Latest Updates
-
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜனவரி மாசம் அதிர்ஷ்டமான மாசம்... உங்க ராசி இதுல இருக்கா?
2022 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் உள்ளோம். ஜனவரி மாத கிரக இயக்கங்களால், சூரிய பகவானின் சிறப்பான அருள் கிடைத்து, ஒருசில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
2022 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் உள்ளோம். இந்த மாதத்தில் பல முக்கியமான கிரகங்கள் தங்களின் ராசியை மாற்ற போகின்றன. பொதுவாக கிரகங்களின் இயக்கம் மனித வாழ்க்கையை நேரடியாக பாதிக்கிறது. அந்த வகையில் ஜனவரி மாத கிரக இயக்கங்களால், சூரிய பகவானின் சிறப்பான அருள் கிடைத்து, ஒருசில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இப்போது 2022 ஜனவரி மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான மற்றும் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

ஜனவரி மாத கிரக மாற்றங்கள்
2022 ஜனவரி 14 ஆம் தேதி சூரிய பகவான் மதியம் 2.43 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்கிறார். 2022 பிப்ரவரி 13 ஆம் தேதி அதிகாலை 3.41 மணி வரை இந்த ராசியில் இருப்பார். ஜனவரி 14 ஆம் தேதி மாலை 5.10 மணிக்கு புதன் மகர ராசியில் பின்னோக்கி பயணிக்கிறார். பின் 2022 பிப்ரவரி 4 ஆம் தேதி புதன் கும்ப ராசிக்கு செல்கிறார். 2022 ஜனவரி 16 ஆம் தேதி மாலை 04.50 மணிக்கு செவ்வாய் தனுசு ராசிக்கு செல்கிறார். 2022 பிப்ரவரி 26 ஆம் தேதி மாலை 04.08 மணி வரை இந்த ராசியில் இருப்பார். செல்வம், செழிப்பு மற்றும் அனைத்து வகையான பொருள் வசதிகளையும் தரும் சுக்கிரன், 2022 ஜனவரி 29 ஆம் தேதி மதியம் 2.14 மணிக்கு தனுசு ராசியில் நேர்கதியில் பயணிக்கிறார்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாதத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். பணிச்சுமையும் அதிகரிக்கும். அதே வேளையில் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். இம்மாதத்தில் தந்தையின் ஆதரவு கிடைக்கும். வணகத்தில் லாபம் அதிகம் கிடைத்து, பணம் அதிகம் சேரும். நிதி நிலைமை வலுவாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மாணவர்களுக்கு சாதகமான காலம் இக்காலத்தில் புதிய தொழிலைத் தொடங்கினால், நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களின் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நிதி நிலைமை மேம்படும். உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும். வேலை மற்றும் வியாபாரத்திற்கு சாதகமான காலம். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். மாணவர்களுக்கு சாதகமான காலம். இக்காலத்தில் பல வழிகளில் இருந்து லாபத்தை பெறுவீர்கள்.

விருச்சிகம்
ஜனவரி மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்கள் அதிக தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான பாதை திறக்கும். உங்களின் நோக்கம் நிறைவேறும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். இதனால் நிதி பிரச்சனை எதுவும் இருக்காது. உங்கள் துணையுடன் நேரத்தை அதிகமாக செலவிட வாய்ப்புகள் கிடைக்கும். தாம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.மொத்தத்தில் இந்த மதம நல்ல பலன்கள் கிடைக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களின் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். இம்மாதத்தில் இதுவரை சந்தித்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். மனஅமைதி கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வருமானம் பெருகும். ஜனவரி மாதம் மீனத்தின் நிதி நிலைமை வலுவாக இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
