூறுவதற்கு பின் எந்த காரணமும் இல்லை. மேலும் கர்ப்பிணி பெண்கள் வெளியே சென்றால் அது குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம் மற்றும் கருச்சிதைவை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இது முழுக்க முழுக்க கட்டுக்கதையாகும் இதற்கு எந்த அறிவியல் நிரூபணமும் இல்லை.

சந்திர கிரகணத்தின் போது சாப்பிடக்கூடாது
கிரகணத்தின் போது எந்த ஒரு உணவுப் பொருளையும் சாப்பிடக்கூடாது என்று நமது தாத்தா பாட்டி மற்றும் பெற்றோர்கள் அறிவுறுத்துகிறார்கள். அந்த நேரத்தில் சாப்பிடுவதும் குடிப்பதும் அஜீரணத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், இந்த கட்டுக்கதைக்கு அறிவியல் சான்று இல்லை. உண்மையில், பல வீடுகளில், மக்கள் உணவை எறிந்துவிட்டு, கிரகணத்திற்குப் பிறகு மீண்டும் சமைக்கிறார்கள்.

சந்திர கிரகணம் முடிந்தவுடன் குளிப்பது
கிரகணத்திற்குப் பிறகு குளிப்பதும், தலைமுடியைக் கழுவுவதும் தங்கள் உடலில் இருந்து எதிர்மறை ஆற்றலின் தாக்கத்தைக் கழுவிவிடும் என்று பலர் நம்புகிறார்கள். இதனால், குளிப்பதும், வீட்டை கழுவுவதும் வழக்கம். எனினும், அதில் எதுவுமே உண்மை இல்லை. எதிர்மறை ஆற்றலின் தாக்கத்தை குளிப்பதால் நீக்கிவிட முடியாது. எனவே இது வெறும் கட்டுக்கதை.

சந்திர கிரகணத்தின் போது ஒரு காயம் ஆற அதிக நேரம் எடுக்கும்
கிரகணத்தின் போது உங்கள் உடலில் காயம் ஏற்பட்டால் அது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்றும் உண்மையில் இரத்தப்போக்கு நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்றும் சிலர் கட்டுக்கதைளை கூறிவருகிறார்கள். இருப்பினும், அறிவியலின் படி இது உண்மையல்ல. சந்திர கிரகணுக்கும் உங்களுக்கு இரத்தம் வருவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே இது வெறும் கட்டுக்கதை.

சூரியனும், சந்திரனும் சகோதரர்கள்
சந்திர கிரகணம் பற்றிய மூட நம்பிக்கைகள் இந்தியாவில் மட்டுமில்லை. தென் அமெரிக்காவின் சுரினாமைச் சேர்ந்த கலினா மக்கள், சூரியனும் சந்திரனும் சகோதரர்கள் என்று நம்பினர். மேலும் ஒரு கிரகணம் ஏற்பட்டால், அவர்களில் ஒருவருக்கொருவர் சண்டையிடுகிறார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.